From jaybee@... Mon Jun 17 23:46:57 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 18 Jun 2002 06:46:57 -0000
Received: (qmail 53045 invoked from network); 18 Jun 2002 06:46:57 -0000
Received: from unknown (66.218.66.218) by m10.grp.scd.yahoo.com with QMQP; 18 Jun 2002 06:46:57 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 18 Jun 2002 06:46:57 -0000
Received: from user (sp-103-207.tm.net.my [210.186.103.207]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXW00J8S2G30T@...> for agathiyar@yahoogroups.com; Tue, 18 Jun 2002 14:38:29 +0800 (SGT)
Date: Tue, 18 Jun 2002 14:36:37 +0800
Subject: On diary and journal writing(again)
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020618143637.0273fbac@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18695


அன்பர்களே,

Journal writing என்னும் பழக்கத்தைப் பற்றி ஏற்கனவே
அகத்தியத்தில் எழுதியிருக்கிறேன். இது டயரி எழுதுவதைப்
போன்றது அல்ல. டயரியில் நாம் செய்தனவற்றைப் பற்றி
எழுதிகிறோம். Appointment book என்னும் அட்டவணைப்
புத்தகத்தில் செய்யவேண்டுவனவற்றைக் குறித்து வைக்கிறோம்.
Personal journal என்பது அப்படியல்ல. நம் மனதுக்கு
வரும் எதையும் எழுதலாம். கட்டுப்பாடின்றி எழுதுவதே சிறப்பு.
அதுதான் உண்மையான personal journalling. ஆனால் யாராவது
மற்றவர்கள் கண்களில் பட்டுவிட்டால்.....? அதனால் சிலர் மிக
ரகசியமான ஜர்னல் வைத்துக்கொள்வார்கள். மற்றவர்கள் படித்தால்
பாதகமில்லை எனப்படும் விஷயங்களை வேறு புத்தகத்தில்
எழுதிக்கொள்வார்கள்.

1942-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12-ஆம் தேதியன்று
ஜெர்மனியில் ஓர் ஊரில் ஆன் ஃப்ராங்க் என்னும் பெண்ணொருத்தி
தன்னுடைய பிறந்தநாளுக்காக ஒரு டயரியைத் தன் தந்தையிடமிருந்து
அன்பளிப்பாகப் பெற்றாள்.
ஒரு மாதத்திற்குள்ளாக அவளுடைய குடும்பமே
நாட்ஸிகளிடமிருந்து தப்பி யூதரல்லாத நண்பர்களின் வீட்டில் பதுங்கி
ஒளிந்து வாழவேண்டியதாகியது.
இவ்வாறு இரண்டாண்டுகள் பதுங்கியிருந்தனர். ஆனால்
இரண்டாண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கப்பட்டனர். இரண்டு வெவ்வேறு
சிறை முகாம்களுக்கு இட்டுச்செல்லப்பட்டனர்.
ஆன்னின் தந்தை மட்டுமே உயிர் பிழைத்தார். அவர் ஆன்னுடைய
டயரியை 1947-இல் வெளியிட்டார். The Diary of a Young Girl
என்ற பெயரில் அது வெளிவந்தது.
அந்த டயரியின் மூலம் ஆன் இறவாத்தன்மை பெற்றாள்.

இந்த இடத்தில் அனந்தரங்கம் பிள்ளை டயரியைப் பற்றி
யாராவது முந்திக்கொண்டு சொல்லக்கூடும். அதற்குமுன்னால் நானே
சொல்லிவிடுகிறேன். 'Blue Diary', அனந்தரங்கம் பிள்ளை டயரி,
சேமுவல் பீப்ஸ்(Samuel Pepys) டயரி ஆகியவற்றைப் பற்றி அகத்தியத்தில்
மூன்றாண்டுகளுக்கு முன்னரேயே எழுதப்பட்டுவிட்டது:-)
பெப்ப்ப்பெர பெப்ப்ப்பெர பேஏஏஏம்ம்.....(own trumpet)

அன்புடன்

ஜெயபாரதி


======================