From chand1945@... Fri Jun 28 08:15:46 2002
Return-Path:
X-Sender: chand1945@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 3); 28 Jun 2002 15:15:46 -0000
Received: (qmail 40023 invoked from network); 28 Jun 2002 15:15:46 -0000
Received: from unknown (66.218.66.216) by m2.grp.scd.yahoo.com with QMQP; 28 Jun 2002 15:15:46 -0000
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 28 Jun 2002 15:15:45 -0000
Received: (qmail 16591 invoked by uid 7002); 28 Jun 2002 20:45:28 +0530
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by webmail5.maa.sify.net with SMTP; 28 Jun 2002 20:45:28 +0530
Received: (qmail 16132 invoked by uid 7002); 28 Jun 2002 20:45:16 +0530
Received: from unknown (HELO sify.com) (202.9.169.30) by webmail5.maa.sify.net with SMTP; 28 Jun 2002 20:45:16 +0530
Message-ID: <3D1C7BB1.8ECFB948@...>
Date: Fri, 28 Jun 2002 20:37:29 +0530
X-Mailer: Mozilla 4.72 [en] (Win98; I)
X-Accept-Language: THAMIL,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: awwaikkuRaL(111-120)
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
From: ஞானவெட்டியான்
X-Yahoo-Group-Post: member; u=116500105
X-Yahoo-Profile: gyanavettiyaan
X-Yahoo-Message-Num: 18861

2.நினைப்புறுதல்

111.கருத்துறப் பார்த்துக் கலங்காம லுள்ளத்
திருத்திச் சிவனை நினை.

அசைவையொழித்து(கலங்காமல்) பார்வையால் உள்ளத்தில் எண்ணங்களை
நிலைநிறுத்திக் கருத்தினில் சதா சதாசிவனை நினை.

112. குண்டலியி னுள்ளே குறித்தரனைச் சிந்தித்து
மண்டலங்கள் மேலாகப் பார்.

பிரணவத்தின் மத்தியில் முக்கலையொன்றி அதன் மேல் ஊன்றிப்பார்.
வாசிட்டம்:
"ஆந்திர வேட்டனிகை யென்றோர் தனிநாடி நாடி கணூரணுகி நிற்கும்
வாய்ந்தவிசை வீணையுடல் வட்டம்போனீர்ச் சுழிபோல வட்டமேயா
யேயந்துள தானங்களெலா மெய்தலுறு மயனிடத்து மெரும்பின்பாலும்
போந்துள பல்லுயிரிடத்து முடறோறுந் தோன்றியே பொருந்தி நிற்கும்."

113.ஓர்மின்கள் சிந்தையி லொன்றச் சிவன்றன்னைப்
பார்மின் பழம்பொரு ளேயாம்.

மூல வித்தாகிய விந்துகலையைக் கொண்டு சிந்தையில் முக்கலையொன்றித்தால்
சிவத்தைக் காணலாம்.
திருமந்திரம்:
"விந்துவு நாதமு மேவியுடன் கூறூச்
சந்திர னோடே தலைப்படு மாயிடி
லந்தர வானத் தமுதம் வந்தூறிடு
மங்குதி மந்திர மாகுதி யாகுமே."

114.சிக்கெனத் தேர்ந்துகொள் சிந்தையி லீசனை
மிக்க மலத்தை விடு.

ஞானாசிரியனைக் கண்டுகொண்டு, தன் மலங்களொழித்துப் பின் அவனிடமிருந்து
ஞானவினை செய்யும் முறையைக் கற்று அதன்படி செய்து தேர்ச்சியுற்றால்
சிவத்தையடையலாம்.
திருமந்திரம்:
"கழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியும்
கழற்றி மலத்தை கமலத்தைப் பூரித்
துழற்றிக் கொடுக்கு முபாய மறிவார்க்
கழற்றித் தவிர்ந்துட லஞ்சன மாமே."

115.அறமின்கள் சிந்தையி லாதாரத் தைச்சேர்ந்
துறுமின்க ளும்முளே யோர்ந்து.

சிந்தையில் கலைகளையொன்றித்து உள்ளே எழும் பிரகாசத்தில் உள்ளே நடப்பதை
அறி.

116.நித்தம் நினைத்திரங்கி நின்மலனை யொன்றுவிக்கில்
முற்றுமவ நொளியே யாம்.

இந்திரிய சத்திகளை பிரணவத்தில் ஒன்றுவிக்கில் சிவக்கலையாகிய சக்தி
பலம்பெறும்.

117.ஓசை யுணர்ந்தங்கே யுணர்வைப் பெறும்பரிசால்
ஈசன் கருத்தா யிரு.

அறிவை அடையும் முயற்ச்சியில், அநாகத சத்தத்தை யுணர்ந்து, சதா
சிவசிந்தனையில் நில்.

118.இராப் பகலன்றி யிருசுடர்ச் சிந்திக்கில்
பராபரத்தோ டொன்றலு மாம்.

சதா சர்வ காலமும் சூரிய சந்திர கலைகளைச் சந்தித்து சிந்திக்கில்
சிவமாகிய பராபரத்தை அடையலாம்.

119.மிக்க மனத்தால் மிகநினந்து சிந்திக்கில்
ஒக்க சிவனுருவ மாம்.

புரைதீர்ந்த புரஞ்செலா சிவசிந்தனையொடு வாழ சிவனுரு வெளிப்படும்.

"சிந்தனை புரஞ்செலா சிவோகம் பாவனை சந்ததமுஞற்றிடில் சமாதி வந்துறும்."

120.வேண்டுவோர் வேண்டும் வகைதான் விரிந்தெங்கும்
காண்டற் கரிதாஞ் சிவம்.

பார்ப்பதற்கு அரிதாகிய சிவம் ஞானசித்தியடைந்தவர்கள் நினைத்தபடி
எத்திக்கும் பரவி நிற்கும்.
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)
போய்ப்பார்க்கலாம்:
http://www.geocities.com/enjayan2000/index.htm