From poo@... Tue Jun 25 11:08:16 2002
Return-Path: X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 Jun 2002 18:08:16 -0000
Received: (qmail 74133 invoked from network); 25 Jun 2002 18:08:15 -0000
Received: from unknown (66.218.66.218) by m6.grp.scd.yahoo.com with QMQP; 25 Jun 2002 18:08:15 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.90) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 25 Jun 2002 18:08:15 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Tue, 25 Jun 2002 21:08:13 +0300
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([213.181.162.249]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Tue, 25 Jun 2002 21:08:10 +0300
Message-Id: <4.3.0.20020625214805.02f23f00@...>
X-Sender: poo/giasmd01.vsnl.net.in@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Tue, 25 Jun 2002 21:49:43 +0300
To: agathiyar@yahoogroups.com
Subject: kaNNoottam
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 18819
அன்பிற்குரிய யாவகக் குமாருக்கு,
கண்ணோட்டம் பற்றி திரு.கணேசனோடு உரையாடிக் கொண்டிருந்தீர்கள். அப்பொழுது வேறு ஒரு புலனத்தில்
ஈடுபட்டு இருந்ததால் உள்ளே நுழைய வில்லை. இப்பொழுது சுணங்கிப் பேசுவதற்கு மன்னியுங்கள்.
தமிழில் கண்ணுக்கு விழி, பார்வு, கண், ஞா என நாலு முகன்மையான சொற்கள் உண்டு.
கண்ணைத் திறந்து விரித்துப் பார்ப்பதால் அது விழி.
வய்>வெய்>விய்>வியல் = விரிவு, அகலம்
விய்>வியி>விழி = விரிவுறச் செய்
கண்ணைத் திறந்து அகன்று பரவுவதால் அது பார்வு
பா>பாஅர்>பார்= பரப்பு
பார்+வு >பார்வு>பார்வை; தெலுங்கில் பாருவ என்று வரும்.
வெள்ளைக்கு நடுவே கரும் புள்ளியாய் இருப்பதால் அது கண்
கல்>கள்>கண்
யா என்பதும் கருமையைக் குறிக்கும் இன்னொரு வேர். (யா மரம் கருந்தாள் கொண்ட மரம். அது ஆச்சா மரம்
என்றும் சால மரம் என்றும் பெயர் கொள்ளும். யா மரம் நிறைந்து கிடந்த தீவு தான் உங்கள் யாவகம். யாவின்
இன்னொரு பெயரான சால் என்பதை வைத்துத்தான் சாலி என்ற இன்னொரு பெயர் யாவகத்திற்கு வந்தது.)
யா என்பது மூக்கொலி கலந்து ஞா என்றும்,நா என்றும் ஒசையில் திரியும்
யா>ஞா>நா
ஞா>ஞானம்
ஞா>ஞாவகம்
உயிர்த்திரிவில் ஞா>ஞோ என்றும் திரியும் ஞோ>know, gno
இது *யால்>*ஞால்>*நால் என்றும் *ஞாள்>*நாள் என்றும் விரியும்
நாள்+து>நாட்டு+அம்>நாட்டம்
அதே போல நோ>நோல்>நோக்கு = பார்வை, அறிவு என்று விரியும்
என்ற அடிப்படைப் பொருளில் இருந்து சிறிது விலகி கண்கொண்டு அன்புடன் நோக்குதல், அருள் உணர்வொடு
நோக்குதல், அருள் உணர்வொடு இரங்குதல், இரங்குதல் என்ற வகையில் பொருள் விரிவாக்கங்களைப் பெறும்.
நோடு என்ற தனிச் சொல் சங்க இலக்கியத்தில் எங்கும் கிடையாது. நோட்டம் இருக்கிறது. நோட்டம் =
ஆராய்கை, உற்றுப் பார்த்தல். (பாவாணர் உள் நோட்டகர் - inspector என்ற சொல்லை உருவாக்கினார்.)
ஆனால் நோடுதல் என்ற வினை திருக்குறளில் இருக்கிறது.
கீழே கண்ணோட்டம் என்ற அதிகாரத்தில் உள்ள பத்துக் குறளையுமே கொடுத்திருக்கிறேன். இந்தக் குறள்கள்
நமக்கு இந்தப் பொருள் விரிவாக்கங்களை விளக்கும்.
