From jaybee@... Tue Jun 25 06:35:31 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 Jun 2002 13:35:31 -0000
Received: (qmail 63631 invoked from network); 25 Jun 2002 13:35:30 -0000
Received: from unknown (66.218.66.216) by m8.grp.scd.yahoo.com with QMQP; 25 Jun 2002 13:35:30 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 25 Jun 2002 13:35:25 -0000
Received: from user (sp-103-119.tm.net.my [210.186.103.119]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GY900ED1KEYWA@...> for agathiyar@yahoogroups.com; Tue, 25 Jun 2002 21:35:25 +0800 (SGT)
Date: Tue, 25 Jun 2002 21:35:11 +0800
Subject: Food and Geo-politics - Re: [agathiyar] Tamil Vegetables
In-reply-to: <4.3.0.20020625111507.0307dd90@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020625213511.017ae95c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020625130455.01d02604@...>
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18812

At 11:55 AM 6/25/02 +0300, you wrote:
>At 01:04 PM 06/25/2002 Tuesday +0800, you wrote:
>
>>அன்பர்களே,
>>
>> தமிழர்களின் உணவும் உண்ணும் முறைகளும் எவ்வளவிற்கு
>>மாறிவிட்டன?
>>
>> கத்திரிக்காய், கக்கரிக்காய், வெண்டைக்காய், சுண்டைக்காய்,
>>கண்டங்கத்திரி, கறிமுள்ளி(?), மணத்தக்காளி, நறுமணத்தக்காளி(?),
>>கொட்டை அவரை, கொத்தவரை, விதுகங்காய்(?),
>
>இப்போது நினைவுக்கு வருவது மிதுக்கங்காய் (மி,வி போலி). இதில் காரைக்குடிப் பக்கம் மிதுக்க வற்றல்
>செய்வார்கள். 5 ஆண்டுகள் முன்வரை சாப்பிட்டிருக்கிறேன்.


செட்டிநாட்டுப் பக்கத்தில் சுண்டை வற்றல், வெண்டி வற்றல்,
கொத்தவரை வற்றல், மிதுக்கு வற்றல், மிளகாய் வற்றல் ஆகியவை
இப்போதும் கிடைக்கின்றன. மோர்மிளகாய் என்ற வற்றலும்
இருக்கிறது.


>>
>>பாகற்காய், பழு பாகற்காய், மிதிபாகற்காய், களாக்காய்,
>>பூசணிக்காய் வகைகள், முலாங்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய்,
>>மொச்சைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், தூதுளங்காய், வழுதலங்காய்(?),
>
>வழுதுணங்காயா? இது கத்திரியின் இன்னொரு வகை. சில பார்ப்பனர் விடுகளில் கத்திரிக்காய்க்கு
>வழுதுணங்காய் என்றுதான் பெயர் சொல்லுவார்கள். இப்படிச் சில விதப்பான நல்ல தமிழ்ச் சொல்லாட்சிகள்
>அவர்களிடம் உண்டு.


ஔவையார் பாடிய பழம்பாடல் ஒன்றில் 'வழுதுணங்காய்' என்றே
குறிப்பிட்டுள்ளார்.
வழுதுணங்காயைத் துகையலாக அரைப்பதும்உண்டு.


>
>நீங்கள் எழுதியதைப் படித்தவுடன் நினைவு வந்தது. பெரு வெங்காயம், தக்காளி, மிளகாய் இல்லாமல், இந்தக்
>காலத்தில் சமையல் செய்ய முடியுமோ?
>தென் அமெரிக்காவின் பெருவுக்கும், மெக்சிகோவுக்கும் இந்த உலகமே கடன் பட்டிருக்கிறது. நாம் பயன்படுத்தும்
>காய்கறிகளில் பல அங்கிருந்து புறப்பட்டு இசுபானியர்களால் உலகத்திற்கு அறிமுகப் படுத்தப் பட்டவை தான்.


இன்னும் பல காய்கறிகள் தென்னமெரிக்காவிலேயே
தங்கிவிட்டன. வேறெங்கும் கொண்டு செல்லப்படவில்லை.
அவையும் பரவியிருந்தால்.....?:-)

