From sakthia@... Tue Jun 25 21:31:02 2002
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 26 Jun 2002 04:31:00 -0000
Received: (qmail 24270 invoked from network); 26 Jun 2002 04:31:00 -0000
Received: from unknown (66.218.66.217) by m9.grp.scd.yahoo.com with QMQP; 26 Jun 2002 04:31:00 -0000
Received: from unknown (HELO ethfrvs.eth.net) (202.9.145.41) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 26 Jun 2002 04:31:01 -0000
Received: from smtp3 ([202.9.178.19] unverified) by ethfrvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Wed, 26 Jun 2002 10:13:08 +0530
Received: from 202.9.180.129 by smtp3 (InterScan E-Mail VirusWall NT); Thu, 27 Jun 2002 10:08:10 +0530
Message-ID: <001201c21cc6$38b3b940$81b409ca@sakthia>
To: , "jaybee"
Cc:
References:
Subject: Re: Respected KaviyOgiyAr
Date: Wed, 26 Jun 2002 09:30:55 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 26 Jun 2002 04:43:08.0682 (UTC) FILETIME=[F823A6A0:01C21CCB]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 18824

மாதாமாதம் நான் செல்கிற போதெல்லாம்,எனக்கு முன்பு அக்கிழவிஎன் மந்திர
குரு மகான் ,ராமய்யங்கார் சுவாமியிடம் ஏதாவது பகவத் விடயமாகப் பேசிக்கொண்டிருப்பாள்.
மகான் கூட"பாரடா யிக்காலக்கிழவிகளெல்லாம் தன்னோட பேரன்,மகன்
சுகம் பற்றியும்,திருமண விடயம்,புத்ர பாக்கியம் பற்றிப் பேசும் காலத்தில்
ஒருவரிகூட லௌகீக விடயம்பற்றிஅவள் கேட்டதில்லை.பகவான் லீலைகள் பற்றியும்
ஏன் அவன்' திரும்பப் பிறப்பு எடுத்து அநியாயம் பண்ணும் அரசியல்வாதிகளையோ
அல்லது குடிமக்களை சதா தொந்தரவு செய்யும் 'ரௌடிக்கும்பல்களை வதம் செய்வதற்காகவோ
வரக்கூடாது?என அவனிடமே கேட்குமாறு என்னை வற்புறுத்திக்கொண்டிருப்பாள்.
அப்போது பல யிறைவன் லீலைகள் பற்றியும்,மனித வடிவில் யெல்லோர்க்கும்
அவ்வப்போது அவன் வந்து உதவி செய்கிறான் எனவும் கூறி ஆறுதல் சொல்வார்.
நிறைய அதற்கான சான்றுகளும் சொல்வார். அதில் என் சம்பந்தமான உபகதைகளும்
யிருக்கும்.(எனக்கு பல விடயங்களில் (தியானம் செய்யச்செய்ய)'அவன்' செய்த லீலைகளும்
அடங்கும்.அவை யாவும் நான் சொல்லாமலேயே மகானுக்குத் தெரியும்.)
ஒருநாள். கிழவி சொல்கிறாள்."சுவாமீ!நீர் பெரிய மகான்..சீரடி போன்ற
மகானின் மறுவடிவில்(மந்த்ர உருவம்) நீர் வந்திருப்பது எனக்குக் கனவிலும்,சில சமயம்
கண்மூடித் தியானம் செய்கையில் யிப்போதெல்லாம் புரிகிறது' என்பாள்.
அவரோ அவசரமாக மறுத்து'பாட்டி அதெல்லாம் ஒன்றுமில்லை.நான் சாதாரண மந்திர சபக்காரன்.தீவிர
மந்திரப் பயிற்சியால் ஏதோ எனக்குத் தெரிந்ததை உளறுகிறேன்.
வேதம் முன்பு யிப்படிச் சொல்லாதே.பத்திரிகையில் நீ சொன்னதாகச் சொல்லி
கதைவிட்டு கூட்டம் சேர்த்துவிடுவான்.எனக்கு அப்படி என் வீட்டில் அனாவசியக்(மெடீரியலிச்டிக்
கூட்டம் சேர்வதில் நாட்டம் கிடயாது.என்னடா வேதம்! நான் சொல்றது சரிதானே!
என என்னையும் சாடையாக வம்புக்கிழுப்பார்.நான் அப்படி முயன்றதுண்டு.என் கையிலிருந்து
அவரது போட்டோவை அவர்பற்றி தினமணியிலெழுத முயல்கையில்
பிடுங்கிக்கொண்டுவிட்டார்.
பாட்டி சொன்னாள். திடீரென."அதெல்லாம் எனக்குத் தெரியாது.யின்னிக்கு
நான் ஒரு தீர்மானத்தோடுதான் யிங்க வந்திருக்கேன்.நீங்க சொன்னபடி
நீங்க சொன்ன ராம/வெங்கடாசலபதி மந்திரமெல்லாம் ஆக்ஞா சக்கிரத்தில்
கண்மூடி தியானம் பண்ணியாச்சு.ஒருபயனும் வரலை.'ஓர்மையோடு'பண்ணியும்
ஏன் அவன் தர்சனம் எனக்குத் தரலை?சண்டைபோட்டும் அவன்ட்ட கேட்டாச்சு.
யின்னிக்கு என்னை நீங்க ஏமாத்தக்கூடாது.நான் சங்கல்பம் பண்ணிண்டுதான்
வந்திருக்கேன்.கேட்டேளா?நாளைக்கே நான் உயிரை விடறதா சத்யம் செஞ்சு
கொடுத்திருக்கேன்.தீவிர வைராக்கியத்ல யிதச் சொல்றேன்.நீங்களோ,
வெங்கடாசலபதியோ யின்னிக்கி என்னோட விளயாடி ஏமாத்தக்கூடாது,என்ன?-
எனக்கு யிப்பவே வெங்கடாசலபதியை தர்சனம் பண்ணிவச்சே ஆகணும்' என்று
நீளமாக ஆவேசத்துடன் பேசிக்கொண்டே போனாள்.எனக்கு ரொம்ப ஆச்சர்யம்.
ஆக்ஞா சக்ரத்தில் அவர் தர்சனம் பண்ணிவைப்பதாவது?நடக்கிற கார்யமா?
என யான் யோசிக்கையில்,பெரியவர்க்கும் திடீரென ஒரு ஆவேசம் அப்போ
வந்ததே பாருங்கள்.அசந்துபோய் விட்டேன்.யிதுநாள்வரை அவர்கண்களில்
அப்படி ஒருபரவசம், ஆவேசம் வந்து நான் கண்டதில்லை.
"ஏ! பாட்டி,என்னை நீ ரொம்ப படுத்தறே.சரி. நாளைக்கே நீ
செத்துப்போவதில் உறுதியா யிருக்கயா?பொய் சொல்லக்கூடாது.
பிரதிக்ஞைனா உண்மையான சங்கல்பமா யிருக்கணும். யிதோ வேதம்
முன்பு சத்யமாகச் சொல்லு.என அவர் சொல்லவும் பரவசமாய் அக்கிழவி
நான் எதிர்பார்க்காதவிதத்தில் என் மண்டையில் ஓடிவந்து நான் சொன்னது சத்யம்
என அடித்துச்சொன்னாள்.(என் மண்டைவலி அவள் அடித்த அடியில்3
நாளைக்கு தொடர்ந்து யிருந்தது வேறு விடயம்.)
சரி கண்ணை மூடிக்கோ..நான் சொன்ன மந்திரத்தை நெற்றிப்பொட்டில்,
மத்தியில் உருவேற்ற்று!என்றார்.நான் அவனை' காட்டரேன்.என்றார்.
நான்வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தேன்.(சாட்சி 'பூதமாய்..வேதமாயல்ல!)

அவ்வளவுதான்.ஒரு 15 நிமிடமோடியிருந்திருக்கும்.கிழவியின் உடம்பில்
திடீர் மாறுதல்.உடம்பு கிடுகிடுவென ஆடிற்று.அவளால் மகான் செலுத்திய
மந்திர வைப்ரே"னை-எனர்சியை-2000வோல்ட்ச் மின்சாரத்தைத்
தாங்கமுடியவில்லை என அறிந்துகொண்டேன்.அவள் கண்ணில் ஒரு அருவி
நீர் பொழிந்திருக்கிறது பாருங்கள். என் வாழ்நாளில் அப்படி ஒருபாட்டியின் மூடிய
கண்களிலிருந்து ஒரு குற்றாலத்தைக் கண்டதில்லை! புடவையெல்லாம் தெப்பமாக நனைய,வேர்வைவேறு
சேர்ந்துபிழிய
அப்படி ஒரு அழுகை..ஆநந்தக்கண்ணீர்!அழுக்கைத்துடைத்து அழகு சேர்க்கவந்த
அந்தப் பெருமாளின் ஆநந்த தரிசனமல்லவோ அது!கிழவிவிக்கிவிக்கி அழ
ஆரம்பித்தாள்.மகானோ யின்னும் கண்திறக்கவில்லை.ம்ம்.சொல்லு கிழவி,விச்வரூபம்
போதுமோ? என்றார்.பாட்டி பலே கைகாரி..ரொம்ப சந்தோ"ம் மகானே! யிதுக்குத்தானே
யித்தனைநாள் யிந்தக்கூட்டில் உசிரை வச்சுண்டிருந்தேன்,ஆனால் தயவுசெஞ்சு
எனக்கு ராமனை சீதயோடு,ஆஞ்சனேயரோடு தரிசனம் பண்ணிவச்சுடுங்கோ.
புண்ணியமாயிருக்கட்டும் உங்களுக்கு.நான் நாளைக்கே போறேன்.ப்ளீS!
என்றாள்.சரி..ராம சபம் பண்ணு..தீவிரம்.ம்ம். என்றார்.
கொஞ்ச நேரத்தில் அதையும்"'கண்டேன் கண்டேன் ஆகா திவ்யம்,திவ்யம்ம்
என்றாள்..திரும்ப அப்படி ஒரு யிமாலயப்ப்பனி உருகி வழிந்தஅழுகை..பின்பு..
அப்படியே தாங்க முடியாமல் தரையில் சாய்ந்துவிட்டாள்.
நான் ரொம்பவே பயந்துவிட்டேன்.ஒருவேளை மின்சாரம்தாங்க
முடியாமல் அங்கேயே செத்துக்கித்து..?(எனக்கும் உள்ளுக்குள் ஏக்கம்-யிதேமாதிரி
தர்சனதுக்கு..ஆனால் யின்னும் கொஞ்ச நாள் வாழ ஆசை..பசங்களெல்லாம்
படிக்கிறாங்க..நாளைக்கு டெர்ம் பீS காட்டணுமே!..ஆக யிப்போ தர்சனம்
வேண்டாமே! என உள் மனசு எச்சரிக்கை!)
ஆனால் மகான் மனைவிக்கு செய்கைகாட்டினார்.சொம்பில் தண்ணீர் வந்தது.
மாமியே நீர் முகத்தில் அடித்தாள்.மெதுவாக பாட்டி எழுந்தாள்.
ரொம்ப வந்தனம் சுவாமீ..அடேய்.. நீயும் யிவர்ட்ட வந்துசேர்ந்துட்டே
தீர்க்காயுசா யோக நெறியோடு வாழ்வேடா..எல்லோர்க்கும் போய்ட்டு
வரேன்.திருப்தியோடு போரேன்.நமSகாரம்" என்று அவரை சா?டாங்கமாக
வணங்கினாள்.போயே போய்விட்டாள்.
எனக்கு ரொம்ப அதிர்ச்சியும், ஆநந்தமும் சேர்த்துக் கொடுத்த
அதிரு?ட அனுபவம் அது. ஒருமகான்,+ஒரு தீவிர வைராக்ய உயிர்(ஆத்மா)=
பகவத் தர்சனம் என்று என் டயரியில் எழுதிவைத்தேன்.
"பாரடா அவள் வைராக்யத்தை' அப்படி யிருக்கணும் உன்னோட த்யான
யோக வைரக்யமும்..சரியா?மூக்கைப்பிடிச்சுண்டு பாதிபகவான்,பாதி
மனைவிபோடற-சட்டியில் சுடற வடை வாசனை நினைப்பு என யிருக்காதே.
அப்புறம் வடை,ப^f வி"ன் தான் ஆக்ஞாவில் வரும் என சிரித்தார்.
பின்பு ஏதோ நினைவில் ஆழ்ந்தார்.ஏய்! வேதம்ம்.அடுத்த வாரம் வா!யிதே
வேளையில்..ஒருவிடயம் சொல்லறேன்.என்று உள்ளே போய்விட்டார்.
ஆம்! அடுத்த வாரம்மகான் சொன்னபடி போனேன்.அவர் சொன்ன
முதல்வாக்யமே"டேய்! வேதம்.கிழவி சொன்னபடியே அடுத்தநாள்
நல்ல பூர்ணிமையில்'போய்விட்டதாக அவள் பிள்ளைகள்
வந்து சொன்னார்களடா..பூராநாளும் சிரிச்சுண்டே யிருந்தாளாம்..பசங்க
எல்லாரையும் தூக்கித் தூக்கி முத்தமிட்டாளாம்.தலையில் கைவச்சு
அடிக்கடி ஆசீர்வாதம் பண்ணினாளாம். அதிகாலை விடியலில்
ஆண்டவனை மகிழ்வுடன் தரிசித்த அந்த அற்புத முதிர்ச்சிமலர் உதிர்ந்ததாம்டா"
தூக்கி வாரிப்போட்டது,மெய் சிலிர்த்ததை நான் யின்றும் உணர்ந்தால்
என் தலைமுடியில்கூட மின்சாரம் பாய்கிறது!!
(யோகியார்)













