From poo@... Tue Jun 25 01:14:39 2002
Return-Path: X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 Jun 2002 08:14:39 -0000
Received: (qmail 32657 invoked from network); 25 Jun 2002 08:14:39 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 25 Jun 2002 08:14:39 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.90) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 25 Jun 2002 08:14:39 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Tue, 25 Jun 2002 11:14:36 +0300
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([213.181.164.93]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Tue, 25 Jun 2002 11:14:17 +0300
Message-Id: <4.3.0.20020625111507.0307dd90@...>
X-Sender: poo/giasmd01.vsnl.net.in@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Tue, 25 Jun 2002 11:55:47 +0300
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Tamil Vegetables
In-Reply-To: <3.0.3.32.20020625130455.01d02604@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 18807
At 01:04 PM 06/25/2002 Tuesday +0800, you wrote:
>அன்பர்களே,
>
> தமிழர்களின் உணவும் உண்ணும் முறைகளும் எவ்வளவிற்கு
>மாறிவிட்டன? அவர்கள் உண்ட சாப்பாடு;அதில் பயன்படுத்திய
>பொருள்கள்; அவற்றைச் சமைக்கும் விதம்;சாப்பிடும் விதம் -
>எல்லாமே நிறைய மாறியிருக்கின்றன.
> இப்போது நாம் உண்ணும் உருளைக்கிழங்கு, காரட்,
>காலிஃப்லாவர், மிளகாய், முட்டைக்கோசு, பீட்ரூட்டு, பட்டர் பீன்ஸ்,
>பறங்கிக்காய் - இன்னொரன்ன பல காய்கறிகள் சுமார் 500
>ஆண்டுகளுக்கு முன்னர் ஏது?
> அப்போது நமக்குத் தெரிந்த காய்கறிகளில் பல, இப்போது
>வழக்கிழந்து போய்விட்டன.
> அப்படி என்னென்னெ காய்கறிகளை உண்டோம்?
> ஒரு பழைய நூலில் கண்டது:
>
> வாழைக்காய், பலாக்காய், மாங்காய், அத்திக்காய், முருங்கைக்காய்,
>நெல்லிக்காய், அருநெல்லிக்காய், புளியங்காய், மரியங்காய்(?), கடுக்காய்,
>எலுமிச்சங்காய், நாரத்தங்காய் வகைகள், பழங்காய், தேங்காய்
>போன்றவை மரங்களில் காய்ப்பவை.
> கத்திரிக்காய், கக்கரிக்காய், வெண்டைக்காய், சுண்டைக்காய்,
>கண்டங்கத்திரி, கறிமுள்ளி(?), மணத்தக்காளி, நறுமணத்தக்காளி(?),
>கொட்டை அவரை, கொத்தவரை, விதுகங்காய்(?),
இப்போது நினைவுக்கு வருவது மிதுக்கங்காய் (மி,வி போலி). இதில் காரைக்குடிப் பக்கம் மிதுக்க வற்றல்
செய்வார்கள். 5 ஆண்டுகள் முன்வரை சாப்பிட்டிருக்கிறேன்.
>பாவட்டங்காய்(?),
பாடவரங்காய் என்பதுதானோ இது? இதுவும் அவரையின் பெரிய வகை. எங்கள் ஊர்ச்சந்தைகளில்
பர்ர்த்திருக்கிறேன். சாப்பிட்டிருக்கிறேன்.
வழுதுணங்காயா? இது கத்திரியின் இன்னொரு வகை. சில பார்ப்பனர் விடுகளில் கத்திரிக்காய்க்கு
வழுதுணங்காய் என்றுதான் பெயர் சொல்லுவார்கள். இப்படிச் சில விதப்பான நல்ல தமிழ்ச் சொல்லாட்சிகள்
அவர்களிடம் உண்டு.
>பயற்றன் காய், சுக்கன் காய்(?),
சுண்டைக்காய் மாதிரியோ? சுக்கு என்பது பொடிப்பொடியாய் இருப்பதை அல்லவாகுறிக்கும். சுண்டு என்பதும்
சின்னஞ் சிறிய காய்களைக் குறிப்பதுதானே?
>மாதுளங்கய், ஊமத்தங்காய், விளாங்காய்,
>பிரண்டை.
மேலே சொன்னதில் கோவைக்காயைக் காணோமே? இப்பொழுதும் கோயம்பேடு பெருஞ் சந்தையில் சென்னையில்
கிடைக்கிறதே? அலது வேறு அதாவது பெயரில் அது இங்கே ஒளிந்து இருக்கிறதா?
> இந்த அட்டவணையில் கண்ட காய்களில் கேள்விக்குறியிடப்பட்டவை,
>நான் கண்டிராதவை. சிலவற்றின் பெயர்களை வைத்தியநூல்களில்
>படித்திருக்கிறேன்.
நீங்கள் எழுதியதைப் படித்தவுடன் நினைவு வந்தது. பெரு வெங்காயம், தக்காளி, மிளகாய் இல்லாமல், இந்தக்
காலத்தில் சமையல் செய்ய முடியுமோ?
தென் அமெரிக்காவின் பெருவுக்கும், மெக்சிகோவுக்கும் இந்த உலகமே கடன் பட்டிருக்கிறது. நாம் பயன்படுத்தும்
காய்கறிகளில் பல அங்கிருந்து புறப்பட்டு இசுபானியர்களால் உலகத்திற்கு அறிமுகப் படுத்தப் பட்டவை தான்.
அது போல காரச் சரக்குகள் (spices) பலவும் இசுப்பானியர், ஆலந்துக் காரர்களால் பிலிப்பைன் தீவுகள்,
இந்தோனேசியாவின் சில தீவுகள், நீயூ கினித் தீவில் இருந்து கொண்டு வரப்பட்டவை.
இவை இல்லாத சமையல் ஒரு 300/400 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் இருந்தது என்பதே வியப்பாக
இருக்கிறது. ஒரு சமயம் சென்னையில் உள்ள "பார்க் செராட்டன்" விருந்தினர் விடுதியில் இவையெல்லாம்
கலவாமல், எலுமிச்சை, மிளகு, நாரத்தைமற்ற பல உள்ளூர்ச் சரக்குகளை வைத்து ஓரளவு புல ஆய்வும் செய்து,
"பாண்டியர் குயனை" (குய்தல் = தாளித்தல், சமைத்தல்) (Pandiya cuisine) என்று நம்மூர்ப் பக்கத்து
வகையில் துவட்டல், வறுவல், பொரியல், தாளிப்பு என வெளுத்துக் கட்டினார்கள். அருமையான தலைமைச்
சமையற்காரர் அவர்களுக்குக் கிடைத்தார் போலும். ஒரு வாரம் நடந்தது. ஒரே கூட்டம். இது நடந்து நாலைந்து
ஆண்டுகள் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
அப்படியெல்லாம் சோதனை முறையில் செய்துபார்க்க தேர்ந்த சமையல் திறனாளர்அல்லவா வேண்டும்?
நானெல்லாம் வாயில் உமிழ் நீர் ஊறத் தேக்கிக் கொண்டு காத்திருக்கத்தான் முடியும் :-).
அன்புடன்,
இராம.கி.
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>===========================
>
>
>---------------------------------------------------------------------------------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>