From aysh@... Mon Jun 17 09:18:18 2002
Return-Path: X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 17 Jun 2002 16:18:17 -0000
Received: (qmail 3441 invoked from network); 17 Jun 2002 16:18:16 -0000
Received: from unknown (66.218.66.218) by m4.grp.scd.yahoo.com with QMQP; 17 Jun 2002 16:18:16 -0000
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 17 Jun 2002 16:18:14 -0000
Received: (qmail 22880 invoked by uid 7002); 17 Jun 2002 21:48:08 +0530
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by webmail5.maa.sify.net with SMTP; 17 Jun 2002 21:48:08 +0530
Received: (qmail 22868 invoked by uid 7002); 17 Jun 2002 21:48:07 +0530
Received: from unknown (HELO User) (210.214.128.112) by webmail5.maa.sify.net with SMTP; 17 Jun 2002 21:48:07 +0530
To: "Agathiyar@Yahoogroups. Com" Subject: kannadaasan-in 'cheppu mozhikaL'
Date: Mon, 17 Jun 2002 21:47:04 +0530
Message-ID: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
Importance: Normal
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=35388564
X-Yahoo-Message-Num: 18690
கண்ணதாசனின் 'செப்பு மொழிகள் 250' புத்தகத்திலிருந்து -
1) சோடாவும் மைக்கும் இல்லாமல் பொதுக் கூட்டம் ஏது? சோமாரியும்
கல்மாரியும் இல்லாமல் அரசியல் ஏது?
2)நான்கு பேர் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருக்கும்போது குடிப்பழக்கம்
இல்லாதவனைக் கூட வைத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் உளறுவதை
எல்லாம் மறுநாள் அவன் மட்டும் தான் ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பான்.
3)போன வருஷத்துப் பஞ்சாங்கத்தில் இந்த வருஷத்து நன்மை தீமைகளைக்
காணமுடியாது. ஆண்டுக்கு ஆண்டு பஞ்சாங்கம் மாறுவது போன்று நியாயங்களும்
மாறும். நியாயங்களை ஏற்றுக் கொள்ளப் புத்தி வேண்டும். அவ்வளவு தான்.
4) ஆண் - பெண் உறவில் இவ்வளவு அற்புதமான சுகம் மட்டும் இல்லாமல்
இருந்தால், தற்கொலையே ஒரு பொழுது போக்கு ஆகி விடும்.
5) இந்தியா பூராவும் மதுவிலக்கை அமுல் நடத்தினால் என்ன நடக்கும்?
டீக்கடையில் சாராயம் கிடைக்கும்.
6) நான் சொல்வது தவறாக இருந்தால் என்னை மன்னியுங்கள். நீங்கள்
சொல்வது தவறாக இருந்தால் மன்னிப்புக் கேளுங்கள். இருவர் சொல்வதுமே
தவறானால் அதே ரயிலில் தொடர்ந்து பயணம் செய்வோம்.
7)'உங்களுக்குச் சோறு போடுவேன்' என்று சொல்வதின் மூலமே உங்கள்
பசியைத் தீர்க்கக் கூடிய சக்தி அரசியல்வாதி ஒருவனுக்குத்தான் உண்டு.