From kishorekca@... Mon Jul 01 21:51:48 2002
Return-Path:
X-Sender: kishorekca@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 2 Jul 2002 04:51:48 -0000
Received: (qmail 99910 invoked from network); 2 Jul 2002 04:51:48 -0000
Received: from unknown (66.218.66.217) by m3.grp.scd.yahoo.com with QMQP; 2 Jul 2002 04:51:48 -0000
Received: from unknown (HELO n29.grp.scd.yahoo.com) (66.218.66.85) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 2 Jul 2002 04:51:47 -0000
Received: from [66.218.67.188] by n29.grp.scd.yahoo.com with NNFMP; 02 Jul 2002 04:51:47 -0000
Date: Tue, 02 Jul 2002 04:51:46 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Garudaa....Sugamaa?
Message-ID:
In-Reply-To: <3D207ECB.15306848@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 6348
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "kishorekca"
X-Originating-IP: 207.0.105.220
X-Yahoo-Group-Post: member; u=44815288
X-Yahoo-Profile: kishorekca
X-Yahoo-Message-Num: 18922

அன்புள்ள திரு. ஞானவெட்டியான் அவர்களுக்கு,
வலையின் மூலம் வாங்கினேன் என்று தெளிவாக சொல்லியிருக்க வேண்டும் - www.bn.com என்ற முகவரியில் கி
டைத்தது. வெளீயீட்டாளர்கள் Motilal Banarsidas: வலையில் www.mlbd.com என்ற முகவரியில்
பாருங்கள். அமெரிக்காவைவிட குறைந்த விலையில் கிடைக்கக்கூடும். பட்டியலில் இல்லாவிட்டாலும் மின்னஞ்சல்
மூலம் கேளுங்கள். இது ங்கில மொழிபெயர்ப்புதான் - தமிழ் பதிப்பு இருப்பதாக தெரியவில்லை. வெளிவந்த
ண்டு 1987; அதற்கேற்ப தாள்களெல்லாம் பழுத்துவிட்டன. பயன்பட்ட நூல்களின் வரிசை 229ம் பக்கம்
இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது; புத்தகத்தில் 224ம் பக்கம்வரைதான் இருக்கிறது.

வழக்கம்போல் இரத்தினநாயகர் & ஸன்ஸ் வெளியிட்ட புத்தகம் ஒன்று குறிப்பிடப்படுகிறது (மயில் ராவணன்
சண்டை நாடகம், 1969). இந்த முறை இந்தியா வரும்போது விடாமல் அவர்கள் அலுவலகத்திற்க்கு சென்று
என்னவெல்லாம் கிடைக்கிறதென்று பார்க்கப்போகிறேன்.

URL-இன் தமிழாக்கம் உரல் என்று புரிய சிறிது நேரம் பிடித்தது:-) நறுமை = Regards? தவனமாய்
என்றால் என்ன பொருள்?

அன்புடன்,
கிஷோர்
--- In agathiyar@y..., Njaanavettiyaan wrote:
> அளிமிகு நண்பர் திரு.கிஷோர் அவர்கட்கு,
> வணக்கம்.
> > நிற்க. மயில் ராவணன் கதையை திரு. கணேசன் சொன்னதுபோல் வலையின் மூலமாக வரவழைத்து
> > படித்துக்கொண்டிருக்கிறேன். கதையின் சாரத்தைவிட அதில் வரும் குறிப்பிட்ட தர்க்கவாதங்கள் சுட்டும்
> > கருத்துக்கள் சிந்தனைக்க்றியவையாக இருக்கின்றன. படித்துமுடித்துவிட்டு எழுதுகிறேன்.
> அந்த வலை உரல் தர இயலுமா?
> நறுமையுடன்,
> தவனமாய்,
> - ஞானவெட்டியான்
> - திண்டுக்கல்(தமிழகம்)
> http://www.geocities.com/enjayan2000/index.htm
>
>
> kishorekca wrote:
> >
> > சூரியகாந்தி - மாண்புமிகு ஜெ வும் முத்துராமனும் நடித்தது. பொருத்தமான இடத்தில் பாட்டு
உபயோகப்படுத்தி
> > யிருகிறார்கள்: நாயகனுக்கும் நாயகக்கும் திருமணம் முடிந்துவிடுகிறது. அவளுக்கு வேலையில் பதவி
உயர்வு கி
> > டைக்கிறது - அவனைவிட அதிக சம்பளமும் அங்கீகாரமும் கிடைக்கின்றன. அவள் தன்னை
> > உதாசீனப்படுத்துவதாக நினைக்கிறான், தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொள்கிறான். அவளைப்
பாராட்ட
> > நடக்கும் விழாவில் பார்வையாளனாக அமர்ந்த்திருக்கிறான். அப்போது டி.எம்.ஸே படத்திலும் வந்து
பாடுவார்:
> >
> > பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?
> > யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சொக்கியமே
> > கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
> > ..
> > நீயும் நானும் சேர்த்திருந்தோம் நிலவும் வானும் போல
> > இன்று நான்மட்டும் தேய்ந்துவந்தேன் நீ வளர்ந்த்ததாலே
> > என் உள்ளம் எனைப்பர்த்து கேலி செய்யும்போது
> > இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதியேது
> > ..
> > மதியாதார் தலைவாசல் நுழையாதே என்று
> > மானமுள்ள மனிதருக்கு அவ்வை சொன்னது
> > அதில் அர்த்தம் உள்ளது
> > ..
> >
> > நிற்க. மயில் ராவணன் கதையை திரு. கணேசன் சொன்னதுபோல் வலையின் மூலமாக வரவழைத்து
> > படித்துக்கொண்டிருக்கிறேன். கதையின் சாரத்தைவிட அதில் வரும் குறிப்பிட்ட தர்க்கவாதங்கள் சுட்டும்
> > கருத்துக்கள் சிந்தனைக்க்றியவையாக இருக்கின்றன. படித்துமுடித்துவிட்டு எழுதுகிறேன்.
> >
> > அன்புடன்,
> > கிஷோர்
> >
> > --- In agathiyar@y..., JayBee wrote:
> > >
> > > அன்பர்களே,
> > >
> > > ஒரு பழமொழி இருக்கிறது.
> > > "கருடா சுகமா?"
> > >
> > > சிவபெருமானைப் பார்ப்பதற்காக விஷ்ணு கைலாயத்திற்குச்
> > > சென்ற சமயம். தம் வாகனமாகிய கருடனிலிருந்து இறங்கிச்சென்றார்.
> > > கருடன் ஒருபுறமாக நின்றிருந்தது. சிவனை விஷ்ணு சந்திக்கும்
> > > வேளையில் சிவனுடைய தலையில் இருந்த பாம்பு, கருடனைப் பார்த்து,
> > > "என்ன கருடா! சுகமா?" என்று எகத்தாளமாகக்கேட்டதாம். சாதாரணமான
> > > நிலையில் கருடனின் நிழல் பட்டால்கூட பாம்புக்குச் சித்த பிரமை
> > > பிடிக்குமாம். ஆனால் இப்போதோ நிலைமையே வேறு. சிவனின்
> > > தலையில் அல்லவா உட்கார்ந்திருக்கிறது. தன்னுடைய ஜன்மவைரியாகிய
> > > கருடனோ அடங்கி ஒடுங்கிப் பவ்வியமாக ஓர் ஓரத்தில் நின்று
> > > கொண்டிருக்கிறது.
> > > அந்த ஸ்தானம் கொடுத்த தெனாவெட்டில்தான் அப்படியொரு
> > > தில்லோடு கருடனைப் பார்த்துக் கேட்டிருக்கிறது.
> > > அதற்கு அந்த கருடன் சொன்னதாம்:
> > > "அதெல்லாம் அவரவர் இருக்குமிடத்தில் இருந்தால் சுகம்தான்".
> > >
> > > இந்தக் கதை மிகவும் பழமையானதாகத்தான் இருக்கும்போல்
> > > தெரிகிறது. ஏனெனில் முன்னூற்றைம்பது ஆண்டுகளுக்கு
> > > துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்முன்னர் பாடிய 'நன்னெறி'
> > > என்னும் நீதிநூலில், ஒரு பாடலில் இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
> > >
> > > மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
> > > வலியோர் தமைத்தா மருவில் - பலியேல்
> > > கடவுள் அவிர்சடைமேற் கட்செவியஞ் சாதே
> > > படர்நிறையப் புள்ளரசைப் பார்த்து.
> > >
> > > பலி ஏல் கடவுள் அவிர் சடைமேற் கட்செவி- நைவேத்தியம்
> > > போன்றவற்றை ஏற்றுக்கொள்ளும் சிவபெருமானின்
> > > சடாமுடியின் மீது அமர்ந்திருக்கும் பாம்பு
> > > படர்சிறை அப்புள் அரசைப் பார்த்து - படர்ந்த சிறகைக்கொண்ட
> > > பறவைகளுக்கு அரசாகிய கருடனைப் பார்த்து
> > > அஞ்சாது - பயப்படாது.
> > >
> > > அதுபோல,
> > >
> > > மெலியோர் - வலிமையிலார்
> > > வலிய விரவலரை அஞ்சார் - தம்மைவிட வலிமைமிக்க எதிரிகளைக்
> > > கண்டு பயப்படமாட்டார்;
> > >
> > > எப்போது?,
> > >
> > > தாம் வலியோர் தமை மருவில் அஞ்சார் - தம் எதிரிகளைவிட பலம்
> > > வாய்ந்தவர்களைச் சார்ந்திருக்கும்போது.
> > >
> > > இந்தக் கதையை வைத்துக் கவியரசு கண்ணதாசன்
> > > பாடியிருக்கிறார். படத்தின் பெயர் மறந்துவிட்டது.
> > >
> > > 'பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு சொன்னது,
> > > "கருடா சௌக்கியமா?"
> > > "இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே!",
> > > கருடன் சொன்னது.
> > > இதில்
> > > அருத்தமுள்ளது.
> > >
> > > அன்புடன்
> > >
> > > ஜெயபாரதி
> > >
> > > ====================
> >
> > -------------------------------------------------------------------------
--------
> > For archives click
> > http://groups.yahoo.com/group/agathiyar/messages
> > -------------------------------------------------------------------------
--------
> >
> >
> >
> > Your use of Yahoo! Groups is subject to
http://docs.yahoo.com/info/terms/
>
> --