From jaybee@... Tue Jul 02 17:18:21 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 3 Jul 2002 00:18:21 -0000
Received: (qmail 76680 invoked from network); 3 Jul 2002 00:18:21 -0000
Received: from unknown (66.218.66.217) by m3.grp.scd.yahoo.com with QMQP; 3 Jul 2002 00:18:21 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 3 Jul 2002 00:18:16 -0000
Received: from user (sp-103-120.tm.net.my [210.186.103.120]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GYN0002RCUD2Y@...> for agathiyar@yahoogroups.com; Wed, 03 Jul 2002 08:18:16 +0800 (SGT)
Date: Wed, 03 Jul 2002 08:17:48 +0800
Subject: muuththa piLLaiyaar and iLaiya piLLaiyaar - Re: [agathiyar] Re: cirai
In-reply-to: <3.0.3.32.20020131075348.006d1f40@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020703081748.00769804@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <00d601c1a9ad$8fe88060$7682d6d2@...>
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18939
At 07:53 AM 1/31/02 +0800, you wrote:
>At 07:08 PM 1/30/02 +0000, you wrote:
>>--- In agathiyar@y..., "Hari Krishnan" wrote:
>>
>>
>பாலசுப்ரமண்யத்தின் சீறடிதான். சரியாகச் சொல்லிவிட்டீர்.
>> இiளையனார், iஇளையநயினார்,
>இiளையபெருமாள் என்றே
>> சிலாலிகிதங்களில் பயிலும்.
>>
>> நும் ரசிகன்,
>> நா. கணேசன்
>
>
> திருவண்ணாமலையில் இருக்கும் முருகன் சன்னிதி,
>'கம்பத்து இளயனார் சன்னிதி' என்றே அழைக்கப்படுகிறது.
>அங்குதான் சம்பந்தாண்டானுடன் ஏற்பட்ட போட்டியில் அருணகிரிநாதர்,
>முருகனைத் தோன்றச்செய்து காட்டியது.
> இந்தப் பட்டியலில், 'இளைய பிள்ளையாரை'யும்
>சேர்த்துக்கொள்ளுங்கள் .
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
பழைய கல்வெட்டுக்களில் வினாயகரை 'மூத்த பிள்ளையார்'
என்றும் முருகனை 'இளைய பிள்ளையார்' என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் பன்னிரு அடியார்கள்
பாடிய நாற்பது நூல்கள் உள்ளன.
அந்த அடியார்களில் கபிலதேவ நாயனார், அதிராவடிகள்,
நம்பியாண்டார் நம்பி ஆகிய மூவரும் விநாயகரை வழுத்தி நூல்கள்
இயற்றியிருக்கின்றனர்.
கபில தேவ நாயனாரின் 'மூத்த நாயனார் திருவிரட்டை
மணிமாலை' என்னும் நூல் விநாயகப்பெருமானின்மீது வெண்பாவும்
கட்டளைக் கலைத்துறையும் ஒன்று மாற்றி ஒன்றாக வருமாறு
இருபது பாடல்களால் அமைக்கப்பட்ட நூல். அந்தாதியாகவும்
அமைந்துள்ளது. இதன் முதற்பாடலாகிய
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் -உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை.
என்பது மிகவும் புகழ்வாந்தது; புழக்கத்தில் உள்ளது. இன்னொன்று:
இவ்விரண்டு பாடல்களும் சூலமங்கலம் சகோதரிகள் பாடி
வெளியிட்டுள்ள 'ஆலய வழிபாடு' என்னும் ஒலிநாடாவில் முதலில்
இடம்பெற்றுள்ளன.
இந்தப் பாடல்கள் நான் தொகுத்துள்ள 'விநாயகர் பஞ்சபுராணம்'
என்னும் வழிபாட்டுக் கையேட்டில் இடம் பெறுகின்றன. வழிபாட்டின்
அங்கமாகப் பாடப்படுவது 'பஞ்சபுராணம்'.
'மூத்த பிள்ளையார் மும்மணிக்கோவை' என்னும் நூலை
அதிராவடிகள் இயற்றியுள்ளார். நேரிசை ஆசிரியப்பாவா, அகவல்,
இணைக்குறள் ஆசிரியப்பா ஆகியவை வெண்பா, கட்டளைக்
கலித்துறை ஆகியவற்றுடன் ஒன்றடுத்து ஒன்றாக வருகின்றன.
மொத்தம் இருபத்து மூன்று பாடல்கள்.
'திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை'
என்னும் நூல் நம்பியாண்டார்நம்பியால் பாடப்பட்டது. தமக்குக்
கல்வியையும் ஞானத்தையும் தந்து, சைவத்திருமுறைகளைத்
தேடி எடுக்கவும், தேவாரத்துக்குப் பண்களை மீண்டும் இணைப்பதற்கும்,
திருமுறைகளைத் தொகுப்பதற்கும் அருளிய விநாயகப்பெருமானின்
மீது பாடியுள்ளார். வெண்பாவும் கட்டளைக்கலித்துறையும் மாறிமாறி
வருகின்றன.
என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
விரசுமகிழ் சோலை வியன்நாரையூர் முக்கண்
அரசுமகிழ் அத்திமுகத் தான்.
என்று தொடங்குகிறது.
பதினோராம் திருமுறைக்கு முற்பட்ட காலத்தில் விநாயகரை
'மூத்த நாயனார்', 'மூத்த பிள்ளையார்' என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.
அதுபோலவே முருகனை 'இளைய பிள்ளையார்' என்றும்
'இளையனார்' என்றும் அழைத்தனர்.
அருணகிரிநாதருக்கும் சம்பந்தாண்டானுக்கும் ஏற்பட்ட
போட்டியில் முருகனை வரவழைக்கப் பாடி, முருகன் தோன்றிய
இடம் திருவண்ணாமலைக் கோயிலில் உள்ள 'கம்பத்திளையனார்
சன்னிதி'.
'இளைய பிள்ளையார்' என்னும் பெயர் கல்வெட்டுக்களில்
காணப்படுகிறது.
காலப்போக்கில் 'மூத்த', 'இளையா'ஆகிய சொற்கள் மறைந்து,
'பிள்ளையார்' என்ற பெயர் மட்டுமே எஞ்சி, அது விநாயகரைக்
குறிப்பதாக ஆகியது.