From naga ganesan@... Mon Jun 17 05:20:38 2002
Return-Path:
Received: (qmail 27398 invoked from network); 17 Jun 2002 12:20:37 -0000
Received: from unknown (66.218.66.216) by m9.grp.scd.yahoo.com with QMQP; 17 Jun 2002 12:20:37 -0000
Received: from unknown (HELO n13.grp.scd.yahoo.com) (66.218.66.68) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 17 Jun 2002 12:20:37 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [66.218.67.142] by n13.grp.scd.yahoo.com with NNFMP; 17 Jun 2002 12:20:37 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 17 Jun 2002 12:20:35 -0000
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 17 Jun 2002 12:13:41 -0000
Received: (qmail 62880 invoked from network); 17 Jun 2002 12:13:41 -0000
Received: from unknown (66.218.66.217) by m7.grp.scd.yahoo.com with QMQP; 17 Jun 2002 12:13:41 -0000
Received: from unknown (HELO n13.grp.scd.yahoo.com) (66.218.66.68) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 17 Jun 2002 12:13:41 -0000
Received: from [66.218.67.151] by n13.grp.scd.yahoo.com with NNFMP; 17 Jun 2002 12:13:41 -0000
Date: Mon, 17 Jun 2002 12:13:40 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: kaNNOttam ennum kaziperum kArikai
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2344
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.229.68
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 18684


அணி, அழகு, அலங்காரம் என்னும் பொருளில் காரிகை என்னுஞ் சொல்லை இங்கே
வள்ளுவனார் பயன்படுத்துகிறார்.
குறள் 1272 - "கண்ணிறைந்த காரிகைக் காம்பேர் பேதைக்கு"
- இதனைக் "கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை" என்பதனோடு
பார்த்தால், காரிகை என்பது அலங்காரம் என்பது தெளிவுறும்.

மேலும், குறள் 777லிலும் காரிகை என்பதை அணி/அலங்காரம்/அழகு என்பதாகவே
வள்ளுவர் பாவிக்கிறார்:
கழல் யாப்புக் காரிகை நீர்த்து - குறள் 777.

யாப்பு = யாத்தல்/ஆர்த்தல் = கட்டப்படுவது. செய்யுளில் வார்த்தைகளைக்
கட்டும் முறை = யாப்பு. இதற்கெல்லாம் விளக்கமாகத் தமிழிலே
இலக்கணம் செய்தோர் சமணர். ( இலக்கணம் தமிழுக்குச் சமணர் முக்கியமான கொடை.
உ-ம்: நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கம்,)
அவர் சமணர்). யாப்பு விதிமுறைகளைக் சேமித்து வைத்த அருங்கலம்(=சேமக்கலம்)
யாப்பருங்கலம் என்ற பெருநூல். அது விரிவானது. அதனைச் சுருக்கி, அலங்காரமாய் செய்யுள்நடையில்
சொல்வது யாப்பருங்கலக் காரிகை. கழலை ஆண்வீரர் காலில் அணிவதை அலங்காரம்
(=காரிகை) என்று குறள் 777-லும் காணலாம்.

வள்ளுவர் சமணர் என்று அறிஞர் வையாபுரிப்பிள்ளை போன்றோர்
ஆய்ந்து அறிவித்துள்ளனர்:
http://www.services.cnrs.fr/wws/arc/ctamil/2002-04/msg00070.html


அகத்தியர் தமிழ் (இலக்கணம்) சம்பந்தம் சங்க இலக்கிய கடைசிக் காலத்திலே
உருவானது. முதலில் இல்லை:
http://www.services.cnrs.fr/wws/arc/ctamil/2002-05/msg00076.html
மேலும், பழைய மடல்:
http://groups.yahoo.com/group/CTamil/message/533

அன்புடன்,
நா. கணேசன்


--- In agathiyar@y..., "sarabeswar" wrote:
> நன்றி திரு.கணேசன்.
>
> அன்புடன்,
> குமார்
>
> > காரிகை என்பதை அலங்காரம், அணி என்ற பொருள்களில் திருவள்ளுவரே
> > பயன்படுத்துகிறார். கழிபெரும் = மிகப் பெரிய (சால உறு தவ நனி கூர் கழி
> > மிகலே - பவணந்தி முனிவர் நன்னூல்).
> >
> > உரைநடை அல்லது விரிவாக விளங்கிவரும் ஒன்றை, சுருக்கமாக
> > செய்யுள் நடையில் சொல்வது காரிகை. இங்கும் ஒன்றனுக்கு மேலே
> > அணியும் அணி அழகூட்டுவது என்றே பொருள். யாப்பருங்கலம் - இதன்
> > மீது சமணர் செய்தது யாப்பருங்கலக் காரிகை. நாகார்ஜுனர்
> > என்ற பௌத்த குரவர் மூலமத்யமகாரிகை.
> > கௌடபாதர் கௌடபாதகாரிகை, சாங்கியநூல் மேல் சாங்கியகாரிகை.
> > காரிகை என்னும் பெயரை ஹேமசந்திரர் வரையறுத்துள்ளார்.
> >
> > கழிபெரும் = மிகப் பெரிய.
> >
> > அன்புடன்,
> > நா. கணேசன்