From poo@... Tue Jun 25 07:40:56 2002
Return-Path:
X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 Jun 2002 14:40:54 -0000
Received: (qmail 76590 invoked from network); 25 Jun 2002 14:40:53 -0000
Received: from unknown (66.218.66.218) by m9.grp.scd.yahoo.com with QMQP; 25 Jun 2002 14:40:53 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.90) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 25 Jun 2002 14:40:54 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Tue, 25 Jun 2002 17:40:52 +0300
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.55.11]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Tue, 25 Jun 2002 17:40:50 +0300
Message-Id: <4.3.0.20020625180434.03088b40@...>
X-Sender: poo/giasmd01.vsnl.net.in@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Tue, 25 Jun 2002 18:22:16 +0300
To: agathiyar@yahoogroups.com
Subject: #2 - Re: [agathiyar] Tamil Vegetables
In-Reply-To: <3.0.3.32.20020625220427.017b5cfc@...>
References: <4.3.0.20020625111507.0307dd90@...> <3.0.3.32.20020625130455.01d02604@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy
X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 18816

At 10:04 PM 06/25/2002 Tuesday +0800, you wrote:

> அகவே நானூறு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வேறுவகையான
>பக்குவமுறைகளும் உணவுப்பொருட்களும் நிறைய இருந்திருக்கும்.
>இப்போதுதான் ஆப்பம் சுடுவதுகூட மறைந்துவருகிறதே? அப்படி
>மறைந்துவரும் நளபாக பீம பாகக் கலையைப் பற்றி எழுதினாலோ
>அகத்தியம் ஒரே சமையல் வாடை அடிப்பதாகச்சொல்லிவிட்டு, ஏளனமாக
>வெண்பாப் பாடிவிட்டு, பகிரங்கமாக அன்சப்ஸ்க்ரைப் செய்வதாக
>அறிவித்துவிட்டு ஓடிப்போய்விடுகிறார்கள்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாதீர்கள், அய்யா! நீங்கள் சொல்வது போல் அவரவர்க்கு அதது. இதில் தப்பென்ன
இருக்கிறது? நமக்குத் தெரிந்ததை மற்றவரோடு பரிமாறிக் கொள்வதில் ஒரு சொகம் இருக்கிறது. ஒரு
புரிதல் இருக்கிறது. நாலுபேருக்குத் தெரிகிறது. அதனால் செய்கிறோம். இப்படி நம் முன்னோர்கள்
அவர்களுக்குத் தெரிந்ததை நமக்குச் சொல்லிக் கொடுக்காவிட்டால் வரலாறும், பண்பாடும் என்ன ஆயிருக்கும்?
நம்மால் தொடருமா? அதனால் தொடருங்கள். படிப்பதற்குப் பலர் இருக்கிறோம். அவ்வப்போது எங்களுக்குத்
தெரிந்ததையும் சொல்கிறோம்.

உங்களைப் போல் எனக்கும் இந்த வெறுமை சில பொழுது வருவதுண்டு. அந்தப் பொழுதுகளில் சொற்பிறப்புகள்
பற்றி மடலாடு குழுக்களில் பேசுவது தவிர்க்கப் படவேண்டிய ஒன்றோ என்று கூட நான் எண்ணுவது உண்டு. இந்தப்
புலனங்களில் கலந்து கொள்பவர்கள் மிகக் குறைவாக இருக்கிறார்கள். விரலால் எண்ணிவிடலாம். இது ஏதோ
உலர்ந்த, வரட்டுத் தனமான, அந்தர வானத்தில் வேடிக்கை காட்டுகிற, இயந்திர மயமான, உயர் பண்டு
(high funda) நுட்பாடல் என்பது போலச் சிலருக்குத் தோற்றக் கூடும். மற்றவர் பொறுமையைச்
சோதிப்பதாகவும் சிலர் எண்ணக் கூடும்.

