From aysh@... Sun Jun 16 10:08:57 2002
Return-Path: X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 16 Jun 2002 17:08:57 -0000
Received: (qmail 47490 invoked from network); 16 Jun 2002 17:08:56 -0000
Received: from unknown (66.218.66.218) by m5.grp.scd.yahoo.com with QMQP; 16 Jun 2002 17:08:56 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 16 Jun 2002 17:08:51 -0000
Received: (qmail 30863 invoked by uid 7002); 16 Jun 2002 22:23:17 +0530
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by webmail2.maa.sify.net with SMTP; 16 Jun 2002 22:23:17 +0530
Received: (qmail 30835 invoked by uid 7002); 16 Jun 2002 22:23:16 +0530
Received: from unknown (HELO User) (210.214.131.128) by webmail2.maa.sify.net with SMTP; 16 Jun 2002 22:23:16 +0530
To: "Agathiyar@Yahoogroups. Com" Subject: chankampuzha krishna pilllai's 'ramaNan' - 7
Date: Sun, 16 Jun 2002 22:36:58 +0530
Message-ID: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
Importance: Normal
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=35388564
X-Yahoo-Message-Num: 18674
ரமணன் - ஒன்றாம் பாகம் - அரங்கம் மூன்று
சங்கம்புழை கிருஷ்ணபிள்ளையின் மலையாளக் கவிதை 'ரமணன்' இரண்டு
காட்சிகளை இதுவரை வேறு வேறு சந்தர்ப்பங்களில் இங்கே எழுதினேன்.
அந்தக் காதல் காவியத்தின் அடுத்த காட்சி இதோ.
சந்திரிகையின் மாடமாளிகை. இரண்டாம் மாடியில் ஒரு மலர்
மஞ்சத்தில் சந்திரிகை மலர்ந்து கிடக்கிறாள். அருகே தோழி
பானுமதி அவளுக்கு மென்மையாக விசிறிக் கொண்டிருக்கிறாள். அறை
முழுக்க வரிசையாக நிறைய நீலக் கண்ணாடிகள். அறைக்கு நடுவே
பிரகாசமாக எரியும் ஒரு விளக்கு தொங்கவிடப்பட்டிருக்கிறது. அதன்
கீழே ஒரு வட்ட மேஜை. சுற்றியும் நாற்காலிகள். மணி இரவு பத்தரை.
சந்திரிகை ஒரு பெருமூச்சோடு ஒரு பக்கமாகத் திரும்பி கன்னத்தில்
கைவைத்து முகத்தைத் தாங்கிப் பிடித்தபடி தோழி பானுமதியோடு பேச
ஆரம்பிக்கிறாள்.
தான் ஆட்டிடையன் ரமணன் மேல் கொண்ட காதலை அருமைத் தோழி
பானுமதியிடம் சந்திரிகை சொல்லும் அழகான இந்தக் காட்சி முழுக்கப்
பாடலாகவே விரிந்து மலையாளக் கவிதை ரசிகர்களின் உள்ளங்களை
எப்போதும் கொள்ளை கொண்டது.
'ரமணன்' திரைப்படமாக வந்தபோது இது ஓர் இனிய பாடலாக மலர்ந்த
நினைவு..
இனி காட்சிக்குள் நுழைவோம்.
ரமணனின் நினைவில் மூழ்கிய சந்திரிகை தோழி பானுமதியிடம்
சொல்கிறாள் -
இப்படி ஒரு பூச்செண்டு போல் மனதை
நான் கண்டதில்லை.
என்ன ஒரு அற்புதமான அழகான காதல்
என்ன ஒரு லட்சிய நறுமணம்.
........
புனிதமானவன். பரிசுத்தமானவன்.
உண்மையே வடிவானவன்.
ஆடு மேய்ப்பதும் காட்டில்
பாடி ஆடி நடப்பதும்
ஒரே கிளையில் வளர்ந்து நறுமணம்
கமழும் இரண்டு பூக்கள் போல்
கானம் இசைக்கும் தோழனும்
ஓய்வு கொள்ள நிழல் எழும்
பச்சை விரியும் குன்றுகளும் வனங்களும்
எப்போதும் மனநிம்மதியும் மாசு படியா மனமுமாகக்
கவலையின் நிழல் வீழாத
எவ்வளவு அழகான வாழ்க்கை.
காதல் முழுக்க நிரம்பி நின்ற சந்திரிகையின் மனதில் ரமணனின்
தோழனும் கானம் பாடும் கந்தர்வனாக, ஒரு தேவனாகத் தோன்றுகிறதில்
வியப்பில்லை. தயிர் கடையும் போது கையில் சிதறும் மோர்த்
திவலைகளைத் தலையில் பூசிப்பூசி மோர் வாடை அடிக்கும் கூந்தலை
உடைய ஆய்ச்சியர் கூட, கண்ணன் மேல் கொண்ட அன்பால் ஆண்டாள்
நாச்சியாருக்கு 'வாச நறுங்குழல் ஆய்ச்சியர்' ஆனது போல், தனக்குப்
பிரியமானவரின் அன்புக்கு உகந்தவர்களை எல்லாம் பிரியத்தோடு
நோக்கும் பார்வை இது.
சந்திரிகையின் தோழி பானுமதி அவள் காதலை நன்றாக அறிந்தவள்.
அதை மனப்பூர்வமாக வாழ்த்துகிறவள். அவள் சொல்கிறாள் ..
