From chand1945@... Tue Jul 02 05:46:32 2002
Return-Path:
X-Sender: chand1945@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 2 Jul 2002 12:46:32 -0000
Received: (qmail 19478 invoked from network); 2 Jul 2002 12:46:32 -0000
Received: from unknown (66.218.66.217) by m10.grp.scd.yahoo.com with QMQP; 2 Jul 2002 12:46:32 -0000
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 2 Jul 2002 12:46:29 -0000
Received: (qmail 14344 invoked by uid 7002); 2 Jul 2002 18:16:08 +0530
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by webmail5.maa.sify.net with SMTP; 2 Jul 2002 18:16:08 +0530
Received: (qmail 13982 invoked by uid 7002); 2 Jul 2002 18:15:59 +0530
Received: from unknown (HELO sify.com) (202.9.169.103) by webmail5.maa.sify.net with SMTP; 2 Jul 2002 18:15:59 +0530
Message-ID: <3D219E9F.AFBCB89A@...>
Date: Tue, 02 Jul 2002 18:07:51 +0530
X-Mailer: Mozilla 4.72 [en] (Win98; I)
X-Accept-Language: THAMIL,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Nandi Namam NamasivayavE
References:
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
From: Njaanavettiyaan
X-Yahoo-Group-Post: member; u=116500105
X-Yahoo-Profile: gyanavettiyaan
X-Yahoo-Message-Num: 18929
அளிமிகு நண்பர் திரு.குமார் அவர்கட்கு,
வணக்கம்.
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!!
நமசிவய! சிவயநம! யவசிமந!!!
நறுமையுடன்,
தவனமாய்,
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)
http://www.geocities.com/enjayan2000/index.htm
sarabeswar wrote:
>
> பெரிசு என்ற அன்புசால் பெருந்தகை
> மரு.திரு.ஜெயபாரதியார் அவர்கள்
> தம் நம்பிக்கைகளை
> யாதொரு பாசாங்குமின்றி உண்மையாய்
> எழுதப் போந்தமையால் எத்தகைய
> எதிர்ப்புகளையெல்லாம் சந்திக்க
> நேர்ந்திருக்கும் என்பதைச்
> சமீபத்தில்தான் அறிந்து கொள்ள முடிந்தது.
>
> அன்னார் மணிவிழா காணும் இந்நாளில்
> எமையாளும் இறையிடம் இறைஞ்சுவது ஒன்றே.
> சார்புணர்ந்து சமத்துவம் கண்ட வள்ளுவர்
> காட்டும் அன்புவழி செழிக்கட்டும்!
>
> சார்தரு நோய் தீர்க்கும் பதிகமென
> காழிப் பிள்ளையார் பாடி,
> பாடியவாறே தம் திருமணநாளன்று
> உற்றார் உறவினருடன்
> இஅருட்பெரும்சோதியில் கலந்த
> இப்பதிகத்தினை
> இங்கிட்டுப் பணிகிறேன்.
>
> திருச்சிற்றம்பலம்
>
> காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
> ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
> வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
> நாதன் நாமம் நமச்சிவாயவே 1
>
> நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
> வம்பு நாண் மலர்வார் மது ஒப்பது
> செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம்
> நம்பன் நாமம் நமச்சிவாயவே 2
>
> நெக்குள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து
> அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவர்
> தக்க வானவராத் தகுவிப்பது
> நக்கன் நாமம் நமச்சிவாயவே 3
>
> இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
> நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்
> நியமந்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
> நயனன் நாமம் நமச்சிவாயவே 4
>
> கொல்வார் ஏனும் குணம் பல நன்மைகள்
> இல்லார் ஏனும் இயம்புவர் ஆயிடின்
> எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
> நல்லார் நாமம் நமச்சிவாயவே 5
>
> மந்தரம் அன்ன பாவங்கள் மேவிய
> பந்தனை யவர் தாமும் பகர்வரேல்
> சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்
> நந்தி நாமம் நமச்சிவாயவே 6
>
> நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
> உரைசெய்வாயினர் ஆயின் உருத்திரர்
> விரவியே புகவித்திடும் என்பரால்
> வரதன் நாமம் நமச்சிவாயவே 7
>
> இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
> தலங்கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும்
> மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
> நலங்கொள் நாமம் நமச்சிவாயவே 8
>
> போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
> பாதம் தான் முடி நேடிய பண்பராய்
> யாதும் காண் பரிதாகி அலந்தவர்
> ஓதும் நாமம் நமச்சிவாயவே 9
>
> கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள்
> வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
> விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
> நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே 10
>
> நந்தி நாமம் நமச்சிவாய எனும்
> சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்
> சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
> பந்தபாசம் அறுக்க வல்லார்களே 11
>
> திருச்சிற்றம்பலம்
>
> என் அனுபவத்தில், பாடும்பொதெல்லாம்
> பலதையும் தெருட்டும் பதிகமிது.
>
> "நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
> வம்பு நாண் மலர்வார் மது ஒப்பது" என்பதை
> யோகியார் அவர்களும் ஞானவெட்டியான்
> அவர்களும் விரித்துரைக்கக் கண்டோம்
>
> 'ஏத்த வல்லார் எல்லாம்' என்று சொல்லி
> சோதியில் கலந்தமை சுட்டுவது
> அல்லவா
> எம் அன்னை அக்குழந்தைக்கு
> ஞானப்பாலூட்டியாண்டதன்
> பயன்!
>
> நந்தி நாமம் நமச்சிவாயவே
> ---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> ---------------------------------------------------------------------------------
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
--