From jaybee@... Fri Jun 28 01:19:15 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 3); 28 Jun 2002 08:19:15 -0000
Received: (qmail 96125 invoked from network); 28 Jun 2002 08:19:15 -0000
Received: from unknown (66.218.66.217) by m10.grp.scd.yahoo.com with QMQP; 28 Jun 2002 08:19:15 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 28 Jun 2002 08:19:14 -0000
Received: from user (sp-103-140.tm.net.my [210.186.103.140]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GYE00BF5PS0YD@...> for agathiyar@yahoogroups.com; Fri, 28 Jun 2002 16:19:14 +0800 (SGT)
Date: Fri, 28 Jun 2002 16:17:58 +0800
Subject: Suryothai - Epic of a Heroic Queen
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020628161758.0070d890@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18847


அன்பர்களே,

இரண்டுநாட்களுக்கு முன்னர் ஒரு படம் பார்த்தேன்.
தாய்லாந்து மொழியில் உள்ள படம். பெயர் 'Suriyothai'. இது
தாய்லந்தின் வீராங்கனையாகக் கருதப்படும் ஒரு சயாமிய
அரசியைப் பற்றிய கதை.
மிகவும் பிரம்மாண்டமான அளவில் இந்தப் படத்தைத்
தாய்லாந்தியர் எடுத்திருக்கிறார்கள். 'தாய்' என்ற சொல்லைப்
பயன்படுத்தினால் அது மொழிக் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆகவே
அந்தக் காலத்துப் பெயரான Siam - சையாம் என்ற சொல்லைப்
பயன்படுத்துகிறேன். நம்மவர்கள் பழங்காலத்தில் சையாமை 'சீயம்'
என்று அழைத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்காக, வரலாறு முதலிய ஆய்வுகளை மட்டும்
செய்யவே ஐந்தாண்டுகள் ஆகின. அதன்பின்னர் இரண்டாண்டுகள்
தொடர்ந்து படம் எடுத்திருக்கிறார்கள்.ஒவ்வொரு சின்னஞ்சிறு
விஷயத்தையும் மிகக் கவனமாகப் படமாக்கியுள்ளனர்.
இந்தப் படத்தை எடுப்பதற்காக நாற்பது கோடி பாட் -
400 million Bahts - 8.8 million US dollars - செலவிட்டிருக்கிறார்கள்.
கடைசிக் காட்சியாக வரும் யானைப்போர்க் காட்சிக்கு மட்டுமே
இரண்டாயிரம் ஆட்கள், எண்பது யானைகள், எழுபது குதிரைகளைப்
பயன்படுத்தியுள்ளனர். இவற்றுடன் எழுபது தனித் தனிப் பாத்திரங்களுக்கு
எழுபது நடிகர்கள். அவர்களில் சிலர் பெரிய நடிகர்கள். இதுவரைக்கும்
இப்படிப்பட்ட படத்தை சயாம்காரர்கள் எடுத்ததில்லை.
படம் திரையிடப்பட்ட சிலநாட்களிலேயே 700 million Bahts -
வசூலைப் பெற்றது அந்தப் படம்.
ஏன் இந்த சிரத்தை? ஏனெனில் தாய்லாந்தின் அரசியாராகிய
மாட்சிமை பொருந்திய சிரிக்கிட் தேவியார்(H.M.Queen Sirikit) அவர்கள்
இந்தப் படத்தை எடுக்குமாறு யோசனையும்சொல்லி, ஆணையையும்
பிறப்பித்தார். அவருடைய உறவினராகிய இளவரசர் சத்ரிசாலெர்ம் யுகலா
Prince Chatrichalerm Yugala-தான் படத்தை இயக்கியுள்ளார்.
அந்தப் படத்தின் கதாநாயகியாகிய சூரியோதயா அரசியாக
லேடி பியாப்பாஸ் பிரொம்பக்டி நடித்திருக்கிறார். அவர் வேறு யாருமல்லர்.
சிரிக்கிட் தேவியாருடைய பிரதம பாங்கிமாராக (Lady in Waiting)
இருப்பவர். வில்லியான ஸ்ரீ சுதாச்சான் அரசியாக மாய் சாரோன்புரா
நடித்துள்ளார். அவர்தான் தாய்லாந்தின் முன்னணிப் பாடகி, நடிகை.
அவருக்கென்று பல வலைத்தளங்கள் இருக்கின்றன. இருக்காதா
பின்னே - Mai Charoenpura - கூகுளித்துப் பாருங்கள்,(ஒன்றுமில்லை.
'Google-லுக்குள் முக்குளித்துப் பாருங்கள்' என்பதனைச் சுருக்கிச்
சொன்னேன்.) காரணம் தெரியும். கண்ணதாசன் ஒருமுறை தாய்லாந்து
சென்றுவந்ததும் 'தாய்க்கிளி' என்ற அழகிய பாடலை இயற்றிப் பாடினார்.
குமுதத்தில்கூட வந்திருந்ததே.
அந்த இருவரையும் அந்தந்த ரோல்களில் போடுமாறு அரசியார்தான்
சொல்லியிருக்கிறார்கள்.
சூரியோதயா அரசியின் சிறப்பையும் அதன்மூலம் தாய்லாந்தின்
வரலாற்றுச்சிறப்பையும் உலகறியச்செய்யும் வண்ணம் அரசியார் இதனைச்
செய்துள்ளார். அத்துடன் இன்னொரு குறிக்கோளும் அரசியாருக்கு
இருக்கிறது. சையம்காரர்களுக்கு நாட்டுப்பற்றையும் சுயமரியாதையையும்
இனப்பற்றையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காகவும்தான்.
முதலில் சூரியோதயா அரசியைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.
திரைக்கதையில் வருவதையே சொல்கிறேன்.

அன்புடன்

ஜெயபாரதி

=================