----- Original Message -----
From: P.N.Kumar
To: JayBee ; kaviyogivedham
Sent: Tuesday, June 25, 2002 5:53 PM
Subject: Re: Respected KaviyOgiyAr


அன்புநிறை யோகியார்க்கு,

அடியேனின் சிரந்தாழ்ந்த வந்தனம்.

தாங்கள் இத்திரியில் எழுதிய கடைசி மடலிது:
முடிந்தால் தொடரவும்.

>>>>
பின்பொருசமயம் யிதே மகான் ஒரு கிழவிக்கு,
-(விடாப்பிடியாக அழுது சாதித்து"மகானே..யின்னிக்காவது
நீங்கள் என் ராமனை எனக்குத்தரிசனம் பண்ணிவைக்கணும்..
என்னை வரும்போதெல்லாம் ஏமாத்திண்டே வரேள்!நான் நாளைக்கெகூட
மண்டையைப்போடத்தயார்..யின்னிக்கு உங்களை விடப்போறதில்லே!என்ற)
அவளுக்கு நான் யிருக்கும்போதே(என் பாக்கியம் அதுவும்!)ராமனைத்
தரிசனம் செய்துவைத்த மயிற்கூச்செரியும் சம்பவத்தை
விளக்குகிறேன்..என்ன..!(யோகியார்)
>>>
anpudan,
Kumar