From jaybee@... Mon Jun 24 22:08:42 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 Jun 2002 05:08:41 -0000
Received: (qmail 47089 invoked from network); 25 Jun 2002 05:08:41 -0000
Received: from unknown (66.218.66.217) by m9.grp.scd.yahoo.com with QMQP; 25 Jun 2002 05:08:40 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 25 Jun 2002 05:08:42 -0000
Received: from user (sp-103-145.tm.net.my [210.186.103.145]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GY8005N7WSHL0@...> for agathiyar@yahoogroups.com; Tue, 25 Jun 2002 13:05:07 +0800 (SGT)
Date: Tue, 25 Jun 2002 13:04:55 +0800
Subject: Tamil Vegetables
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020625130455.01d02604@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18806


அன்பர்களே,

தமிழர்களின் உணவும் உண்ணும் முறைகளும் எவ்வளவிற்கு
மாறிவிட்டன? அவர்கள் உண்ட சாப்பாடு; அதில் பயன்படுத்திய
பொருள்கள்; அவற்றைச் சமைக்கும் விதம்; சாப்பிடும் விதம் -
எல்லாமே நிறைய மாறியிருக்கின்றன.
இப்போது நாம் உண்ணும் உருளைக்கிழங்கு, காரட்,
காலிஃப்லாவர், மிளகாய், முட்டைக்கோசு, பீட்ரூட்டு, பட்டர் பீன்ஸ்,
பறங்கிக்காய் - இன்னொரன்ன பல காய்கறிகள் சுமார் 500
ஆண்டுகளுக்கு முன்னர் ஏது?
அப்போது நமக்குத் தெரிந்த காய்கறிகளில் பல, இப்போது
வழக்கிழந்து போய்விட்டன.
அப்படி என்னென்னெ காய்கறிகளை உண்டோம்?
ஒரு பழைய நூலில் கண்டது:

வாழைக்காய், பலாக்காய், மாங்காய், அத்திக்காய், முருங்கைக்காய்,
நெல்லிக்காய், அருநெல்லிக்காய், புளியங்காய், மரியங்காய்(?), கடுக்காய்,
எலுமிச்சங்காய், நாரத்தங்காய் வகைகள், பழங்காய், தேங்காய்
போன்றவை மரங்களில் காய்ப்பவை.
கத்திரிக்காய், கக்கரிக்காய், வெண்டைக்காய், சுண்டைக்காய்,
கண்டங்கத்திரி, கறிமுள்ளி(?), மணத்தக்காளி, நறுமணத்தக்காளி(?),
கொட்டை அவரை, கொத்தவரை, விதுகங்காய்(?), பாவட்டங்காய்(?),
பாகற்காய், பழு பாகற்காய், மிதிபாகற்காய், களாக்காய்,
பூசணிக்காய் வகைகள், முலாங்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய்,
மொச்சைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், தூதுளங்காய், வழுதலங்காய்(?),
பயற்றன் காய், சுக்கன் காய்(?), மாதுளங்கய், ஊமத்தங்காய், விளாங்காய்,
பிரண்டை.

இந்த அட்டவணையில் கண்ட காய்களில் கேள்விக்குறியிடப்பட்டவை,
நான் கண்டிராதவை. சிலவற்றின் பெயர்களை வைத்தியநூல்களில்
படித்திருக்கிறேன்.

அன்புடன்

ஜெயபாரதி

===========================