From harikris@... Wed Jun 26 09:31:10 2002
Return-Path: X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 26 Jun 2002 16:31:10 -0000
Received: (qmail 17556 invoked from network); 26 Jun 2002 16:31:10 -0000
Received: from unknown (66.218.66.216) by m14.grp.scd.yahoo.com with QMQP; 26 Jun 2002 16:31:10 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 26 Jun 2002 16:31:08 -0000
Received: (qmail 10208 invoked by uid 7002); 26 Jun 2002 21:45:01 +0530
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by webmail2.maa.sify.net with SMTP; 26 Jun 2002 21:45:01 +0530
Received: (qmail 9840 invoked by uid 7002); 26 Jun 2002 21:44:46 +0530
Received: from unknown (HELO g9d6h9) (210.214.131.63) by webmail2.maa.sify.net with SMTP; 26 Jun 2002 21:44:46 +0530
Message-ID: <002d01c21d2f$7fa9d460$3f83d6d2@g9d6h9>
To: Subject: Pondicherikkup pOna kadhai Part I
Date: Wed, 26 Jun 2002 21:53:55 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
From: "Hari Krishnan" X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 18832
இந்த முயற்சியை ஆரம்பித்துவிட்டேனே தவிர, அந்தப் பழைய கடிதத்தைத் திரும்பப் படிக்கும் போது, பல இடங்களில் எழுதப்பட்டவருக்குத் தேவைப்படாத விளக்கங்கள் தேவைப்படும் என்று தோன்றுகிறது. நேர நெருக்கடி வேறு. இருந்தாலும் எடுத்ததை முடித்துவிடுவோம் என்ற முடிவுடன் தொடர்கிறேன். இனி, என் விடைக் கடிதத்திலிருந்து.
எனதன்புக்குரிய ....... அவர்களுக்கு,
தங்களின் அன்பான கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. பல நாள்களுக்குப் பிறகு சிந்திக்க நிறைய தீனி கிடைத்திருக்கிறது.
ஆரம்பத்திலேயே ஒன்று கூறிவிடுகிறேன். பாரதியைப் பற்றி, மற்றும் அவரின் எழுத்தைப் பற்றி எந்த அபிப்பிராயத்தையும் யாரும் வைத்துக்கொள்ளலாம். அதை யாரும் மறுக்கவோ, குறை கூறவோ முடியாது. தங்களுக்கு, பாரதி கவிஞனாக மட்டுமே தென்பட்டால் அதற்கு எந்தவித ஆட்சேபமும் கிடையாது. உதிக்கும் செங்கதிர் ஒரு வண்ணமும், உச்சி வெய்யில் ஒரு வண்ணமும், அஸ்தமனத்தின் போது ஒரு வண்ணமும் தெரியவில்லையா? ஆனால், வானவில் தோன்றும் போதன்றோ சூரியனுக்கு ஏழு வண்ணங்கள் இருப்பதாய்ப் புலப்படுகிறது?
கண்ணுக்குக் கண் பார்வை மாறுபடும். மஞ்சள்நிறத்தில் நமக்குத் தெரியும் பூ, வெள்ளை நிறத்தில் தேனீக்குத் தெரிவதாகச்சொல்கிறார்கள். போகட்டும். இந்தப் பார்வை வித்தியாசத்தைப் பற்றி பாரதி என்ன சொல்கிறான் தெரியுமா?
"ஸங்கீதத்தில் ஸ்வர ஸ்தானங்கள் ஸ, ரி, க, ம, ப, த, நி என ஏழு இருக்கின்றன. ஆனால் நாம் எந்த ஒலியையும் ஸ (ஷட்ஜம்) என்று வைத்துக் கொண்டு அதற்குத் தக்கபடி மற்ற ரி, க, ம, ப, த, நி பாடலாம். இங்ஙனம்ஸாதாரண மனிதனுடைய தொண்டைக்கு இரண்டரை ஸ்தாயிதான் எட்டும். சிலருக்கு மூன்று ஸ்தாயியும், சிலருக்கு இன்னும் அதிகமாகவும் எட்டக்கூடும் என்றும் சொல்லுகிறார்கள். இருந்தாலும் மூன்றரை ஸ்தாயிக்கு மேலே மனிதத் தொண்டை பேசுதல் ஸாத்தியமில்லை.
ஆனால், ஒளியுலகத்தில் அநந்த ஸ்தாயிகள் இருக்கின்றன. கிளிக்குஞ்சு கத்துவதை ஷட்ஜமாக வைத்துக் கொள்வோம். சந்த்ர மண்டலம் இடிந்து பூமிமேல் விழுந்தால் அதிலுண்டாகும் ஒலியை மேற்படிக் கிளிக்குஞ்சின் ஒலியினின்றும் எத்தனை ஸ்தாயி மேலாக வைத்துக் கணக்கிடலாம்?
..........ஒளியோ எல்லையற்றது. நாமோ துளி தவிர முழுக் குருடு. மனிதன் இருளாகக் கருதுவதை ஆந்தை ஒளியாகக் கருதுகிறது. ஒளி விஷயத்தில் ஆந்தை நம்மைவிட 'கீழ் ஸ்தாயி' பழகியிருக்கிறது. ஆனால் நம்முடைய ஸ்தாயி ஆந்தைக்கு எட்டாது...."
