From jaybee@... Tue Jun 25 07:04:45 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 Jun 2002 14:04:45 -0000
Received: (qmail 96963 invoked from network); 25 Jun 2002 14:04:45 -0000
Received: from unknown (66.218.66.218) by m12.grp.scd.yahoo.com with QMQP; 25 Jun 2002 14:04:45 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 25 Jun 2002 14:04:40 -0000
Received: from user (sp-103-145.tm.net.my [210.186.103.145]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GY9000O6LROB2@...> for agathiyar@yahoogroups.com; Tue, 25 Jun 2002 22:04:39 +0800 (SGT)
Date: Tue, 25 Jun 2002 22:04:27 +0800
Subject: #2 - Re: [agathiyar] Tamil Vegetables
In-reply-to: <4.3.0.20020625111507.0307dd90@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020625220427.017b5cfc@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020625130455.01d02604@...>
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18813

At 11:55 AM 6/25/02 +0300, you wrote:
>At 01:04 PM 06/25/2002 Tuesday +0800, you wrote:
>
>>அன்பர்களே,
>>
>
>நீங்கள் எழுதியதைப் படித்தவுடன் நினைவு வந்தது. பெரு வெங்காயம், தக்காளி, மிளகாய் இல்லாமல், இந்தக்
>காலத்தில் சமையல் செய்ய முடியுமோ?
>தென் அமெரிக்காவின் பெருவுக்கும், மெக்சிகோவுக்கும் இந்த உலகமே கடன் பட்டிருக்கிறது. நாம் பயன்படுத்தும்
>காய்கறிகளில் பல அங்கிருந்து புறப்பட்டு இசுபானியர்களால் உலகத்திற்கு அறிமுகப் படுத்தப் பட்டவை தான்.
>அது போல காரச் சரக்குகள் (spices) பலவும் இசுப்பானியர், ஆலந்துக் காரர்களால் பிலிப்பைன் தீவுகள்,
>இந்தோனேசியாவின் சில தீவுகள், நீயூ கினித் தீவில் இருந்து கொண்டு வரப்பட்டவை.
>
>இவை இல்லாத சமையல் ஒரு 300/400 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் இருந்தது என்பதே வியப்பாக
>இருக்கிறது.


நான் எழுதிய அட்டவணையில் காணப்படாத காய்கறிகள்
இன்னும் பல இருந்திருக்கக்கூடும்.
அதில் காய்கள்தாம் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. கிழங்கு
வகைகள், கீரை வகைகள், பழங்கள், தானியங்கள் போன்றவை
அதில் இல்லை.
பலமாதிரியான உணவுப் பக்குவமுறைகளும் இருந்திருக்கின்றன.
பிரண்டலைத் துகையல் செய்ய இப்போது யாருக்குத் தெரியும்?
வேப்பம்பூ ரசம்?
'ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை' என்ற
பழமொழி உண்டு. அப்படியானால் இலுப்பைப்பூவை எப்படி சக்கரைக்குப்
பதிலாகப் பயன்படுத்தியிருப்பார்கள்? அல்லது இலுப்பைப்பூவிலிருந்து
ஏதாகிலும் சக்கரை தயாரித்தார்களா?
புளியங்கொழுந்துகூட சமையலுக்கு ஆகியிருக்கிறது.
சிவசங்கரி தம்முடைய புத்தகம் ஒன்றில்சாப்பாட்டிற்காக
புளியங்கொழுந்தைப் பறித்துக்கொண்டிருந்த ஏழைக்கிழவியைப்
பற்றிக்குறிப்பிட்டிருக்கிறார்.
கொள் என்னும் தானியம் குதிரையின் உணவாகவே பயன்
படுத்தப்படுகிறது. ஆனால் மனிதர்கள் சாப்பிடும் ரிசிப்பி ஒன்றும்
உண்டு. கொள்ளுக்குழம்பு என்று ஒரு வகைக்குழம்பு இருக்கிறது.
கோழிக்குழம்பைப்போலவே இருக்கும்.
அகவே நானூறு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வேறுவகையான
பக்குவமுறைகளும் உணவுப்பொருட்களும் நிறைய இருந்திருக்கும்.
இப்போதுதான் ஆப்பம் சுடுவதுகூட மறைந்துவருகிறதே? அப்படி
மறைந்துவரும் நளபாக பீம பாகக் கலையைப் பற்றி எழுதினாலோ
அகத்தியம் ஒரே சமையல் வாடை அடிப்பதாகச்சொல்லிவிட்டு, ஏளனமாக
வெண்பாப் பாடிவிட்டு, பகிரங்கமாக அன்சப்ஸ்க்ரைப் செய்வதாக
அறிவித்துவிட்டு ஓடிப்போய்விடுகிறார்கள்.

அன்புடன்

ஜெயபாரதி



ஒரு சமயம் சென்னையில் உள்ள "பார்க் செராட்டன்" விருந்தினர் விடுதியில் இவையெல்லாம்
>கலவாமல், எலுமிச்சை, மிளகு, நாரத்தை மற்ற பல உள்ளூர்ச் சரக்குகளை வைத்து ஓரளவு புல ஆய்வும் செய்து,
>"பாண்டியர் குயனை" (குய்தல் = தாளித்தல்,சமைத்தல்) (Pandiya cuisine) என்று நம்மூர்ப் பக்கத்து
>வகையில் துவட்டல், வறுவல், பொரியல், தாளிப்பு என வெளுத்துக் கட்டினார்கள். அருமையான தலைமைச்
>சமையற்காரர் அவர்களுக்குக் கிடைத்தார் போலும். ஒரு வாரம் நடந்தது. ஒரே கூட்டம். இது நடந்து நாலைந்து
>ஆண்டுகள் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
>
>அப்படியெல்லாம் சோதனை முறையில் செய்துபார்க்க தேர்ந்த சமையல் திறனாளர் அல்லவா வேண்டும்?
>நானெல்லாம் வாயில் உமிழ் நீர் ஊறத் தேக்கிக் கொண்டு காத்திருக்கத்தான் முடியும் :-).
>
>அன்புடன்,
>இராம.கி.
>
==================