From harikris@... Thu Jul 04 18:37:24 2002
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 5 Jul 2002 01:37:24 -0000
Received: (qmail 28672 invoked from network); 5 Jul 2002 01:37:21 -0000
Received: from unknown (66.218.66.216) by m8.grp.scd.yahoo.com with QMQP; 5 Jul 2002 01:37:21 -0000
Received: from unknown (HELO smtp01.vsnl.net) (203.197.12.7) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 5 Jul 2002 01:37:21 -0000
Received: from g9d6h9 ([203.199.240.66]) by smtp01.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GYR5U602.8DL for ; Fri, 5 Jul 2002 07:07:18 +0530
Message-ID: <003401c223c5$13a4eba0$42f0c7cb@g9d6h9>
To:
References: <3.0.3.32.20020705071304.00784238@...>
Subject: Re: [agathiyar] ThirumuRai Series - 139
Date: Fri, 5 Jul 2002 07:10:02 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 6.00.2600.0000
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V6.00.2600.0000
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 18958

மணிவிழா நாயகருக்கு வணக்கம். விழாவிற்குப் பிறகு உங்களுக்கு எழுதும் முதல் கடிதம் தேங்காயுடன் தொடங்குவது பற்றி மகிழ்ச்சி.

நீண்ட நேரம் யோசித்துப் பார்த்தும் பழம்பாடல்களில் 'தென்னை' என்ற ஆட்சி மனத்திற்குப் புலப்படவில்லை. மாறாக 'நின்று தளரா வளர் தெங்கு' 'நாய்பெற்ற தெங்கம் பழம்' என்றுதான் தொடர்ந்து நினைவுக்கு வருகிறது. யாருக்காவது தென்னை என்ற ஆட்சி பழம்பாடல்களில் சிக்குகிறதா?

இன்னொரு விஷயம். தெங்கம்பழம் என்ற ஆட்சி இருந்திருக்கிறது. (கவுண்டமணி செந்தில் தேங்காய்/பழம் துணுக்கு ஒன்று எப்போதோ தொலைக்காட்சியில் பார்த்தது.)

மறுபடியும் வணக்கம் அண்ணாச்சி.

ஆசி கோரி,
ஹரி கிருஷ்ணன்.
----- Original Message -----
From: JayBee
To: agathiyar@yahoogroups.com
Sent: Friday, July 05, 2002 4:43 AM
Subject: Re: [agathiyar] ThirumuRai Series - 139




இந்தப் பாடலிலே 'தெங்கங் குலைகள்' என்று பயிலப்
படுகிறது. 'தெங்கு' என்றே தென்னை குறிப்பிடப்படுகிறது.
'தென்னை' என்பது பின்னால் ஏற்பட்டிருக்கும். 'தெங்கின் காய்'
'தேங்காய்'. தேங்காயைத் 'தெங்கனம்பழம்' என்று
சொல்வதுண்டு.

அன்புடன்

ஜெயபாரதி



[Non-text portions of this message have been removed]