From eramurug@... Mon Jul 01 23:53:12 2002
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 2 Jul 2002 06:53:10 -0000
Received: (qmail 98938 invoked from network); 2 Jul 2002 06:53:10 -0000
Received: from unknown (66.218.66.218) by m9.grp.scd.yahoo.com with QMQP; 2 Jul 2002 06:53:10 -0000
Received: from unknown (HELO web14803.mail.yahoo.com) (216.136.224.219) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 2 Jul 2002 06:53:11 -0000
Message-ID: <20020702065311.67697.qmail@...>
Received: from [194.75.128.2] by web14803.mail.yahoo.com via HTTP; Mon, 01 Jul 2002 23:53:11 PDT
Date: Mon, 1 Jul 2002 23:53:11 -0700 (PDT)
Subject: 'nEdudi vAzhka' over a long distance call
To: agathiyar@yahoogroups.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 18923
நீடூழி வாழ்க
விடிகாலை நாலு மணிக்குத் துயில் எழுந்ததும் இப்படி வாழ்த்தப்பெற, அதுவும் ஒரு
பெரியவரால் வாழ்த்தப்பெற, ஓர் அறிஞரால் வாழ்த்தப்பெற, ஓர்
அன்புக்குரிய நண்பரால் வாழ்த்தப்பெற, அதுவும் அவருடைய அறுபதாம் ண்டு நிறைவு
நாளில் வாழ்த்தப்பெற என்ன தவம் செய்தேன்!
உங்கள் எல்லோர் சார்பிலும் வாழ்த்துகளையும் சிகளையும் பெற்றுக்கொண்டவன்
நான்.
வாழ்த்தியவர் நம் அன்புக்குரிய ஜேய்பி-சான்.
எழுந்ததும் மலேசியாவுக்குத் தொலைபேசினேன்.
எங்கேஜ்டா, மணியடிக்கிறதா என்று தெரியாத தொலைபேசிச் சத்தம் -
அது ஏன் மலேசியத் தொலைபேசியில் நார்மல் டோன், எங்கேஜ்ட் டோன்
போல் வருகிறது?.
சரி அப்புறம் சாவகாசமாக முயற்சி செய்யலாம் என்று நான் தொலைபேசியைக்
கீழே வைக்கப்போக, மறுமுனையில் குரல். ஜேய்பி-சான் குடும்ப உறுப்பினர்.
கல்யாணவீடு போல் மகிழ்ச்சியான குரல்கள் பின்னணியில் கேட்டுக்
கொண்டிருக்கின்றன. அறுபதாம் ண்டு விழா - மணநாள் காணும் மாப்பிள்ளை
மனையில் உட்கார்ந்து தன் அன்புக்குரிய மனைவியாருக்கு மகிழ்ச்சியாகத்
திருப்பூட்டிக் கொண்டிருக்கிறாரா?
இன்னும் இரண்டு குரல்கள் மாறி, அப்புறம் எனக்குப் பழக்கமான குரல்.
நல்ல நேரத்துலே தான் போன் செய்யறீங்க
ஜேய்பி-சான் உற்சாகமாகச் சொல்கிறார்.
என்ன விஷயம் என்று விசாரிக்கிறேன்.
இங்கே இப்பத்தான் எல்லோருக்கும் சி வழங்கிக்கிட்டு இருக்கோம்
அட ரொம்ப நல்லதாப் போச்சு .. எனக்கும் கொஞ்சம் ஃபோன் வழியாப்
போடுங்க
நீடூழி வாழ்க
JayBee-san, you made my day!!
வாழ்த்துகளுடனும் நன்றியுடனும்,
இரா.முருகன்
__________________________________________________
Do You Yahoo!?
Sign up for SBC Yahoo! Dial - First Month Free
http://sbc.yahoo.com