From jaybee@... Sat Jun 15 07:04:49 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 15 Jun 2002 14:04:49 -0000
Received: (qmail 4772 invoked from network); 15 Jun 2002 14:04:49 -0000
Received: from unknown (66.218.66.218) by m12.grp.scd.yahoo.com with QMQP; 15 Jun 2002 14:04:49 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 15 Jun 2002 14:04:48 -0000
Received: from user (sp-103-46.tm.net.my [210.186.103.46]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXR00LF726PMO@...> for agathiyar@yahoogroups.com; Sat, 15 Jun 2002 21:44:52 +0800 (SGT)
Date: Sat, 15 Jun 2002 21:44:56 +0800
Subject: Re: [agathiyar] Savaalum saththiyamum#5 - Traditions#3
In-reply-to: <3.0.3.32.20020615204549.006e8a80@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020615214456.00745164@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020614185649.006e9770@...>
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18657
சவாலும் சத்தியமும்#5
At 08:45 PM 6/15/02 +0800, you wrote:
>
அந்த இருவரும் தமக்குப்பின்னே வர சுப்பையா பண்டாரம்
அவர்களுக்கு முன்னே விரைவாக பட்டீச்சரம் வருவாராயினர்.
பட்டீச்சரத்தில் பிள்ளையவர்கள் நித்திரை கலைந்து எழுந்து,
"பண்டாரம் கும்பகோணம் சென்றாரா?" என்று விசாரித்துவிட்டு பாடம்
சொல்லத்தொடங்கினார். ஆனாலும் பாடம் சொல்வதில் இவர் மனம்
செல்லவில்லை. சுப்பையா பண்டாரத்தின்விஷயத்தில் இவருக்குக்
கவலை உண்டாகிவிட்டது.
"தியாகராசு, சுப்பையாவை என்ன செய்கிறானோ? என்ன
கேள்விகள் கேட்கிறானோ? சும்மா விடமாட்டானே? சுப்பையா
விழிக்கக்கூடுமே?" என்று எங்களிடம் சொல்லக்கொண்டேயிருந்தார்.
சூரிய அஸ்தமனத்துக்கு முன்னதாகவே புறப்பட்டு, வழக்கப்படி
அவ்வூரின் தெற்கே உள்ள திருமலைராயன்ஆற்றங்கரைக்குச் செல்லாமல்
கும்பகோணத்துக்குச் செல்லும் வழியை நோக்கி வடக்கே சென்று
அங்குள்ள ஒரு குளக்கரையில் சுப்பையா பண்டாரத்தின் வரவை
எதிர்பார்த்து வடதிசையை நோக்கிக்கொண்டு நின்றார். நானும்
உடன் சென்று அருகில் நின்றேன்.
சுப்பையா பண்டாரம் வரவில்லை. இவருக்குக் கவலை
அதிகமாயிற்று. "யாராவது வருகிறதாகத் தெரிகிறதா? பாரும்",
என்றார்.
பார்த்து நான், "ஒன்றும் தெரியவில்லை", என்றேன்.
"பார்த்துக்கொண்டே நின்று யாராவது கண்ணுக்குத் தோன்றினால்
உடனே சொல்லும்", என்றார்.
அங்ஙனமே நான் வடதிசையை நோக்கி நிற்கையில் மூன்று
உருவங்கள் முதலில் கண்ணுக்குத் தோன்றின.
நான்: மூன்று உருவங்கள் தோன்றுகின்றன.
மீனாட்சிசுந்தரம் பிள்ளை: அவர்களாகஇருக்குமோ? சரவணபண்டாரம்
மிகவும் உயரமுள்ளவனாதலால் அவனைக்கொண்டு
கண்டுபிடிக்கலாமே?
நான்: மூவரில் ஒருவருடைய உருவம் மட்டுமே உயரமாகத் தெரிகிறது.
அவர் சரவண பண்டாரமாகவே இருக்கலாம்.
மீ: பின்னும் நன்றாகக் கவனியும். தலையில் ஏதேனும் இருப்பதாகத்
தெரிகிறதா?
நான்:(அவர்கள் நெருங்க நெருங்க) ஒருவர் தலையில் ஏதோ குடலை
தெரிகிறது. வேறொருவர் தலையிலும் ஒரு குடலை காணப்படுகிறது.
மீ: சுப்பையா பண்டாரம் வருகிறாரா?
நான்: அவர் வருகிறார்.
