From jaybee@... Sat Jun 15 06:49:46 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 15 Jun 2002 13:49:46 -0000
Received: (qmail 24682 invoked from network); 15 Jun 2002 13:49:46 -0000
Received: from unknown (66.218.66.217) by m6.grp.scd.yahoo.com with QMQP; 15 Jun 2002 13:49:46 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 15 Jun 2002 13:49:45 -0000
Received: from user (sp-103-104.tm.net.my [210.186.103.104]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXR006BO0AW72@...> for agathiyar@yahoogroups.com; Sat, 15 Jun 2002 21:04:10 +0800 (SGT)
Date: Sat, 15 Jun 2002 21:04:14 +0800
Subject: Re: [agathiyar] Savaalum saththiyamum#2 - Traditions#3
In-reply-to: <3.0.3.32.20020615204549.006e8a80@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020615210414.007434c8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020614185649.006e9770@...>
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18656
At 08:45 PM 6/15/02 +0800, you wrote:
செட்டியார், 4-00 மணிக்கு காலேஜிலிருந்து வந்தனர்.
வந்தவர் திண்ணையிலிருந்தவரைக் கண்டு,பரபரப்புடன்,
"ஐயா அவர்கள் வந்திருக்கிறார்களா?" என்று வினவவே,
சுப்பையா பண்டாரம், "வரவில்லை. நான் மட்டும் ஒரு காரியமாக
இங்கே வந்திருக்கிறேன் என்றார்.
செட்டியார் வேகம் தணிந்தது. "அப்படியானால் இங்கே இரும்.
உள்ளே போய்வருகிறேன்", என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று
உத்தியோக உடைகளைக் களைந்துவிட்டு வேறு மடியொன்றைத்
தட்டுடையாக உடுத்திக்கொண்டு விசிறியும் கையுமாக வெளியே
வந்து இருந்தனர்.
பின்பு "நீர் இவ்வளவு படாடோபமாக வந்த காரியமென்ன?
வேறு யாரையேனும் பார்க்கவந்தீரா? ஐயா அவர்கள் ஏதாவது சமாசாரம்
சொன்னதுண்டா?" என்று கேட்டார்.
சுப்பையா பண்டாரம்: இல்லை. நான் உங்களைத்தான் பார்க்க
வந்திருக்கிறேன். வந்தது ஒரு காரியத்தை உத்தேசித்து.
உங்களின் மீது ஒரு பாடலும் செய்துகொண்டு வந்தேன்.
தனியே எங்காவது சென்றால் இந்த வேஷத்தோடுதான்
போவது வழக்கம். ஐயா அவர்களுடன் வந்தால் சாதாரணமாக
வருவேன்.
தியாகராசச் செட்டியார்: பாடல் செய்துகொண்டு வந்திருக்கிறேன் என்று
சொல்கிறீரே? உமக்குப் பாடல் செய்யும் வழக்கம் உண்டோ?
சுப்: ஏனில்லை? நான் செய்யுள் செய்வேன் என்பது உங்களுக்கு
மட்டும் தெரியாது. பல இடங்களுக்குப்போய், பாடிப் பாடிப்
ரிசு பெற்று வருவது வழக்கம். இது பலருக்கும் தெரியுமே?
தி.செ: நீர் வெளியிடம் சென்று யாசகம் செய்துகொண்டு காலட்சேபம்
செய்வதுண்டு என்பது மட்டும் தெரியும். பாடல் செய்துகொண்டு
போய் சம்பாதித்து வருவது இதுவரையில் எனக்குத் தெரியாது.
பாடுவது என்றால் படித்திருக்கவேண்டுமே?
சுப்: ஏன் படிக்கவில்லை? படித்திருக்கிறேன் என்று சிலரைப்போல
பறையறைந்துகொண்டு திரிகிறதில்லை.
தி.செ: படித்தவர்கள் எல்லாம் படித்திருக்கிறோம் என்றுதான்
சொல்லிக்கொண்டு திரிகிறார்களா?நீர் சொல்வது நன்றாக
இல்லையே? படித்திருந்தால் எப்படியும் பிறருக்குத் தெரியுமல்லவா?
உம்மிடத்தில் புத்தகம் இருத்தலை நான் ஒருபோதும்
கண்டதில்லையே. படிப்பிற்குரிய அடையாளத்தையும்
உம்மிடத்தில் நான் இதுவரை காணவில்லை. பிள்ளையவர்களோடு
வந்து ஆகாரம்பண்ணிப் போவதை மட்டும் நான் பார்த்திருக்கிறேன்.
அந்த மதிப்புத்தான் உமக்கு ஏற்பட்டிருக்கிறது. மற்றவர்களைப்
போலவே நீர் படித்துக்கொண்டிருந்ததையாவது பாடம்
கேட்டுக்கொண்டதையாவது நான் இதுவரையில் பார்த்ததும்
இல்லை. கேட்டதும் இல்லை. அந்த விஷயம் இருக்கட்டும்.
நீர் செய்துகொண்டு வந்ததாகச் சொன்ன பாடலைச்சொல்லும்.
கேட்கிறேன்.