From cbose@... Sun Jun 16 07:52:14 2002
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 16 Jun 2002 14:52:14 -0000
Received: (qmail 98286 invoked from network); 16 Jun 2002 14:52:14 -0000
Received: from unknown (66.218.66.216) by m11.grp.scd.yahoo.com with QMQP; 16 Jun 2002 14:52:14 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 16 Jun 2002 14:52:13 -0000
Received: from vsnl (unknown [203.199.230.136]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id D7A0C490A for ; Sun, 16 Jun 2002 20:29:51 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020616092152.00801bc0@...>
X-Sender: cbose@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 16 Jun 2002 09:21:52 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Abdul Kalaam.
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 18671

அன்பர்களே,

அப்துல் கலாம் இந்திய குடியரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது முதல் பலரும்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல் குடிமகனாகத் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது பெரிய சாதனை தான். ஆனால்
அதற்கெல்லாம் அப்பாற் பட்டவர் அப்துல் கலாம்.

இந்தியாவில் குடியரசுத் தலைவர் என்பதுதங்கக் கூண்டுக்குள் அடைபடுவது போல. நாட்டின் எல்லா நடப்புகளூம்
அவருக்குத் தெரியப்படுத்தப்படுமா என்பதே ஐயம் தான். அவரால் அவர் விரும்பும்படி இயங்க முடியும் என்பதுவும்
ஐயம் தான்.

பல்லாயிரக்கணக்கான ( அல்லது ஒரு லட்சமா?) மாணவர்களைக் கண்டு பேசி அவர்களின் சிந்தனையைத்
தெரிந்து கொள்வதையும் அதனை நல்ல திசையில் திருப்பிவிடுவதனையும் தன் இலக்காக அறிவித்தார் அப்துல்
கலாம். இதனைச் சிறப்பாகவும் செய்து வருகிறார். என் கல்லூரிக்கு அவர் வந்த போது இதனை நேரடியாகக்
கண்டு உணர முடிந்தது. இதையெல்லாம் ஒரு குடியரசுத் தலைவராக இருந்து செய்ய முடியுமா?

வாஜ்பாய் / காங்கிரஸ் அரசியல் சதுரங்கத்தில் அப்துல் கலாமைப் பயன்படுத்திக்கொண்டுவிட்டனர்.
இந்தியாவில் குடியரசுத் தலைவர்கள் எதனையும் சாதித்ததில்லை. மக்களுக்கு நலன் தரும் திட்டங்களை
வடிவமைத்துக் கொடுத்ததில்லை. வேறு ஒரு நல்ல வேட்பாளர் கிடைக்கவில்லை என்பதற்காக அறிவியல்
வழியில் இந்தியாவை அதன் இளைஞர்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல விரும்பிய ஒரு நல்ல
தீர்க்கதரிசி வீணடிக்கப்படுகிறார் என்பதே என் கருத்து.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை.