From naga ganesan@... Sun Jun 30 17:24:11 2002
Return-Path:
Received: (qmail 71725 invoked from network); 1 Jul 2002 00:24:11 -0000
Received: from unknown (66.218.66.218) by m5.grp.scd.yahoo.com with QMQP; 1 Jul 2002 00:24:11 -0000
Received: from unknown (HELO n20.grp.scd.yahoo.com) (66.218.66.76) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 1 Jul 2002 00:24:11 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [66.218.67.167] by n20.grp.scd.yahoo.com with NNFMP; 01 Jul 2002 00:24:10 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 01 Jul 2002 00:24:10 -0000
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 30 Jun 2002 14:08:06 -0000
Received: (qmail 29965 invoked from network); 30 Jun 2002 14:08:06 -0000
Received: from unknown (66.218.66.218) by m10.grp.scd.yahoo.com with QMQP; 30 Jun 2002 14:08:06 -0000
Received: from unknown (HELO n25.grp.scd.yahoo.com) (66.218.66.81) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 30 Jun 2002 14:08:06 -0000
Received: from [66.218.67.191] by n25.grp.scd.yahoo.com with NNFMP; 30 Jun 2002 14:08:06 -0000
Date: Sun, 30 Jun 2002 14:08:04 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Garudaa....Sugamaa?
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 4921
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naa ganesan"
X-Originating-IP: 209.144.24.219
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naa ganesan
X-Yahoo-Message-Num: 18903


நன்னெறி வெண்பாவைப் போல, இன்னும் 2-3 செய்யுள்கள் "கருடா சௌக்கியமா?" கதை
பற்றித் தமிழில் பார்த்திருக்கிறேன். பிரபந்தங்களிலும் வருகிறது.
சிவப்பிரகாசருக்கு பிக்ஷாடணமூர்த்தி வழிபடுதெய்வம். பிட்சாடனர் நவமணிமாலை
என்றெல்லாம் பாடியுள்ளார். பலி ஏல் கடவுள் = பிச்சை தேரும் பெருமான் என்பது
சிவபிரானைக் குறிக்கிறது. நைவேத்தியம் என்று சொல்வது பல கடவுளுக்கும் பொருந்தி,
சிவனை மாத்திரம்சுட்டுவதில்லை.

கருடனைப் பற்றி அந்தகக்கவியின் செய்யுள் ஒன்று:

சீராடை அற்ற வைரவன் வாகனம் சேர வந்து
பாராரும் நான்முகன் வாகனந்தன்னை முன்பற்றிக்கவ்வி
நாராயணன் உயர்வாகனம் ஆயிற்று நம்மைமுகம்
பாரான் மைவாகனன் வந்தே வயிற்றைப் பற்றினனே.

அந்தகக் கவி சோறுண்ண அமர்கிறார் (நான்முகன் வாகனம் = அன்னம்).
வைரவன் வாகனம் = நாய் அன்னத்தைக் கவ்வி, கருடன்போலப்
பறந்து விரைந்தோடிப் போனது. மை வாகனன் = ஹோமங்களில்
ஆவுதியாகும் பலியாடு. ஆட்டை வாகனங்கொண்டோன் = அக்கினி.
கவிஞரைப் பசி அக்நியாய் வாட்டிற்று.

அன்புடன்,
நா. கணேசன்


--- In agathiyar@y..., "kishorekca" wrote:
> சூரியகாந்தி - மாண்புமிகு ஜெ வும் முத்துராமனும் நடித்தது. பொருத்தமான இடத்தில் பாட்டு
உபயோகப்படுத்தி
> யிருகிறார்கள்: நாயகனுக்கும் நாயகக்கும் திருமணம் முடிந்துவிடுகிறது. அவளுக்கு வேலையில் பதவி உயர்வு
கி
> டைக்கிறது - அவனைவிட அதிக சம்பளமும் அங்கீகாரமும் கிடைக்கின்றன. அவள் தன்னை
> உதாசீனப்படுத்துவதாக நினைக்கிறான், தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொள்கிறான். அவளைப்
பாராட்ட
> நடக்கும் விழாவில் பார்வையாளனாக அமர்ந்த்திருக்கிறான். அப்போது டி.எம்.ஸே படத்திலும் வந்து பாடுவார்:
>
> பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?
> யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சொக்கியமே
> கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
> ..
> நீயும் நானும் சேர்த்திருந்தோம் நிலவும் வானும் போல
> இன்று நான்மட்டும் தேய்ந்துவந்தேன் நீ வளர்ந்த்ததாலே
> என் உள்ளம் எனைப்பர்த்து கேலி செய்யும்போது
> இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதியேது
> ..
> மதியாதார் தலைவாசல் நுழையாதே என்று
> மானமுள்ள மனிதருக்கு அவ்வை சொன்னது
> அதில் அர்த்தம் உள்ளது
> ..
>
> நிற்க. மயில் ராவணன் கதையை திரு. கணேசன் சொன்னதுபோல் வலையின் மூலமாக வரவழைத்து
> படித்துக்கொண்டிருக்கிறேன். கதையின் சாரத்தைவிட அதில் வரும் குறிப்பிட்ட தர்க்கவாதங்கள் சுட்டும்
> கருத்துக்கள் சிந்தனைக்க்றியவையாக இருக்கின்றன. படித்துமுடித்துவிட்டு எழுதுகிறேன்.
>
> அன்புடன்,
> கிஷோர்
>
> --- In agathiyar@y..., JayBee wrote:
> >
> > அன்பர்களே,
> >
> > ஒரு பழமொழி இருக்கிறது.
> > "கருடா சுகமா?"
> >
> > சிவபெருமானைப் பார்ப்பதற்காக விஷ்ணு கைலாயத்திற்குச்
> > சென்ற சமயம். தம் வாகனமாகிய கருடனிலிருந்து இறங்கிச்சென்றார்.
> > கருடன் ஒருபுறமாக நின்றிருந்தது. சிவனை விஷ்ணு சந்திக்கும்
> > வேளையில் சிவனுடைய தலையில் இருந்த பாம்பு, கருடனைப் பார்த்து,
> > "என்ன கருடா! சுகமா?" என்று எகத்தாளமாகக்கேட்டதாம். சாதாரணமான
> > நிலையில் கருடனின் நிழல் பட்டால்கூட பாம்புக்குச் சித்த பிரமை
> > பிடிக்குமாம். ஆனால் இப்போதோ நிலைமையே வேறு. சிவனின்
> > தலையில் அல்லவா உட்கார்ந்திருக்கிறது. தன்னுடைய ஜன்மவைரியாகிய
> > கருடனோ அடங்கி ஒடுங்கிப் பவ்வியமாக ஓர் ஓரத்தில் நின்று
> > கொண்டிருக்கிறது.
> > அந்த ஸ்தானம் கொடுத்த தெனாவெட்டில்தான் அப்படியொரு
> > தில்லோடு கருடனைப் பார்த்துக் கேட்டிருக்கிறது.
> > அதற்கு அந்த கருடன் சொன்னதாம்:
> > "அதெல்லாம் அவரவர் இருக்குமிடத்தில் இருந்தால் சுகம்தான்".
> >
> > இந்தக் கதை மிகவும் பழமையானதாகத்தான் இருக்கும்போல்
> > தெரிகிறது. ஏனெனில் முன்னூற்றைம்பது ஆண்டுகளுக்கு
> > துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்முன்னர் பாடிய 'நன்னெறி'
> > என்னும் நீதிநூலில், ஒரு பாடலில் இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
> >
> > மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
> > வலியோர் தமைத்தா மருவில் - பலியேல்
> > கடவுள் அவிர்சடைமேற் கட்செவியஞ் சாதே
> > படர்நிறையப் புள்ளரசைப் பார்த்து.
> >
> > பலி ஏல் கடவுள் அவிர் சடைமேற் கட்செவி- நைவேத்தியம்
> > போன்றவற்றை ஏற்றுக்கொள்ளும் சிவபெருமானின்
> > சடாமுடியின் மீது அமர்ந்திருக்கும் பாம்பு
> > படர்சிறை அப்புள் அரசைப் பார்த்து - படர்ந்த சிறகைக்கொண்ட
> > பறவைகளுக்கு அரசாகிய கருடனைப் பார்த்து
> > அஞ்சாது - பயப்படாது.
> >
> > அதுபோல,
> >
> > மெலியோர் - வலிமையிலார்
> > வலிய விரவலரை அஞ்சார் - தம்மைவிட வலிமைமிக்க எதிரிகளைக்
> > கண்டு பயப்படமாட்டார்;
> >
> > எப்போது?,
> >
> > தாம் வலியோர் தமை மருவில் அஞ்சார் - தம் எதிரிகளைவிட பலம்
> > வாய்ந்தவர்களைச் சார்ந்திருக்கும்போது.
> >
> > இந்தக் கதையை வைத்துக் கவியரசு கண்ணதாசன்
> > பாடியிருக்கிறார். படத்தின் பெயர் மறந்துவிட்டது.
> >
> > 'பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு சொன்னது,
> > "கருடா சௌக்கியமா?"
> > "இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே!",
> > கருடன் சொன்னது.
> > இதில்
> > அருத்தமுள்ளது.
> >
> > அன்புடன்
> >
> > ஜெயபாரதி
> >
> > ====================