From chand1945@... Thu Jun 27 07:23:50 2002
Return-Path: X-Sender: chand1945@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 3); 27 Jun 2002 14:23:50 -0000
Received: (qmail 87254 invoked from network); 27 Jun 2002 14:23:50 -0000
Received: from unknown (66.218.66.216) by m2.grp.scd.yahoo.com with QMQP; 27 Jun 2002 14:23:50 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 27 Jun 2002 14:23:49 -0000
Received: (qmail 32608 invoked by uid 7002); 27 Jun 2002 19:53:33 +0530
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (127.0.0.1) by localhost with SMTP; 27 Jun 2002 19:53:33 +0530
Received: (qmail 31945 invoked by uid 7002); 27 Jun 2002 19:53:14 +0530
Received: from unknown (HELO sify.com) (202.9.169.141) by webmail4.maa.sify.net with SMTP; 27 Jun 2002 19:53:14 +0530
Message-ID: <3D1B1999.F981409A@...>
Date: Thu, 27 Jun 2002 19:26:41 +0530
X-Mailer: Mozilla 4.72 [en] (Win98; I)
X-Accept-Language: THAMIL,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Thaahi Pirapam - 2
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
From: ஞானவெட்டியான் X-Yahoo-Group-Post: member; u=116500105
X-Yahoo-Profile: gyanavettiyaan
X-Yahoo-Message-Num: 18838
தாகி பிரபம் - 2
"மானுட உண்மையை அறிவதே ஞானத்தின் நோக்கம். மனிதனை மனிதனாக
வாழவைப்பதே ஷரியத். சாந்தியும் சமாதானமும் எங்கும் நிலவ, மனிதன்
மனிதனாக, மனித நேயம் பேணி வாழ்ந்து, மானுட உண்மையை அறியவேண்டும்"
என்று கூறி அவைகளையே
தமது குறிக்கோளாக வைத்துள்ளார் ஞானாசிரியர்.
ஞானாசிரியர் கருத்து:
இந்நூற் "றாகி பிரபம்" எனும் பெயருடைத்து. இதன் கருத்து,
தாகமுடையோருக்கான நீர்ப் பந்தர் என்பதாம்.
எவருக்கு ஞானத்தில் அளவற்ற தாகம்(பிரியம்) உள்ளதோ, அவருக்கிந்நூல் ஒரு
நீர்ப் பந்தர் எவ்வாறு தாகத்தை நீக்குமோ, அவ்வாறே ஞான வேட்கையை இந்நூல்
நீக்கிவிடும் என்பதாம் என்க.
குரோதம் விடுத்துக் குறை தடுத்து நிறையுளமெய்திக் கற்றிடின் இறைத்
திருவருலிசையுமென்பதில் ஐயமின்று.
இவ்வழியில் செல்ல விரும்புவோருக்கே இஃது அமைக்கப்பட்டுள்ளது. ஞான
சூனியங்களுக்கன்று.
வாழ்க மெய்ப்பொருள்!
வாழ்க மெய்ஞானம்!!
வாழ்க ஞானிகள்!!!
- அஷ்ஷைகு ஜமாலிய்யா சையிது கலீல் அவ்ன் மெளலானா அல் ஹசனிய்யுல்
ஹாஷிமிய்
விளக்கம்: இங்கு கருத்தா என்பது சிருட்டி கருத்தா (கருத்தாகிய நினைவு).
சிருட்டி என்பது சிருட்டிக்கப்பட்ட ஆன்மா தங்கியுள்ள உடல் (நினைவால்
சிருட்டிக்கப்பட்ட எண்ணங்கள்).
இறை கேட்டது: முதன் முதலில் நீர் எங்கிருந்தீர்?
யான் விடுத்தது : இறைவா, நீ, சூக்குமமாய் மறைந்து, நான், நீ யென்றன்றி
இல்லாதிருந்த நிலையிலிருந்தபோது, நான்
உன்னுடன் கலந்திருந்தேன்.
இறை கேட்டது: அப்போது நீர் உம்மைக் கண்டீரா?
யான் விடுத்தது : இறைவா, ஆம். என்னை யான் கண்டேன்.
இறை கேட்டது: எப்படிக் கண்டீர்?
யான் விடுத்தது : இறைவா, உன்னில் என்னைக் கண்டேன். அப்போது என்னில்
உன்னைக் கண்டேன்.
இறை கேட்டது: அப்போது நீர் எப்படியிருந்தீர்?
யான் விடுத்தது : இறைவா, உன்னில் யான் கலந்திருந்தேன்.
இறை கேட்டது: என்னில் நீர் எப்படிக் கலந்தீர்?
