From jaybee@... Sat Jun 15 06:47:56 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 15 Jun 2002 13:47:56 -0000
Received: (qmail 84631 invoked from network); 15 Jun 2002 13:47:56 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 15 Jun 2002 13:47:56 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 15 Jun 2002 13:47:55 -0000
Received: from user (sp-103-46.tm.net.my [210.186.103.46]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXR00L0B1UNLO@...> for agathiyar@yahoogroups.com; Sat, 15 Jun 2002 21:37:38 +0800 (SGT)
Date: Sat, 15 Jun 2002 21:37:42 +0800
Subject: Re: [agathiyar] Savaalum saththiyamum#4 - Traditions#3
In-reply-to: <3.0.3.32.20020615204549.006e8a80@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020615213742.006d4624@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020614185649.006e9770@...>
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18655


சவாலும் சத்தியமும்#4

At 08:45 PM 6/15/02 +0800, you wrote:

சுப்: புண்ணியமெல்லாம் திரண்ட வடிவென்கோ; குருமுனிவன்
பொதிய நீத்திங்
கண்ணியதோர் வடிவென்கோ; தமிழிலுள பலகலைகள்
அனைத்தும் கூடி
நண்ணியதோர் வடிவென்கோ; பின்னு மெந்த வடிவமென
நாட்டுகோ யான்,
மண்ணியமா மணியனைய தியாகராசப் புலவன்
வடிவந் தானே!

தி.செ:(புன்னகை கொண்டு) இதனை இன்னும் ஒருமுறை சொல்லும்.

சுப்: நல்லது அப்படியே.(பாடலை மறுபடியும்சொன்னார்).
எப்படியாவது என் பாடலை உங்கள் காதில் போட்டு உங்கள்
நன்மதிப்பைப்பெற்று செல்லவேண்டும் என்றே இங்கு வந்தேன்.

தி.செ: இருக்கட்டும். இந்தப்பாடலை நீரே செய்தீரா? வேறு யாரேனும்
செய்துகொடுத்தார்களா? உமக்கு இப்படிப் பாடவருமா?

சுப்: ஏன் வராது? நானே செய்தேன்.

தி.செ: இதனை ஐயா அவர்கள் இயற்றிய பாடலென்று நிச்சயிக்கிறேன்.
எதற்காக இதை உம்மிடம் பாடிக்கொடுத்தார்கள்?

சுப்: நீங்கள் இப்படிச்சொல்வது எனக்கு மிகவும் மானக்குறைவாக
இருக்கிறது.

தி.செ: நீர் செய்ததுதானா? உண்மையைச்சொல்லும்.

சுப்: அதில் என்ன சந்தேகம்?

தி.செ: பொருள் சொல்வீரா?

சுப்: திவ்யமாகச் சொல்வேன்.

தி.செ: முழுவதற்கும் சொல்லவேண்டாம். இதிலுள்ள 'என்கோ' என்பதற்கு
மட்டும் பொருள் சொன்னால் போதும். சொல்லும் கேட்கிறேன்.

சுப்: அதற்கு 'என்பேனோ' என்பது பொருள்.

திசெ: 'என்கோ' என்னும் சொற்பிரயோகத்தை வேறு எந்த நூலில்
எந்த இடத்தில் கண்டிருக்கிறீர், சொல்லும்.

சுப்: இடம் ஞாபகமில்லை.

திசெ: இடம் தெரியாதபோது நீர் இந்தச் சொல்லை அறிந்தது எப்படி?
எனக்குச் சந்தேகமாகத்தான் இருக்கிறது.

சுப்: நீங்கள் செய்யும் செய்யுட்களில் பிரயோகிக்கிற சொற்கள் உள்ள
இடங்களெல்லாம் உங்களுக்கு ஞாபகத்தில்இருக்குமா?
பழக்கத்திலேயே வந்துவிடுமல்லவா?

திசெ: வீண் பேச்சை இப்பொழுது நீர் பேசவேண்டாம். இந்தப் பாடலை
அவர்கள் எதற்காகச் செய்து அனுப்பினார்கள்? சொல்லும்.

