From muthunilavan@... Tue Jun 25 19:46:03 2002
Return-Path:
X-Sender: muthunilavan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 26 Jun 2002 02:46:03 -0000
Received: (qmail 37289 invoked from network); 26 Jun 2002 02:46:02 -0000
Received: from unknown (66.218.66.217) by m8.grp.scd.yahoo.com with QMQP; 26 Jun 2002 02:46:02 -0000
Received: from unknown (HELO web11807.mail.yahoo.com) (216.136.172.161) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 26 Jun 2002 02:46:02 -0000
Message-ID: <20020626024601.77487.qmail@...>
Received: from [202.9.177.67] by web11807.mail.yahoo.com via HTTP; Tue, 25 Jun 2002 19:46:01 PDT
Date: Tue, 25 Jun 2002 19:46:01 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] samUkamum kavithai vativamum
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3D174205.A9B796DF@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Muthu Nilavan
Reply-To: muthunilavan@...
X-Yahoo-Group-Post: member; u=92055793
X-Yahoo-Message-Num: 18822

--- ஞானவெட்டியான் wrote:
> அன்பு நண்பர் திரு.ந்த்துனிலவன் அவர்கட்கு,
> வணக்கம்.
> ந்நீண்ட நாட்களாகிவிட்டது.நாங்கள் நலமே. நீங்கள்
> யாவ்ரும் நலமா?
------------------------------
அய்யா அவர்களுக்கு, வணக்கம்.அனைவரும் நலமே.
தங்களைச் சந்திக்க முடியாமல் போனதற்காக வருந்தினாலும்,தங்கள்
கருத்துக்களைத்தான் தினமும் பார்த்துக்கொண்டேயிருக்கிறேனே?
தங்கள் மற்றும் தங்கள் தந்தையார் உடல் நலம் எவ்வாறுள்ளது?
அவர்களுக்கும் என் வணக்கத்தைச் சொல்லுங்கள்.
------------------------------
> > அரசுகள் தோன்றியிராத காலத் தமிழ்ச்சமூகத்துக்கும்,
> >அரசுகள் வளர வளர வரிகளும் வளர்ந்த ஆசிரிய(அகவல்)பாடலுக்கும்
என்னதொடர்பு?
> > இதற்குப் பிந்தி வந்த அரச,சமயச் சண்டைக்கும் வெண்பா
வடிவத்துக்கும்
என்ன தொடர்பு?
> > என்று கவிதை வரலாற்றை தமிழ்ச் சமூக வரலாற்றோடு சேர்த்துப்
பார்ப்பதுதான் எனது நூலின் கரு.
> எனக்குப் புரியவில்லை. சிறிது விளக்குங்கள்.
> நன்றி
> -ஞானவெட்டியான்
----------------------------------
அய்யா, இது மிக எளிதானதுதான்.ஆனால் கொஞ்சம் பழைய வரலாற்றைத்
திரும்பிப் பார்க்க வேண்டும்,வாருங்கள் போவோம்:

தற்போது சங்க இலக்கியம் என்று கூறப்படும் "பாட்டும் தொகையும்"எனும்
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் எழுதப்பட்ட காலம் வேறு,
தொகுக்கப்பட்ட
காலம் வேறு என்பதை நீங்கள் அறிவீர்கள்.
எழுதப்பட்ட காலத்திலும், ஒரே நேரத்தில்-ஒரே இடத்தில்-ஒரு சிலர்
அமர்ந்து
ஒரு நோக்கில் எழுதியவையும் அல்ல.
பலரும், பல காலத்தில்,பல நூறு கல் இடையீட்டில் ஒருவருக்கொருவர்
பெரிய
தொடர்புகள் இல்லாமலேயும்,சில பாடல்கள் சில தொடர்புகளுடனும்
எழுதப்பட்டவை அவை. இதையும் ஒப்புகொள்வீர்கள்.

இயற்கைப் பாதுகாப்புக்காகவும் உணவுதேடும் நிலையிலும் ஒன்று சேர்ந்து
ஓரிடத்தில் வாழவேண்டிய தேவைக்கேற்ப சிறுசிறு குழுவாகவே மனித
இனம்
ஆரம்பத்தில் வாழ்ந்து வந்தது.
இதனை,மனிதவியல் வரலாற்றறிஞர், "குலக்குழு மக்கள் காலம்"
என்கின்றனர்.இது தான் நமது "சங்க"காலத் தமிழக
வரலாற்றுத்தொடக்கம்.
காண்க:
"உலக வரலாற்று ஏடுகளைப் புரட்டுகின்ற பொழுது,
முதலில் தோன்றிய சமுதாய அமைப்பு, இனக்குழுக்களைக் கொண்டதாகவே
இருந்தது"
(நூல்:"தமிழ் நாட்டு வரலாறு-சங்க காலம்-அரசியல்"1983 பக்:429)

