From jaybee@... Sat Jun 15 15:44:25 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 15 Jun 2002 22:44:24 -0000
Received: (qmail 75051 invoked from network); 15 Jun 2002 22:44:24 -0000
Received: from unknown (66.218.66.217) by m4.grp.scd.yahoo.com with QMQP; 15 Jun 2002 22:44:24 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 15 Jun 2002 22:44:24 -0000
Received: from user (sp-103-2.tm.net.my [210.186.103.2]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXR00H21R5Y5Z@...> for agathiyar@yahoogroups.com; Sun, 16 Jun 2002 06:44:23 +0800 (SGT)
Date: Sun, 16 Jun 2002 06:44:28 +0800
Subject: Follow-up - RE: [agathiyar] Traditions#2-Saththiyam
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020616064428.0073e0e8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18660
அன்பர்களே,
'சவாலும் சத்தியமும்' என்ற தலைப்பில் நான் அனுப்பிய
சம்பவம், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரவர்கள், தாம்
எழுதிய 'மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்' -
நூலில் காணப்படுவது. அதனை அவர் எழுதியவாறு கொடுத்திருக்கிறேன்.
கீழ்க்கண்ட இடத்தைக் கவனியுங்கள்:
திசெ: இவ்வளவு வார்த்தைகளும் நீர் படிக்கவில்லை என்பதை நன்றாகக்
காட்டுகின்றன. இருக்கட்டும். இந்தப்பாட்டை நீரே செய்ததாகச்
சத்தியம் செய்வீரா?
சுப்: இதோ செய்கிறேன். எந்த மாதிரியாகச் செய்யவேண்டும்?
திசெ: துணியைப் போட்டு தாண்டவேண்டும். அதைச்செய்வீரா?
சுப்பையா பண்டாரம், "இதோ தாண்டுகிறேன்", என்று சொல்லி
தமது அங்கவஸ்திரத்தைக்கீழே குறுக்கே போட்டுவிட்டார். தியாகராசச்
செட்டியார் நடுநடுங்கி அவர் கையைப் பிடித்துக்கொண்டு,
"நீர் சத்தியம் செய்தாலும் இப்பாடலை நீர் செய்ததாக நினையேன்.
துணியைத் தாண்டவேண்டாம். நீர் வந்த காரியம் இன்னதென்று
சொல்லிவிடும். உமக்கு வேண்டியவற்றைக்கொடுக்கிறேன். வீணாக
ஏன் பொய் சொல்கிறீர்?" என்று நயமாகக் கெட்கவே, அவர்
நிகழ்ந்தவற்றையெலாம் உள்ளபடியே சொல்லிவிட்டார்.
துணியைப் போட்டுத் தாண்டி செய்யும் சத்தியம், அவ்வளவு
வலுவானதாகக் கருதப்பட்டிருக்கிறது.
அதை எடுத்துக்காட்டவே இவ்வளவு நீளமாகக் கதை
சொல்லவேண்டி வந்துவிட்டது:-)