முதற்குறளில் அழகு, அலங்காரம் என்ற பொருளைக் குறிக்கும் சொல்லாகக் காரிகை வருவது சரிதான். இந்தக்
கண்ணோட்டம் என்பது ஒரு வகையில் பார்த்தால் benevelont view என்று சொல்ல முடியும். நம்மை அருள்
நிறைந்த முனிவர் பார்க்கிறார். நம்மை உற்றுப் பார்க்கிறார். இந்த உற்றுப் பார்த்தல் தானே
inspection. அந்தப் பார்வை நம்மேல் குற்றம் சொல்வதற்கு இல்லை. நம்மைக் கனிவோடு பார்த்து நம்மை
நல்வழிப் படுத்துவதுபோல ஒரு அணைத்துக்கொண்ட பார்வை. அதைத்தான் இந்தக் கண்ணோட்டம் என்ற சொல்
உறுதிப் படுத்துகிறது.
இந்தக் குறள்கள் எல்லாம் அரசியல் என்ற உறுப்பியலில் வருகின்றன. அரசனுக்கு இந்த benevelont
viewpoint இருக்க வேண்டும் என்று வள்ளுவன் கூறுகிறான்.
தமிழில் பலப் பல என்றால் அழுத்தமான கருத்தாக மிகுதியைக் குறிக்கும் இரட்டைக் கிளவி. ஒரே சொல்லை
இரண்டுமுறை அடுக்கலாம்; அல்லது ஒரே பொருள் கொண்ட இரண்டு சொற்களை அடுத்தடுத்துச் சொல்லி ஒரு புதிய
பொருளைக் கொண்டு வரலாம். கழி பெரும் என்பது இந்த வகைச் சொல்லாட்சி. மிகப் பெரிய என்ற பொருள்.
இதே போல கண் நோட்டம் என்பதும் ஒருவகையில் இரட்டைக் கிள்விதான். ஆனாலும் பாவிக்கும் வகையில் இந்த
அருட்பார்வையும் உற்றுப் பார்த்தலும் கலந்தே விரவி நிற்கின்றன.
அரசன் அரசைக் கையாளுவதில் பல உத்திகளைக் கொண்டாலும், இந்தக் கண்ணோட்டம் என்ற அருள் நிறைந்த உற்றப்
பார்வை கொண்டவனாக இருக்க வேண்டும்; அப்படி இருப்பதால் தான் இந்த உலகு அழியாது இருக்கிறது என்பதே
முதல் குறளின் பொருட்பாடு.
571 கண் நோட்டம் என்னும் கழி பெரும் காரிகை உண்மையான் உண்டு
இவ்வுலகு
இரண்டாவது குறளும். உலகியல் என்பது இத்தகைய அருட்பார்வையில் தான் இருக்கிறது. இது இல்லையென்றால்
வெறுமே நிலத்துக்குப் பாரம் என்கிறது.
572 கண் நோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார்
உண்மை நிலக்குப் பொறை
மூன்றாவது குறள் மிகச் சிறப்பானது. இங்கே கண்ணோட்டத்திற்கு ஒரு உவமை தரப் படுகிறது. ஒரு பாடகர்
பாடுகிறார்; அந்தப் பாடலுக்கு இசைவாகப் பண் இல்லையென்றால் என்னாகும்? "எதுக்கடா வந்தோம்?"னு ஆயிடும்
இல்லையா?
பாட்டோட இசையிறதுனா ஒத்துப் போறது; இனிமையா வர்றது, காதுக்குச் சொகமா இருக்கிறதுன்னு பொருள்
விரியுது பாருங்க; அது மாதிரி அருட்பார்வையில்லைன்னா கண் எதற்குன்னு ஒரே போடாப் போடுறார் வள்ளுவர்.
இங்கே பாடற்கு இசைவு என்பது கண்ணோட்டத்திற்கு உவமை.
573 பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என்னாம் கண் நோட்டம் இல்லாத
கண்
நாலாவது குறள் கொஞ்சம் வலிதானது. "பார்த்த அளவிலே உற்றும் பார்த்து, அருளும் காட்டலைன்னா, முகத்துலே
கண்ணு இருந்து என்ன் செய்ய? அது இல்லாமலேபோகலாமே?" ன்னு ஒரு இடி இடிக்கிறார் வள்ளூவர்.
