From jaybee@... Tue Jun 25 16:50:42 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 Jun 2002 23:50:42 -0000
Received: (qmail 65113 invoked from network); 25 Jun 2002 23:50:42 -0000
Received: from unknown (66.218.66.216) by m13.grp.scd.yahoo.com with QMQP; 25 Jun 2002 23:50:42 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 25 Jun 2002 23:50:41 -0000
Received: from user (sp-103-92.tm.net.my [210.186.103.92]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GYA00HIHCWBVA@...> for agathiyar@yahoogroups.com; Wed, 26 Jun 2002 07:50:37 +0800 (SGT)
Date: Wed, 26 Jun 2002 07:49:16 +0800
Subject: Terminology of methods in Tamil Cookery - Re: #2 - Re: [agathiyar] Tamil Vegetables
In-reply-to: <4.3.0.20020625180434.03088b40@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020626074916.01905094@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020625220427.017b5cfc@...> <4.3.0.20020625111507.0307dd90@...> <3.0.3.32.20020625130455.01d02604@...>
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18821

At 06:22 PM 6/25/02 +0300, you wrote:
>At 10:04 PM 06/25/2002 Tuesday +0800, you wrote:
>
>> அகவே நானூறு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வேறுவகையான
>>பக்குவமுறைகளும் உணவுப்பொருட்களும் நிறைய இருந்திருக்கும்.
>>இப்போதுதான் ஆப்பம் சுடுவதுகூட மறைந்துவருகிறதே? அப்படி
>>மறைந்துவரும் நளபாக பீம பாகக் கலையைப் பற்றி எழுதினாலோ
>>அகத்தியம் ஒரே சமையல் வாடை அடிப்பதாகச்சொல்லிவிட்டு, ஏளனமாக
>>வெண்பாப் பாடிவிட்டு, பகிரங்கமாக அன்சப்ஸ்க்ரைப் செய்வதாக
>>அறிவித்துவிட்டு ஓடிப்போய்விடுகிறார்கள்.
>
>அதையெல்லாம் கண்டுகொள்ளாதீர்கள், அய்யா! நீங்கள் சொல்வது போல் அவரவர்க்கு அதது. இதில் தப்பென்ன
>இருக்கிறது? நமக்குத் தெரிந்ததை மற்றவரோடு பரிமாறிக் கொள்வதில் ஒரு சொகம் இருக்கிறது. ஒரு
>புரிதல் இருக்கிறது. நாலுபேருக்குத் தெரிகிறது. அதனால் செய்கிறோம். இப்படி நம் முன்னோர்கள்
>அவர்களுக்குத் தெரிந்ததை நமக்குச் சொல்லிக் கொடுக்காவிட்டால் வரலாறும்,பண்பாடும் என்ன ஆயிருக்கும்?
>நம்மால் தொடருமா? அதனால் தொடருங்கள். படிப்பதற்குப் பலர் இருக்கிறோம். அவ்வப்போது எங்களுக்குத்
>தெரிந்ததையும் சொல்கிறோம்.


இப்படியேதான் மனதைத் தேற்றி உறுதிப்படுத்திக்கொண்டு
இதோ எழுதியாச்சு 4000க்கும் மேல்:-)
அரியண ராயர் ஆரையைப் பற்றி ஔவையைப்போல
வெண்பாப் பாடியுள்ளார்.
ராம.கிருவுக்கும் அரியண ராயருக்கும் என் நன்றி.

தொடர்கிறேன்.......

சமையல் சம்பந்தமான பக்குவமுறைகள் நிறைய நம்மிடையே
இருந்திருக்கின்றன என்று சொன்னேன். அவை பற்றிய தனிச்சொற்களைப்
பட்டியல் இடுகிறேன்:

பொங்கல்,
பொரித்தல்,
வறுத்தல்,
சுடுதல்,
வாட்டுதல்,
தீய்த்தல்,
கருக்குதல்,
வேகவைத்தல்,
அவித்தல்,
காய்ச்சுதல்,
வற்றவைத்தல்,
காயவைத்தல்,
உலர்த்தல்,
நெறிக்கட்டுதல் - மீன் குழம்பின் கடைசிக்கட்டம்
முறித்தல் - இஞ்சிச்சாற்றில் காய்ச்சின இரும்புக்கரண்டியை இட்டு,
சாற்றை முறித்தல்(முரித்தல்?)
வார்த்தல் - தோசை வார்த்தல்
இடுதல் - இட்டிலி, பணியாரம்
வதக்குதல்,
துவட்டல்,
கூட்டல்,
திரித்தல்,
தோய்த்தல், - இவை இரண்டும் தயிர் செய்வதில்
வடித்தல் - சோறு வடித்தல், வாலை வடித்தல்
இடித்தல்,
நொறுக்கல்,
அரைத்தல்,
ஆட்டுதல்,
மசித்தல்,
கிளறுதல்,
கிண்டல்,
கலத்தல்,
துகைத்தல்,
பிசைத்தல்,
பிழியல்

இன்னும் சொற்கள் இருக்கும். மனதுக்கு வந்தவை இவை.
நாற்பதாண்டுகளுக்கு முன்னர் காரைக்குடி கம்பனடிப்பொடி
சா. கணேசன், அப்போது நடந்த முதலாவதுதமிழாராய்ச்சி மாநாட்டை
ஒட்டி ஒரு களஞ்சியம் வெளியிட்டார். என் தந்தையார் அந்த
மாநாட்டிற்குச் சென்றிருந்தபோது அதனை வாங்கினார். அந்த
மலரில் ஓரிடத்தில் இதைப்பற்றியெல்லாம் சா. கணேசன்
குறிப்பிட்டிருந்தார். அதில் நினைவில்இருந்தவற்றுடன் சொந்தச்
சரக்கையும் கலந்திருக்கிறேன்.
தேடி எடுத்து இன்னும் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ளவை methods and process என்று
சொல்கிறோமே, அந்தச் செய்முறைகள், பக்குவங்கள்தாம்.
பச்சடி, கிச்சடி என்று வகையறாக்களைத் தொடுத்தால்
மயில்ராவணன் கோட்டைக்குள்ளும் நுழைந்துவிடும்.

அன்புடன்

ஜெயபாரதி

=================================










==================