From jaybee@... Thu Jun 27 07:51:12 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 3); 27 Jun 2002 14:51:12 -0000
Received: (qmail 18604 invoked from network); 27 Jun 2002 14:51:11 -0000
Received: from unknown (66.218.66.216) by m15.grp.scd.yahoo.com with QMQP; 27 Jun 2002 14:51:11 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 27 Jun 2002 14:51:11 -0000
Received: from user (sp-103-7.tm.net.my [210.186.103.7]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GYD00HAMD98OY@...> for agathiyar@yahoogroups.com; Thu, 27 Jun 2002 22:51:10 +0800 (SGT)
Date: Thu, 27 Jun 2002 22:50:53 +0800
Subject: Traditions#3 - Places where one should not stand for a long time
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020627225053.007670e8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18839


அன்பர்களே,

தமிழர்களின் மரபுகள், நீதிகள் முதலியனவற்றைப் பற்றிய
நெறிநூல்கள் பல இருந்தன. மிகச் சாதாரணமான விஷயங்களில்கூட கவனத்தைச்செலுத்தியிருக்கிறார்கள்.
நூல்வடிவாக மட்டுமல்லாமல்
வாய்ச்சொல் வடிவிலும் பழமொழிகளாகவும் வழங்கியிருக்கிறார்கள்.
ஒரு மரபியல் நூலில், எங்கெங்கெல்லாம் நீண்ட நேரம்
நிற்கக்கூடாது என்பதைக்கூட குறிப்பிட்டிருக்கிறார் அதன் ஆசிரியர்.

1. கோபாவேசத்துடன் சண்டை நடந்துகொண்டிருக்கும் இடங்கள்

2. கள் குடித்துவிட்டு ஆடும் இடம்

3. பரத்தையர் சேரி

4. நட்பில்லாத இடங்கள்

6. தண்ணீர்த்துறை

5. பலர் வரப்போக இருக்குமிடங்கள்

ஒருமுறை அக்பருக்கும் அவருடைய அமைச்சர் பீர்பாலுக்கும்
ஒரு கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
"மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது; மனைவியின்
சொல்படிதான் கேட்பார்கள்", என்று பீர்பால் கூறினார். அக்பருக்கு
மகா கோபம். 'அதெப்படி இவ்வாறு பொதுமைப் படுத்தி இப்படிக்
கூறலாம்? நிச்சயம் பல ஆண்கள் தத்தம் மனைவியருக்கு
பயப்படாதவர்களாகவும் மனைவி சொற்படி கேட்காதவர்களாகவும்தான்
இருப்பர்.' - இது அக்பரின் கட்சி.
வாக்குவாதம் முற்றியதால் டில்லி மாநகரில் மனைவிக்கு பயப்படாத
கணவனைக் காட்டுவதாகச் சொல்லித் தம்கட்சியை நிரூபிக்க அக்பர்
பீர்பாலைத் தம்முடன் அழைத்தார். டில்லியின் பெரிய மைதானத்தில்
வந்து கூடுமாறு டில்லியின் மணமான ஆண்களையெல்லாம் தண்டோராப்
போட்டு அழைத்தனர்.
அவ்வாறே அந்த மைதானத்தில் அனைவரும் கூடினர்.
பீர்பால் ஓர் அறிவிப்புச் செய்தார்.

"இந்தக் கூட்டத்தில் யார் யாரெல்லாம் தம்முடைய மனைவிக்குப்
பயப்படுகிறீர்களோ, மனைவியின் பேச்சைக் கேட்கிறவர்களோ,
அவர்களெல்லாம் வலது பக்கம் செல்லுங்கள்".

முதலில் சிறுகச்சிறுக; பின்னர் பெருமளவில் அனைவரும்
வலப்பக்கம் சென்று நின்றனர்.

திடீரென்று ஒரே ஒருவன் மட்டும் தயங்கித் தயங்கிப் பார்த்துவிட்டு,
அந்த மனைவியர் சொல் விளங்கும் பெருமாள்கள் கூட்டத்தினின்றும்
வெளிப்பட்டு இடப்பக்கம் சென்று ஒதுங்கிநின்றுகொண்டான்.

அக்பர் ஆரவாரித்தார். "அதோ ஒரு உண்மையான ஆண் மகன்!"
கெக்கெலி கொட்டிச் சிரித்தார். (அது சரி. 'கெக்கெலி கொட்டுவது' என்றால்
என்ன? உங்களைக் கெக்கெலி கொட்டச் சொன்னால் செய்து காட்டுவீர்களா?)

"பொறுங்கள் ஆலம்பனா. அவனை விசாரிப்போம்", என்றார் பீர்பால்.
தொடர்ந்து அந்த ஆளை அருகில் கூட்டிவரச்செய்தார். அவன்
நடுங்கிக்கொண்டே வந்தான். அவனிடம் பீர்பால் கேட்டார்.
"ஏனப்பா? நீ ஏன் மனைவியின் சொல்படி கேட்கும் கூட்டத்திலிருந்து
பிரிந்துவந்தாய்?"

அவன் சொன்னான்: "நான் வீட்டை விட்டு வரும்போது,
'பெரிய கூட்டம் கூடும் இடத்தில் கூட்டத்தோடு சேரவேண்டாம்',
என்று என் மனைவி எச்சரித்து அனுப்பிவைத்தாள். ஆகவேதான் நான்
கூட்டத்திலிருந்து ஒதுங்கித் தனியே வந்துவிட்டேன்".

அன்புடன்

ஜெயபாரதி

====================