காட்டுப் பூங்குளிர்ச் சோலயெப்போலே
பாட்டுப் பாடுன்ன ஜீவிதம்.
காட்டுப் பூங்குளிர்ச் சோலை போல்
பாட்டுப் பாடும் ஒரு வாழ்க்கை.
அவளுடைய மகிழ்ச்சி சந்திரிகையையும் தொற்றிக்கொள்ள அவள்
பாடுகிறாள் ..
வெண்ணிலாவிலும் வெண்ம தாவிடும்
புண்யபூர்ணமாம் ஜீவிதம்
ஒட்டதிகம் கொதிப்பு ஞான் அதில்
ஒட்டி ஒட்டிப் பிடிக்குவான்.
வெண்ணிலாவை விட வெண்மை கொண்ட
நற்பேறு நிறைந்த வாழ்க்கை.
எனக்கு அதில் நிறைய விருப்பம்
ஓடித் தொடர்ந்து அதைப் பிடிக்க வேண்டும்.
பானுமதி அவளை அணைத்தபடி அவள் காதில் கிசுகிசுக்கிறாள் -
அல்புதமாணு ஆ வேழ்ச்ச மூலம் ஓர்
அப்சரஸ் ஆகித் தீர்ன்னு நீ.
அற்புதமான இந்தக் காதல் உறவு மூலம் ஒரு
தேவதை போல் ஆகி விட்டாய் நீ.
சந்திரிகை காதல் போதையில் கண் கிறங்கிச் சொல்கிறாள் .....
மாமகார்த்ரண யோக்தியால் ஒரு
மானசாந்தரம் ஏகி ஞான்.
மாறிமாறி அணஞ்ச ரச்மியெ
மாரொடு சேர்த்து அணச்சு ஞான்.
கருணை பொழியும் விழிகளின் பார்வையில்
மனமாற்றம் அடைந்தேன் நான்.
திரும்பத் திரும்ப என்னை நெருங்கிய ஒளியை
மாரோடு சேர்த்து அணைத்தேன் நான்.
அதைக் கேட்ட உயிர்த்தோழி பானுமதி அந்தக் காதலை இப்படி
வாழ்த்துகிறாள் ..
மங்கலம் இன்னும் நிறைய வேண்டும்.
மந்த நிலை முழுவதும் மாற வேண்டும்.
அந்த அற்புத ஆண்டு நிறைவின் நினைவில் மூழ்கிய சந்திரிகை கண்களை
மூடி முணுமுணுக்கிறாள் ..
முக்த ராகமென் ஜீவனேகிய
முத்து மாலயுமாயி ஞான்
அன்னு மல்ப்ரேம தைவதத்தினெ
சென்னு கூப்பி வணங்கிடும்.
..........
இன்னதினொரு மாற்று கூட்டுவான்
வன்னு சேர்ன்னு வசந்தவும்.
முக்தியளிக்கும் ராகமாய் என் உயிரில் நிறைந்த
காதல் என்ற முத்து மாலையோடு நான்
அன்று என் காதல் தெய்வத்தைக்
கைகூப்பி வணங்கச் செல்வேன்
........
அதற்கு அழகு சேர்க்க இன்று
வசந்த காலமும் வந்து சேர்ந்தது.
அதற்குக் கட்டியம் கூறி பானுமதி தானும் மகிழ்கிறாள் ..
மந்த மாருதன் வீசிடுன்னிதா
சம்பகத்தின் பரிமளம்.
தென்றல் வீசிடும் இதோ
சண்பக மலரின் வாசம்.
ப்ராண ஹர்ஷ விசால சாம்ராஜ்ய
ராணிதன்னே நீ சந்த்ரிகே.
உயிர் கலந்த மகிழ்ச்சியின் விரிந்த காதல் தேசத்து
ராணிதான் நீ சந்திரிகையே.
சந்திரிகை எழுந்து நின்று பானுமதியின் கையைப் பிடித்துக் கொண்டு
அவள் விழிகளைக் கூர்ந்து நோக்கியபடி கூறுகிறாள் -
என்னெயும் கூடி விஸ்மரிச்சிதா
விண்ணிலேக்கு உயருன்னு ஞான்.
நான் என்னை மறந்து இதோ
விண்ணில் உயருகின்றேன்.
பானுமதியும் அவள் தோழியின் காதல் வயப்பட்ட நினைவுகளில் கலந்து
உளமாறப் பேசுகிறாள் ..
சந்திரிகை மதிமயங்கி பானுமதியோடு கை கோர்த்து நடனமாடியபடி
பாடக் காட்சி முடியப் போகிற நேரம் ...
ரங்க சங்கீத சாரமே
எந்து ஹா மன்மனம் கவர்னு நீ
தேஹமல்ல மஜ்ஜீவனும் கூடி
தேவ நின் த்ருப்பதங்களில்
உள்புளகமார்ன்னு அர்ப்பணம் செய்வூ
ஸஸ் ப்ருஹம் பக்த தாசி ஞான்.
வண்ண இசையின் உயிர்நிலையே
எப்படி என் மனம் கவர்ந்தாய் நீ
உடலோடு உயிரையும் கூட்டி
உள்ளத்தில் பரவசத்தோடு
உன் திருப்பாதங்களில்
அர்ப்பணம் செய்யும் அடியாள் நான்.
உள்ளறையில் இருந்து சந்திரிகையின் அன்னையின் குரல் கேட்கிறது -
மணி பதினொண்ணு கழிஞ்சு அல்லோ
மகளே நினக்கின்னு உறக்கமில்லே?