சுப்: திரும்பத்திரும்பச் சொல்கிறீர்களே! நான் தான் பாடி வந்தேன். வந்த
காரியத்தைக் கேட்டு முடித்து அனுப்பமுடியுமானால் அனுப்புங்கள்.
இல்லையானால் முடியாது என்று சொல்லிவிடுங்கள்.

திசெ: சரி. இதில் என்கோ என்பதில் ஓகாரத்தை ஏற்றமொழி எது.
ஓகாரம் என்ன பொருளில் வந்தது சொல்லும்.

சுப்: நீங்கள் பாடிய பாடல்களில் உள்ள சொற்களுக்கெல்லாம்
இலக்கணம் சொல்லுவீர்களா?

திசெ:வீணான தைரியப்பேச்சினால் ஒரு பயனுமில்லைங்காணும்.
இந்த செய்யுள் நீர் பாடியது அல்லவென்பதை நன்றாகத்
தெரிந்துகொண்டேன். நீர் என்ன சொன்னாலும் நம்பேன்.
இந்த மாதிரி பாடுகிறது என்றால் எவ்வளவோ படித்திருக்கவேண்டும்.

சுப்: படிக்காமலேயே கம்பன் காளிதாசன் முதலியோர் பாடவில்லையோ?

திசெ: அவர்கள் படிக்கவில்லை என்பதை நீர் கண்டீரா?

சுப்: வரகவி என்று இப்பொழுதும் இருப்பது தெரியாதா? அவர்களெல்லாம்
படித்துத்தானா பாடுகிறார்கள்? அருமையான வார்த்தைகளெல்லாம்
அவர்கள் வாக்கில் காணப்படவில்லையா?

திசெ: இவ்வளவு வார்த்தைகளும் நீர் படிக்கவில்லை என்பதை நன்றாகக்
காட்டுகின்றன. இருக்கட்டும். இந்தப்பாட்டை நீரே செய்ததாகச்
சத்தியம் செய்வீர்ரா?

சுப்: இதோ செய்கிறேன். எந்த மாதிரியாகச் செய்யவேண்டும்?

திசெ: துணியைப் போட்டு தாண்டவேண்டும். அதைச்செய்வீரா?

சுப்பையா பண்டாரம், "இதோ தாண்டுகிறேன்", என்று சொல்லி
தமது அங்கவஸ்திரத்தைக்கீழே குறுக்கே போட்டுவிட்டார். தியாகராசச்
செட்டியார் நடுநடுங்கி அவர் கையைப் பிடித்துக்கொண்டு,
"நீர் சத்தியம் செய்தாலும் இப்பாடலை நீர் செய்ததாக நினையேன்.
துணியைத் தாண்டவேண்டாம். நீர் வந்த காரியம் இன்னதென்று
சொல்லிவிடும். உமக்கு வேண்டியவற்றைக்கொடுக்கிறேன். வீணாக
ஏன் பொய் சொல்கிறீர்?" என்று நயமாகக் கெட்கவே, அவர்
நிகழ்ந்தவற்றையெலாம் உள்ளபடியே சொல்லிவிட்டார்.
செட்டியார் உடனே பழக்கடைக்குச் சென்று மிகவும்
உயர்ந்தனவாக 50 மாம்பழங்களை விலைக்கு வாங்கிக்கொண்டு
இரண்டு தென்னங்குடலைகளில் அடுக்கி ஒருகுடலையை
அவருடன் வந்த சரவண பண்டாரத்திடமும் மற்றொன்றை ஒரு
கூலியாளிடமும் கொடுத்து உடன் செல்லும்படி சொல்லி
சுப்பையா பண்டாரத்தை அனுப்பி வைத்தார்.
அந்த இருவரும் தமக்குப்பின்னே வர சுப்பையா பண்டாரம்
அவர்களுக்கு முன்னே விரைவாக பட்டீச்சரம் வருவாராயினர்.

அன்புடன்

ஜெயபாரதி

=============================