From kisna@... Mon Jun 17 02:58:10 2002
Return-Path:
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 17 Jun 2002 09:58:09 -0000
Received: (qmail 22577 invoked from network); 17 Jun 2002 09:58:09 -0000
Received: from unknown (66.218.66.217) by m11.grp.scd.yahoo.com with QMQP; 17 Jun 2002 09:58:09 -0000
Received: from unknown (HELO spade.pacific.net.sg) (203.120.90.71) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 17 Jun 2002 09:58:09 -0000
Received: from smtp1.pacific.net.sg (smtp1.pacific.net.sg [203.120.90.70]) by spade.pacific.net.sg with ESMTP id g5H9w6n28338; Mon, 17 Jun 2002 17:58:06 +0800
Received: from Kisna (cm45.omega50.scvmaxonline.com.sg [218.186.50.45]) by smtp1.pacific.net.sg with SMTP id g5H9w5714310; Mon, 17 Jun 2002 17:58:05 +0800
Message-Id: <3.0.6.32.20020617180440.007a7820@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Mon, 17 Jun 2002 18:04:40 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, RayarKaapiKlub@yahoogroups.com
Subject: Arappaleesura Sathagam
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan
X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Profile: kisnasamy08
X-Yahoo-Message-Num: 18680


''அறப்பளீ சுரசதகம்''
```````````````````````````````

தமிழ் இலக்கியச் செல்வங்கள் பல. அவைகளில் ஒன்று ''சதகம்'' என்னும்
வகையும் ஒன்று.சதம் என்னும் சொல் வடசொல். சதகம் என்பது நூறு
என்னும் பொருளாகும்.
மக்கட்கு மக்களாக வாழவேண்டிய உலகியல் நெறி,அறம் முதலிய
வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய பண்புகளை எளிய,இனிய
நூறு பாடல்களை தொடர்களாக கொண்டு அமைந்து பண்பும்
பழக்க வழக்க ஒழுக்க முறைகளும் பொதுள அமைத்துப்
பாடப்பெற்ற பாடலாகும்.
இறுதி அடிகள் இறைவனை மகுடமாக அமைத்து அறனும் மறனும்
கொண்ட பாடலாக அமைந்துள்ளது.


''அமபலவாண கவிராயர்''
பாடிய சதுரகிரி
''அறப்பளீ சுரசதகம்'' என்னும் பழைய
நூலிருந்து சில பாடல்களை காண்போர்.
<><><><><><><><><><<><><><><><><><><><><><><><><><><>

எண்ணைதேய்த்து குளிக்கும் நாள் (முழுக்கு நாள்)
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

வரும் ஆதி வாரம் தலைச் கெண்ணெய் ஆகாது
வடிவமிகும் அழகு போகும் ;
வளர் திங்களுக்கதிக பொருள் சேரும்; அங்கார
வாரம் தனக்கிடர்வரும்
திருமேவு புதனுக்கு மிகுபுத்தி வந்திடும்
செம்பொனுக் குயர் அறிவுபோம்;
தேடிய பொருட்சேதம் ஆம்வெள்ளி; சனியெண்ணெய்
செல்வம் உண்டாயு ளுண்டாம்;
பரிகாரம் உள தாதி வாரம் தனக்கலரி;
பெளமனுக் கான செழுமண்;
பச்சறுகு பொன்னவற் காம்; எரு தூளொளிப்
பார்க்கவற் காகும் எனவே;
அரிதா அறிந்தபேர் எண்ணெய் சேர்த்தே முழுக்
காடுவார்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே...!

பொருள்:--
````````
வரும் ஆதிநாள் ஞாயிற்று கிழமையன்று தலைக்கு எண்ணை கூடாது,
அவ்வாறு முழுகினால் வடிவம் மிகும் போகும்- உருவத்தில் மிகுந்த
அழகு நீங்கும்...,

வளர்ந்துவரும் திங்கட்கிழமைகளில் முழுகினால் மிகுந்த பொருள் கிடைக்கும்...,

அங்காரவாரம் என்னும் செவ்வாய்க்கிழமைகளில் மூழுகினால் துன்பம் உண்டாகும்...,

திருமேவு என்னும் அழகுமிகுந்த புதன்கிழமைகளில் மூழுகினால் மிகுபுத்தி,
சிறந்த அறிவு வரும்...,

செம்பொன் என்னும் நல்ல வியாழக்கிழமைகளில் முழ்கினால் சிறந்த அறிவு கெடும்...,

வெள்ளிகிழமை மூழ்கினால் சேர்த்துவைத்த பொருள் அழியும்....,

சனிகிழமைகளில் எண்ணெய் தேய்த்து முழுகினால் செல்வமும்,
ஆயுள் வளர்ச்சியும் உண்டாகும்.

பரிகாரம்
''''''''''''''''''''''
[அப்படி தகாத கிழமைகளில் முழுக நேர்தால் மாற்று உண்டு]
ஞாயிற்றுக் கிழமைகளில் அலரிமாராம்,
செவ்வாய்க்கு நல்ல மண் ஆகும்,
வியாழனுக்கு பசுமையான அறுகம் புல்,
வெள்ளிக்கு எருப்பொடி ஆகும்.
அரிது ஆ அறிந்த பேர், அருமையாக உணர்ந்தகள் எண்ணெயுடன்
இவற்றைச் சேர்த்து முழுகுவர்.





For Your Bookmark.
```````````````````````````
www.singaiinayam.com.sg
http://www.geocities.com/singaikrish/