அந்தக்-குறிப்பிட்ட-காலத்தில் ஆள்பவனும் இல்லை,ஆண்டவனும் இல்லை!
அதனாலேயே "சங்க"இலக்கியத்தில் 'இந்த'க்காலப் பாடல்கள்
சமயச்சார்பற்றவையாகவும் இருந்தன.
(Ref : 'A CULTURAL HISTORY OF INDIA' - Edited by
A.L.BASHAM, Oxford University Press 1975 Chapter
4,"The Early Dravidians''-by John R.MARR, Page
35)

அப்போது இருந்த குறுந்தொகைப் பாடல்களில், எளிய குலக்குழு மக்களின்
தலைவனைப் போற்றும் போதும், அதில் ஒரு நடைமுறை எதார்த்தம்
இருந்தது.பாடல் வரியும் அலங்காரம் அதிகமின்றி,வரிகளும்
அதிகமின்றி,
எளிய கூற்று முறையிலேயே இருந்தன.அதற்கேற்ப இருந்த கவிதை வடிவமே
'அகவல்'(அழைத்துக்கூறுதல்)!
(அந்தக் குழுத் தலைவனுக்கென்று சொத்து ஏதும்
கிடையாது,கிடைப்பதையெல்லாம்
கொடுத்துவிடும் அவ்ர்களே தமிழ் இலக்கியம் கூறும் 'இடையேழு,கடையேழு
வள்ளல்கள்'!)

இவ்வாறு, அடுத்த குழுக்களை வென்று 'வாகை'வேய்ந்தவன் நாளடைவில்
'வேந்தன்'ஆனான்!
இதன் தொடர்ச்சியே 'குறு நில மன்னன்' எனும் சிற்றரசுத் தோற்றம்!
சிற்றரசுகள் முடியுடை 'மூவேந்தன்'ஆன பிறகு அவனைப் புகழ ஐந்தாறு
வரிகள்
போதவில்லை!(அன்றைய அரச வீரத்தின் அடையாளமான புற நானுற்று
ஆசிரியப் பாக்கள் 4 முதல்40 அடி வரை இருந்தன என்பதை ஒப்பிட்டுக்
கொள்க)

அரசு வந்த பிறகு அதைப் பண வழியில் காப்பாற்ற படையும்,
மன வழியில் காப்பாற்ற மதமும் அரச ஆதரவோடு வளர்ந்தன.
இருந்தும் பல்வேறு சமயமும் மக்கள் மனத்தைப்
பக்குவப்படுத்த(தயாரித்தல்-சமைத்தல்-சமயம்)மதங்கள் தோன்றின.

மக்களிடையே பல ஒழுக்கநெறிகளைப் போதித்த'கீழ்க்கணக்கு'கள் ,
கட்டுப்பாடுகள் மிகுந்த 'வெண்பா'வடிவத்தில் வந்ததில் வியப்பென்ன?

பிறகு, பேரரசுகள் நிலைத்த பிறகு,அரசப்பெருமை,'ஒப்பாரும்
மிக்காரும்
இல்லாத'வீரம்,காதல்,முதலியவற்றை பலப்பல கிளைகதைகளுடன் சொல்ல
4
சீர் போதாமல் 6,8சீர்'விருத்தம்'விளைந்தது! (இது பின்னாளில்
வந்த
பிள்ளைத்தமிழில் 14 சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் வரை
போனது)
ஐம்பெருங்காப்பியங்கள் விருத்தத்தில் விளைந்ததும் இதனாலேயே!
-------------------------
அய்யா,
இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.
விரைவில் நாம் நேரில் சந்திப்போம் என நினைக்கிறேன்,அப்போது
இன்னும்
விரிவாகப் பேசுவோம்.
நேரில் சந்திக்கும் போது சித்தர்களின் காலம் (அவர்களுக்குத்
துணையாகவும்/வினையாகவும் இருந்த அரசர்களைப்பற்றி )உங்களிடம்
நிறையக்
கேட்டுத்தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.
குறிப்பாக திருமூலர்,சிவ வாக்கியர்,குதம்பைச்சித்தர்,பாம்பாட்டிச்
சித்தர்,மற்றும் சிலர்.

அதுகூடப் பாருங்கள்,சித்தர்கள் யாருக்கும்
அடங்காதவர்களாக(இலக்கணத்திலும்
கூட) ஆள்பவனுக்கும்,ஏன் சில நேரம் தம் ஆண்டவனுக்கும் அஞ்சாதவராக,
தமக்கென
ஓர் எளிய நடை(கருத்தில் புரட்சி) கவிதையைக்
கடைப்பிடித்திருக்கிறார்கள்
பாருங்கள்! இதுவும் சமூகமே இலக்கியத்தை-வடிவத்தை மாற்றியமைக்கிறது
என்னும்
நம் கருத்திற்குச் சரியாகவே உள்ளது!

சரி, மீண்டும் சந்திப்போம்.
இது பற்றி உங்கள் கருத்தை எழுதுங்கள்.
நன்றி, வணக்கம்.
தங்கள் அன்புள்ள,
நா.முத்து நிலவன், புதுக்கோட்டை.12.06.2002
=======================================================




__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! - Official partner of 2002 FIFA World Cup
http://fifaworldcup.yahoo.com