அவர் வருவதை நொக்கி அவரோடு பேசவேண்டுமென்ற
ஆவலுடன் இவர் நிற்கையில் அவர் வேகமாக அருகில் வந்து இவரை
நோக்கி, "என்ன ஐயா? உங்களை நான் பரமசாதுவென்று எண்ணியிருந்தேன்.
பெரிய ஆபத்திலே கொண்டுவந்து விட்டீர்கள்! என்னை அவமானத்துக்
குள்ளாக்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்களே. நீங்கள் இவ்வளவு
செய்வீர்களென்று இதுவரையில் நான் நினைக்கவில்லை. அந்த மனுஷர்
புலி போல என்னை உறந்துவிட்டாரே?" என்றார்.
மீ: என்ன? என்ன?
சுப்: என்னவா? நீங்கள் பாடல் செய்துகொடுத்தீர்களே? அந்தப்பாடலை
என்னுடைய சக்திக்கு ஏற்றபடி செய்துதர வேண்டாமா? அதில்
நீங்கள் செய்ததாக நினைக்கும்படி ஏதோ அடையாளம் வைத்துப்
பாடிவிட்டீர்களே? நான் பாடிக்காட்டும்பொழுது, "என்கோ
என்பதற்கு என்ன அர்த்தம்? அந்தப்பிரயோகம் எந்த நூலில்
வந்துள்ளது? இலக்கணம் என்ன?" என்று பல கேள்விகளைக்
கேட்டு அந்த மனுஷன் உபத்திரவம் செய்து என் பிராணனை
வாங்கி விட்டார். நான் சத்தியம் பண்ணிக் கொடுப்பதாகச்
சொல்லியும் அவர் நம்பவில்லை.
மீ: அப்பால் நீர் எப்படி அவனிடமிருந்து தப்பி மாம்பழம் வாங்கிவந்தீர்?
சுப்: பிற்பாடு சொல்கிறேன். இப்போது அதைச் சொல்ல எனக்கு இஷ்டமில்லை.
இவ்வாறு சொல்லுகையில் அவர் முகம் கோபக்குறியைப்
புலப்படுத்தியது.
அவர் அந்நிலையை உணர்ந்து, "சரி. வீட்டுகுப்போம்" என்றார்.
சுப்பையா பண்டாரம் தமக்குப் பின்னே வந்த இருவருடனும்
வீட்டுக்குச் சென்றார்.
திண்ணையிலிருந்த ஆறுமுகத்தா பிள்ளைஅவரைக் கண்டு,
"என்ன சுப்பையா! போய்வந்தாயா? என்ன குடலைகள்? மாம்பழக்
குடலைகளா? செட்டியாரைப் பார்த்தாயா? புதிய பாடல் சொன்னதுண்டா?
அவர் பழம் வாங்கிக்கொடுத்தாரா? கௌரத்திற்காக நீயே சொந்தப்
பணத்தில் வாங்கிவந்தாயா? உண்மையைச்சொல்", என்றார்.
சுப்: ஒரு பாடலைச் செய்து சொல்லிக்காட்டித்தான் செட்டியாரை
மகிழ்வித்தேன். அவரே பழக்கடைக்கு வந்து பழங்களை
வாங்கிக்கொடுத்தார். அவர் அனுப்பிய ஆளே இவன்.
ஆறு: உன்னுடைய பாடலுக்காக அவர் பழம் வாங்கிக்கொடுத்திருந்தால்
அவரைப்போல தெரியாதவர்கள் இல்லையென்று உறுதியாகச்
சொல்லுவேன்.
பின்னும் இப்படியே இருவரும் மேன்மேலும் வாக்குவாதம்
செய்துகொண்டிருக்கையில் பிள்ளையவர்கள், "தம்பி இவரை விட்டுவிடுங்கள்.
கோபத்தோடு இருக்கிறார்", என்று சொல்ல அவர் எழுந்து வேறிடம்
சென்றார். எல்லாரும் தத்தம் இடத்திற்குச் சென்றார்கள் பின்பு அந்த
மாம்பழங்களை எல்லாரும் வாங்கியுண்டு திருப்தியுற்று சுப்பையா
பண்டாரத்தை வாழ்த்தினார்கள்.
மறுநாள் செட்டியார் பாடல்பெற்ற சந்தோஷத்தினால்
பட்டீச்சரத்துக்கு வந்து பிள்ளையவர்களை நோக்கி, "என்ன? நேற்று
பெரிய வேடிக்கை செய்துவிட்டீர்களே!", என்று சொல்லிவிட்டு எல்லா
விஷயங்களையும் விபரமாகச் சொன்னார். கேட்டு எல்லாரும் நகைத்தார்கள்.