From jaybee@... Fri Jun 28 22:13:59 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 29 Jun 2002 05:13:57 -0000
Received: (qmail 37974 invoked from network); 29 Jun 2002 05:13:57 -0000
Received: from unknown (66.218.66.216) by m9.grp.scd.yahoo.com with QMQP; 29 Jun 2002 05:13:57 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 29 Jun 2002 05:13:58 -0000
Received: from user (sp-103-90.tm.net.my [210.186.103.90]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GYG00I3KBV897@...> for agathiyar@yahoogroups.com; Sat, 29 Jun 2002 13:13:58 +0800 (SGT)
Date: Sat, 29 Jun 2002 13:13:38 +0800
Subject: Garudaa....Sugamaa?
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020629131338.0070d9d4@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18867


அன்பர்களே,

ஒரு பழமொழி இருக்கிறது.
"கருடா சுகமா?"

சிவபெருமானைப் பார்ப்பதற்காக விஷ்ணு கைலாயத்திற்குச்
சென்ற சமயம். தம் வாகனமாகிய கருடனிலிருந்து இறங்கிச்சென்றார்.
கருடன் ஒருபுறமாக நின்றிருந்தது. சிவனை விஷ்ணு சந்திக்கும்
வேளையில் சிவனுடைய தலையில் இருந்தபாம்பு, கருடனைப் பார்த்து,
"என்ன கருடா! சுகமா?" என்று எகத்தாளமாகக்கேட்டதாம். சாதாரணமான
நிலையில் கருடனின் நிழல் பட்டால்கூடபாம்புக்குச் சித்த பிரமை
பிடிக்குமாம். ஆனால் இப்போதோ நிலைமையே வேறு. சிவனின்
தலையில் அல்லவா உட்கார்ந்திருக்கிறது. தன்னுடைய ஜன்மவைரியாகிய
கருடனோ அடங்கி ஒடுங்கிப் பவ்வியமாக ஓர் ஓரத்தில் நின்று
கொண்டிருக்கிறது.
அந்த ஸ்தானம் கொடுத்த தெனாவெட்டில்தான் அப்படியொரு
தில்லோடு கருடனைப் பார்த்துக் கேட்டிருக்கிறது.
அதற்கு அந்த கருடன் சொன்னதாம்:
"அதெல்லாம் அவரவர் இருக்குமிடத்தில் இருந்தால் சுகம்தான்".

இந்தக் கதை மிகவும் பழமையானதாகத்தான் இருக்கும்போல்
தெரிகிறது. ஏனெனில் முன்னூற்றைம்பது ஆண்டுகளுக்கு
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்முன்னர் பாடிய 'நன்னெறி'
என்னும் நீதிநூலில், ஒரு பாடலில் இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தமைத்தா மருவில் - பலியேல்
கடவுள் அவிர்சடைமேற் கட்செவியஞ் சாதே
படர்நிறையப் புள்ளரசைப் பார்த்து.

பலி ஏல் கடவுள் அவிர் சடைமேற் கட்செவி- நைவேத்தியம்
போன்றவற்றை ஏற்றுக்கொள்ளும் சிவபெருமானின்
சடாமுடியின் மீது அமர்ந்திருக்கும் பாம்பு
படர்சிறை அப்புள் அரசைப் பார்த்து - படர்ந்த சிறகைக்கொண்ட
பறவைகளுக்கு அரசாகிய கருடனைப் பார்த்து
அஞ்சாது - பயப்படாது.

அதுபோல,

மெலியோர் - வலிமையிலார்
வலிய விரவலரை அஞ்சார் - தம்மைவிட வலிமைமிக்க எதிரிகளைக்
கண்டு பயப்படமாட்டார்;

எப்போது?,

தாம் வலியோர் தமை மருவில் அஞ்சார் -தம் எதிரிகளைவிட பலம்
வாய்ந்தவர்களைச் சார்ந்திருக்கும்போது.

இந்தக் கதையை வைத்துக் கவியரசு கண்ணதாசன்
பாடியிருக்கிறார். படத்தின் பெயர் மறந்துவிட்டது.

'பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு சொன்னது,
"கருடா சௌக்கியமா?"
"இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே!",
கருடன் சொன்னது.
இதில்
அருத்தமுள்ளது.

அன்புடன்

ஜெயபாரதி

====================