574 உள போல் முகத்து எவன் செய்யும்அளவினால் கண் நோட்டம் இல்லாத
கண்
ஐந்தாவது குறள் நாலாவது குறளை இன்னும் கூட வலியுறுத்துது. கண்ணுக்கே அழகு (அணிகலனும் காரிகையும் ஒண்ணு
என்பது இந்தக் குறளால் புலப்படும்) கண்ணோட்டம் தான்; அது இல்லைன்னா, அது குழிக்குள்ளே இருக்கிற ஒரு புண்.
575 கண்ணிற்கு அணிகலம் கண் நோட்டம் அஃது இன்றேல் புண் என்று உணரப் படும்
கண்ணோடும் போது கண் அசைகிறது; விழி துடிக்கிறது; இமை திறந்து மூடுகிறது. மொத்தத்தில் இயங்குகிறது.
"கண்ணோடாமல் இருக்கிறவங்க, மண்ணுக்குள் புதைந்து இயைந்து அசையாம இருக்குற மரத்தை போல இருக்குறாங்க"
என்று சொல்கிறார் வள்ளுவர்.
576 மண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணோடு இயைந்து கண் நோடாதவர்
அடுத்த குறள் கிட்டத்தட்ட ஐந்தாவது போல் தான்.
கண்ணோட்டம் இல்லைன்னா கண்ணில்லை;
கண்ணிருக்குறவங்களுக்கு கண்ணோட்டம் இல்லாம இருக்காது.
577 கண் நோட்டம் இல்லவர் கண்ணிலர் கண் உடையார் கண் நோட்டம் இன்மையும் இல்.
அடுத்த குறள் மானகைக்காரங்களுக்கு (managers) முகமையானது. நீங்க செய்யுற கருமம், காரியம் குலையாம
நடக்கணும்; அதே சமயம் கீழே இருக்குறவங்களைக் கண்ணோட்டத்தோட நடத்தணும். அப்படி இருந்தா
உங்களுக்குத்தாங்க இந்த உலகம். நீங்க சொல்ற பேச்சுக்கு உலக்ம் கட்டுப்படும்" னு ஆணித்தரமாகச்
சொல்லுகிறார் வள்ளுவர்.
578 கருமம் சிதையாமல் கண் நோட வல்லார்க்கு உரிமை உடைத்து இவ்வுலகு
அடுத்த குறள் கிட்டத்தட்ட ஏசு சொல்ற மாதிரி, "ஒரு கன்னதுலே அடிச்சா, இன்னொரு கன்னத்தைக் காட்டு"
ங்குற வரிதி (ரீதி) லே போகும் குறள். "உங்களை விலக்கி ஒதுக்குற குணம் உள்ளவரிடமும், அருட்பார்வை
செலுத்தி, அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்துக் கொண்டு போகும் குணமே தலையாயது"
579 ஒறுத்தூற்றும் பண்பினார் கண்ணும் கண் நோடி பொறுத்து ஆற்றும் பண்பே தலை
பத்தாவது குறள் எல்லாருக்கும் தெரிஞ்ச குறள். சாக்ரடீசு இந்த நயத் தக்க நாகரிகத்துக்கு ஒரு நல்ல எடுத்துக்
காட்டு.
"ஏதென்சு நகரத்து எழுச்சிமிகு வாலிபர்களே! ஓடி வாருங்கள், ஓடி வாருங்கள்! வீரம் விலை போகாது,
விவேகம் விலைக்கு வராவிட்டால் .... "
விட்டாக் கலைஞரின் முழு நாடகத்தையும்எழுதிவிடலாம் போலக் கொஞ்சம் கொஞ்சமா நினைவு வருது.
580 பெயக் கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத் தக்க நாகரிகம் வேண்டுபவர்.
கண்ணோட்டம் என்பது இந்த நாகரிகம் தான். அருட்பார்வைதான், நல்லதே நினைக்கும் ஒரு நோட்டம் தான். "இது
அத்தனையும் நம்மை ஆளும் தலைவனுக்கு, அரசனுக்கு, இந்தக் கால முதல்வனுக்கு இருக்க வேண்டும்" என்று நான்
சொல்லலைங்க, வள்ளுவர் சொல்றார்.