மிளகாயை இங்கு பரப்பிவிட்டதன் காரணம், நம்மையெல்லாம்
மிளகை அறவே நீக்கச்செய்வதற்காகத்தான். மிளகுக்கு உள்நாட்டுச்
சந்தையில் மவுசின்றிப் போகச்செய்து,அதனை அப்படியே வாங்கிக்
கொண்டுபோய் ஐரோப்பியச்சந்தையில் பெருவிலைக்கு விற்றனர்.
மிளகாய் இங்கு வருவதற்குமுன்னர் நடந்த கதையே வேறு
அல்லவா? மிளகின் விலை எடைக்கு எடை பொன்னாக இருந்தது.
'யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து
கறியொடு பெயரும்' என்று சங்கப்பாடல் கூறுகிறதே. அந்த மாதிரிப்பட்ட
விலையைக் குறைத்து மிளகை மலிவாக்கவே நம் தலையில் மிளகாயை
அரைத்துவிட்டனர். மிளகாய்க்கு அவர்கள்தந்த பெயரே 'சிலி
நாட்டு மிளகு' என்பதுதான் - Chile Pepper. அதுதான் சுருங்கி
Chilli-யாகிவிட்டிருக்கிறது.

ஏதோ ஒரு மாதிரியான உணவியல் புரட்சி நடந்திருக்கிறது.
பாருங்கள். உருளைக்கிழங்கை ஐரோப்பியர்கள் முதன்முதலில்
சாப்பிடத்தெரியாமல் அதன் செடிப்பகுதியைச் சாப்பிட்டுவிட்டு,
அதனை ஒரு விஷத் தாவரமாக பிரகடனப்படுத்திவிட்டார்கள்.
அதை விளைவிப்பதுகூட சட்டவிரோதமாக இருந்திருக்கிறது.
எப்படியோ ஃபிரான்ஸில்தான் தைரியமாக இதைப் பயிர்செய்ய
ஆரம்பித்தார்கள். அதன்பின்னர் உருளைக்கிழங்கே ஐரோப்பியர்களின்
முக்கிய உணவாகிவிட்டது. குறிப்பாக ஏழைகளின் பிரத்தியேக
உணவாகவும் மாறிவிட்டது.
ரஷ்யாவின் தேசீய பானமாக உருளைக்கிழங்கிலிருந்து
வடிக்கப்பட்ட 'Vodka' ஆகிவிட்டது.
அயர்லாந்தின் மிக முக்கிய பண்டமாக உருளைக்கிழங்கு
விளங்கியது. உருளைக்கிழங்கைத்தவிர வேறெதையும் பயிர்
செய்யக்கூடாது என்று ஆங்கிலேயர்கள் தடை செய்துவைத்திருந்தனர்.
ஆங்கிலேயர்களின் வழக்கமே அதுதானே.அவர்கள் சாப்பிடும்
தேநீருக்காக ஒரு நாடு; காப்பிக்கு மற்றொன்று; சாக்லேட்டுக்கு
வேறொன்று; ரப்பருக்கு ஒன்று; பருத்திக்கு இன்னொன்று,
சணலுக்கு வேறொன்று...இப்படித்தான். அதுபோல அவர்களின்
உருளைக்கிழங்குக்கு அயர்லாந்து ஒரு பெரிய உருளைக்கிழங்கு
பண்ணையாக விளங்கியது.
ஆனால் அந்த நாட்டில் Potato Blight என்னும் உருளைக்கிழங்கு
நோய் ஏற்பட்டபோது அந்த நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்து
ஆயிரக்கணக்கான மக்கள் இறக்க நேரிட்டது.
ஆகவே லட்சக்கணக்கில் அயரிஷ்காரர்கள் வட அமெரிக்காவில்
குடியேறினார்கள். அந்த உருளைக்கிழங்குநோய் மட்டுமில்லாதிருந்தால்
கென்னடியெல்லாம் யூ எஸ் ஜனாதிபதியாகியிருக்கமாட்டார். ஏனெனில்
அவருடைய ஆட்கள் அங்கு வந்திருக்கமாட்டார்கள்.
Geo-politics என்பதை உணவுப்பொருட்களும் பெருமளவில்
பாதித்துள்ளன.
ஸ்பெயின், போர்த்துகல், பிரிட்டன், உலாந்தா ஆகியோருக்கிடையில்
ஏற்பட்ட சாம்ராஜ்யப்போட்டிக்கு ஆதிகாரணம் மிளகுதான். தேநீரையும்
மறக்கக்கூடாது.

அன்புடன்

ஜெயபாரதி



>அது போல காரச் சரக்குகள் (spices) பலவும் இசுப்பானியர், ஆலந்துக் காரர்களால் பிலிப்பைன் தீவுகள்,
>இந்தோனேசியாவின் சில தீவுகள், நீயூ கினித் தீவில் இருந்து கொண்டு வரப்பட்டவை.
>
>இவை இல்லாத சமையல் ஒரு 300/400 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் இருந்தது என்பதே வியப்பாக
>இருக்கிறது.

>அன்புடன்,
>இராம.கி.
>
>>அன்புடன்
>>
>>ஜெயபாரதி
>>
>>===========================