மேலே எழுதிக் கொண்டே போகிறார். ஆச்சரியமான physics. குழந்தைக்கும் புரியவைக்கும் அழகான உத்தி. நம் ஒவ்வொருவருக்கும் இது பொருந்தும். ஒருவருக்கு எட்டுவது மற்றவருக்குப் புலப்படுவதில்லை. சங்கங்கள் அமைப்பதும், கழகங்கள் குழுமுவதும் தத்தமக்குப் புலப்பட்டதை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவே. ஆகவே, உங்கள் பார்வைக்குப் பட்டதைச் சொல்லிவிட்டீர்கள். என் பார்வையில் பட்டதையும் கொஞ்சம் சொல்கிறேன். ஒன்றே ஒன்று. ஆயிரமாயிரம் வாதப் பிரதிவாதங்களால் ஒரே ஒரு உண்மையை நிறுவவோ, தெளிவுபடுத்தவோ, தரிசிக்க வைக்கவோ இயலாது. சத்தியம் வாதங்களுக்கு அப்பாற்பட்டது. பற்பல வாதங்களைக் கண்டும், ஆராய்ந்தும் சத்தியத்தின் வழி இன்னதாகஇருக்கலாம் என்று நிச்சயித்துக் கொள்ளலாகும். அதாவது, யாருடைய வாதம் மேலானது என்ற ஆராய்ச்சியில் இறங்காமல்இருந்தால்.
ராமனுஜரைப் பற்றி சொல்வதற்கான தகுதியோ, கல்வியோ எனக்கில்லை. பாரதியைப் பற்றி நிச்சயமாகச் சொல்ல இயலும்.
பாரதி வரலாறு எழுதிய ஒவ்வொருவரும், அவர் பாண்டிச்சேரி செல்வதற்கு (சரி, ஓடிப் போவதற்கு) உடன்படவில்லை; நண்பர்களின் வற்புறுத்தல் அதிகரிக்கவே, இணங்கினார் என்கிறார்கள். (முரப்பாக்கம் ஸ்ரீனிவாசன் கதைக்குப் பின்னால் வருகிறேன்.)
"பாரதியார் சென்னையிலிருப்பதற்கு அஞ்சவில்லை. ஆனால், நண்பர்கள்தான், சிறை செல்வதைவிட புதுவை சென்று அங்கிருந்து இந்தியாவைத் தொடர்ந்து நடத்த முயல்வதே சரி என்று வற்புறுத்தினார்கள். மேலும் அக்காலம் காந்தி யுகதுக்கு முந்தியது. திலகர் முதலிய தலைவர்கள், சிறை சென்று ஆத்மிக வழியில் பிரிட்டிஷ்காரனை எதிர்க்க முடியும் என்று கருதவில்லை. போராட்டத்தை விடாமல் நடத்த வேண்டும் என்பதே கருத்தாயிருந்தார்கள்." -- சித்திர பாரதி. ரா. அ. பத்மநாபன்.
"பாரதியார் வெள்ளையர் ஆட்சிக்குப் பயந்த சென்னையை விட்டு ஓடிவிடவில்லை. அவர் எழுத்திலும், பேச்சிலும், வாழ்க்கையிலும் அச்சத்தை அறவே தவிர்த்தவர். அவர் பாண்டிச்சேரிக்குச் செல்வதற்கு அவர் நண்பர்கள்தான் காரணம்." பாரதியாரின் வாழ்க்கையும் நூல்களும். வை. சச்சிதானந்தன்.
"பாரதியார் சென்னையில் இருப்பது அபாயம் என்றறிந்த அவரது நண்பர்கள், அவர் பிரிட்டிஷ் இந்தியா எல்லையில் எங்கிருந்தாலும் ஆபத்துதான் என்றும், புதுச்சேரி போன்ற பிரெஞ்சு இந்தியாவுக்குப் போய்விடுவதே நல்லது என்றும் சொன்னார்கள்." -- பாரதியைப் பற்றி நண்பர்கள். நீலகண்ட பிரம்மச்சாரி. (நீலகண்ட பிரம்மச்சாரி பாரதி 'விஜயா' பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த போது துணையாசிரியராக இருந்தார். கலெக்டர் ஆஷைக் கொன்ற வாஞ்சிநாதன் இருந்த குழுவின் தலைவர். சத்குரு ஓம்கார் என்ற பெயரில் மைசூர் நந்திஹில்ஸ் பகுதியில் துறவியாக வாழ்ந்த 1978ல் காலமானார்.)
திரு. சீனி. விசுவநாதன் கூறுகிறார்.
"பழுத்த பத்திரிகையாளரும், பாரதியை உள்ளும் புறமும் அறிந்தவருமான திரு. எஸ். ஜி. ராமநுஜலு நாயுடு அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால்,
'.....அதற்கு முன்னர் எவரும் அவ்வழியில் பத்திரிகையை நடத்தவில்லையென்று சொல்லும்வாறாக வெகுசிறப்புடனும், திறமையுடனும் எழுதிவரத் தொடங்கினார். இந்தியா பத்திரிகை பிரபலப்பட்ட பொழுது அது மிகவும் உக்கிர வாசகமுள்ளதாக இருந்தது. சிறிதும் அச்சமின்றி எழுதப்படலானது. அந்த அம்சம்தான் கடைசியில் அப்பத்திரிகைக்கு ஆபத்தாய் முடிந்தது. பத்திரிகை என்றைக்கும் நடக்கும்படியான ரீதியில் சாந்தமாய், சட்ட வரம்புக்கு உட்பட்டு நடத்தும்படி பல நண்பர்கள் கூறியும் பாரதியாரி எழுதுகோல் பழையபடியே இருந்தது. பத்திரிகைக்கு ஆபத்து நிச்சயம் என்று பலர் கூறினர்.' (அமிர்தகுண போதினி 1929).
"நின்று போராடியிருக்க வேண்டாமா?" என்பத தங்கள் வாதம். நாம் விரும்புகிறபடியெல்லாம் சரித்திரம் நடந்துவிடுமா?நடப்பதுதான் சாத்தியமா?
தொடரட்டுமா?
ஹரி கிருஷ்ணன்.
[Non-text portions of this message have been removed]