யான் விடுத்தது : இறைவா, இடைவெளியின்றிக் கலந்தேன்.
இறை கேட்டது: இடைவெளியற்றிருந்தது எப்படி?
யான் விடுத்தது : இறைவா, பனிக்கட்டி கரைந்து நீரில் கலப்பதுபோல்.
இறை கேட்டது: அப்போது உமது நிலை யெப்படியிருந்தது?
யான் விடுத்தது : இறைவா, அப்போது நானோ ஏகாந்த நிலையிலிருந்தேன்.
இறை கேட்டது: ஏகாந்த நிலையென்பது என்ன?
யான் விடுத்தது : இறைவா, நானேயல்லாது பிறிதொன்றையும் காணாது நானே
என்னில் என்னைக் கண்ட நிலை.
மற்றும் உன்னில் நான் அழிந்து உன்னில்
நானாய்ப் பிறிதொன்றிலாதாகி உன்னிலே
என்னை நீயாக இரண்டறக் கண்ட நிலை.
இறை கேட்டது: அப்போது நீர் எப்படியிருந்தீர்?
யான் விடுத்தது : இறைவா, யான் சலனமற்ற நிலையில் பரிபூரண ஆதி
நிலையான சூனிய நிலையிலிருந்தேன்.
இறை கேட்டது: அப்போது உமக்குப் பார்வையிருந்ததா?
யான் விடுத்தது : இறைவா, ஆம் என்றேன்.
இறை கேட்டது: அது எப்படி?
யான் விடுத்தது : இறைவா, பரிபூரணத்தில் பரிபூரணமாய் நின்று
பரிபூரணத்தைப்
பரிபூரணத்தால் பரிபூரணமாய்ப் பார்த்தேன்.
இறை கேட்டது: அஃது என்ன?
யான் விடுத்தது : இறைவா, நானே பரிபூரணமானபோது பரிபூரணமான் எனக்கு
நானே ஆரம்பமும் முடிவுமானேன்.
இறை கேட்டது: நான் எனும் பரிபூரணத்திற்கு உள்ளும் புறமுமிருந்தனவா?
யான் விடுத்தது : இறைவா, ஆம். இருந்தனவே.
இறை கேட்டது: அஃது எப்படி?
யான் விடுத்தது : இறைவா, அதுவே (பரிபூரணம்) தானே அதற்கு உள்ளூம் புறமும்.
இறை கேட்டது: அதற்குத் திக்குத் திசைகளிருந்தனவா?
யான் விடுத்தது : இறைவா, ஆம். இருந்தன. அதற்குத் திக்குந் திசைகளும்
அதுவே தானே.
இறை கேட்டது: அதற்கு மேல், கீழ், உயரம், பள்ளம் எல்லாமிருந்தனவா?
யான் விடுத்தது : இறைவா, ஆம். மேல், கீழ், உயரம், பள்ளம் எல்லாம்
அதற்கு அதுவே யாயிருந்தன.
இறை கேட்டது: பரிபூரணத்திற்கு இவ்வளவுதான் என்னும் மட்டும் அளவும் கனமுமுண்டா?
யான் விடுத்தது : இறைவா, பரிபூரணம்(நான்) அளவிட முடியாத்து; நிறையிட
முடியாதது. பூரணத்திற்குப் பூரணமே அளவு.
அதற்கு அதே மட்டு. அதற்கு அதுவே நிறை.
இறை கேட்டது: அதற்கு(பரிபூரணத்திற்கு)க் கால எல்லையுண்டா? முடிவு உண்டா?
யான் விடுத்தது : இறைவா, இல்லையே.
இறை கேட்டது: அப்படியானால் அதன் நிலை என்ன?
யான் விடுத்தது : இறைவா, அது நான் நீயாகவே நிலை பெற்றிருக்கும்.
இறை கேட்டது: அவ்வாறு நிலைபெறும் எனக்கும் உமக்குமிடையே
வித்தியாசங்களுண்டா?
வேறுபாடுகளுண்டா?
யான் விடுத்தது : இறைவா, அது நான், நீ, அது, இது, அவள், அவன்,
அவர்கள், இவர்கள், நீங்கள், நாங்கள் எனும்
வேறுபாடின்றி நிலை பெற்றிருக்கும்.
இறை கேட்டது: என்னிலிருந்து என்று யான் கூறியதன் தாற்பரியத்தைக் கூறுவீரா?
யான் விடுத்தது : ஆம், இறைவா. நீயாகவே வெளியானாய் என்பதை நீ
மறைத்துக் கூறுகிறாய்.