"இது தேவை தானா? ஏதோ வேலையற்றுப் போய், தமிழ்ச் சொற்களின் பிறப்பையும், மற்ற
இந்தையிரோப்பிய சொற்களுக்கு இணையையும் தேடிப் பிடித்து விவரித்துக் கொண்டு இருக்கிறோமே? கூடவே
அவ்வப்போது தன்னிலை விளக்கம் வேறு சொல்ல வேண்டியிருக்கிறதே! ஏற்கனவேஅகலமாகத் தமிழ்நாடெங்கணும்
நீக்கமறப் பரவி ஆழ வேர்விட்ட ஆத்திரேலிய வேலிக் கருவை போல ஆழப் பதிந்துவிட்ட மொழியியற்
கொள்கைகளைப் பிடுங்கி எறிந்து தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் தொப்புள்
கொடித் தொடர்பு உண்டு என்று நிறுவி, "ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி" என்று சொல்லி மறுபடியும் பழைய
மரங்களை நடச் சொல்லிப் பேணுவதில் என்ன ஆகப் போகிறது? பாலையும் செயற்கையும் போதும்
என்பவர்களிடம், குறிஞ்சியையும், முல்லையையும் மருதத்தையும் நெய்தலையும் பேசமுற்படுவது ஒரு முட்டாள்தனம்
இல்லையா? மரம் வெட்டுவதே தொழிலாகிப் போன கூட்டத்திடம் மரத்தின் பயனைக் கத்திச் சொல்வதில்
பயனென்ன? ஏற்கனவே வரைமுறையற்ற தங்கள் அதிகாரத்தாலும், உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசும்
வலக்காரத்தாலும், தலை கீழ் ஆய்வையே தலை மேற் கொண்டு "தேவமொழி, ஆட்சிமொழி" என்றெல்லாம்
வல்லாண்மை செய்பவர்கள் முன்னால், நூற்றாண்டுகளாக விவரம் அறியாத பலரும் "சாமி சொல்றாருடா,
கேட்டுக்க!" என்று நெடுஞ் சாண் கிடையாகவிழுந்து இடுப்பில் துண்டைக் கட்டி அடி பணிந்து ஊழியம் புரிந்து
கொண்டு இருக்கும் நிலையில், "உனக்கும் கொஞ்சம் மானம் உண்டு; இப்படி அடிபணிந்து ஊழியம் செய்யவேண்டிய
கட்டாயம் உனக்குக் கிடையாது" என்று சொல்லுவது தேவை தானா? இதை நிறுத்திவிட்டு பாக்கள், நடைமுறைச்
செய்திகள், அரசியல், திரைப்படம், பொழுது போக்குப் புலனங்கள் என்று பலரைப் போல எழுதிவிடலாமா?"
என்று ஓரோவழி எண்ணுவது உண்டு.

இருந்தாலும் உழுவை நடந்து கொண்டு இருக்கிறது.

ஒரு இலையில் பலவாரங்கள் (பல + ஆரங்கள் = பலவாரங்கள்=பலகாரங்கள்; ஆர்தல் = உண்ணுதல்; நிறைதல்;
பலவாரங்கள் = பல உண்ணு பொருட்கள், வகரம் ககரமாக மாறுவது போலி.) வைத்து விருந்தோம்புகிறோம்.
எல்லாம் ஒரே சுவையில் இருந்தால் திகட்டி விடாது? நடுவே கொஞ்சம் காரசாரம் சேர்த்து வெவ்வேறு
வகையில் படைக்க எண்ணுகிறோம் அல்லவா? அதுபோல சுவையாக அவ்வப் பொழுது, இந்த சொல்லாய்வுகளைக்
கட்டுரைக்கும் போது, அதாவது நமக்குத் தெரிந்த, தெரிய வருகிற மொழி பற்றிய செய்திகளை
மற்றவரோடு பகிர்ந்து கொள்ளும் போது, சிலபேராவது இதில் ஆர்வம் கொள்ளுவார்கள் என்றும், அவர்கள்
கையாளும் மொழியில் ஆளுமை கூடும் என்றும் எண்ணி அவ்வப்போது எழுதிவருகிறேன். எவ்வளவு நாள் இப்படிச்
செய்வேன் என்று தெரியாது இருக்கிறேன்.

இதற்கிடையில் காலம் நகர்ந்து கொண்டுஇருக்கிறது. எனக்கும் அகவை கூடிக் கொண்டே போகிறது.

அன்புடன்,
இராம.கி.

>
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>
>
>ஒரு சமயம் சென்னையில் உள்ள "பார்க் செராட்டன்" விருந்தினர் விடுதியில் இவையெல்லாம்
> >கலவாமல், எலுமிச்சை, மிளகு, நாரத்தை மற்ற பல உள்ளூர்ச் சரக்குகளை வைத்து ஓரளவு புல ஆய்வும் செய்து,
> >"பாண்டியர் குயனை" (குய்தல் = தாளித்தல், சமைத்தல்) (Pandiya cuisine) என்று நம்மூர்ப் பக்கத்து
> >வகையில் துவட்டல், வறுவல், பொரியல்,தாளிப்பு என வெளுத்துக் கட்டினார்கள். அருமையான தலைமைச்
> >சமையற்காரர் அவர்களுக்குக் கிடைத்தார் போலும். ஒரு வாரம் நடந்தது. ஒரே கூட்டம். இது நடந்து நாலைந்து
> >ஆண்டுகள் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
> >
> >அப்படியெல்லாம் சோதனை முறையில் செய்துபார்க்க தேர்ந்த சமையல் திறனாளர் அல்லவா வேண்டும்?
> >நானெல்லாம் வாயில் உமிழ் நீர் ஊறத் தேக்கிக் கொண்டு காத்திருக்கத்தான்முடியும் :-).
> >
> >அன்புடன்,
> >இராம.கி.
> >
>==================
>
>
>---------------------------------------------------------------------------------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>