From jaybee@... Thu Jul 04 22:26:33 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 5 Jul 2002 05:26:32 -0000
Received: (qmail 53603 invoked from network); 5 Jul 2002 05:26:32 -0000
Received: from unknown (66.218.66.218) by m13.grp.scd.yahoo.com with QMQP; 5 Jul 2002 05:26:32 -0000
Received: from unknown (HELO n20.grp.scd.yahoo.com) (66.218.66.76) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 5 Jul 2002 05:26:32 -0000
Received: from [66.218.67.128] by n20.grp.scd.yahoo.com with NNFMP; 05 Jul 2002 05:26:32 -0000
Date: Fri, 05 Jul 2002 05:26:32 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Thanks - One and All
Message-ID: In-Reply-To: <3.0.3.32.20020704222126.0173a150@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2652
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555" X-Originating-IP: 161.142.105.252
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18960
At 10:21 PM 7/4/02 +0800, JayBee wrote:
> சிலர் அந்த விழாவைப் பற்றி எழுதச்சொல்லியிருக்கிறார்கள்.
>சற்று வித்தியாசமாகக் கொண்டாடப்பட்ட விழா. ஆகவேதான்
>அப்படிக்கேட்கிறார்கள். சுருக்கமாகச் சொல்கிறேன்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
அறுபதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதன் அடிப்படைகளில்
முக்கியமானதொன்று கிரகங்களில் நிலையைப் பற்றியது.
கிரகங்கள் ராசி வட்டத்தை ஒருமுறைச் சுற்றிவரும் கால
அளவை நாம் பார்ப்போம்:
சூரியன் = 1 ஆண்டு
சுக்கிரன், புதன் ஆகிய இரண்டுமே சூரியனுக்கு முன்னாடியும் பின்னாடியுமாக
முன்னாடியும் பின்னாடியும் போய்க்கொண்டும் வந்துகொண்டும்
இருப்பதால் அவற்றுக்குரிய கால அளவாக ஓராண்டே எடுத்துக்
கொள்ளப்பட்டுள்ளது.
(முன்னாடியும் பின்னாடியும் = in front of and behind;
முன்னாடியும் பின்னாடியும் = before and after. ஒன்றுமில்லை.
'பஞ்சதந்திர'த்தின் தாக்கம்).
சந்திரன் = 29.5 நாட்கள்
செவ்வாய் = 2 ஆண்டுகள்
வியாழன் = 12 ஆண்டுகள்
சனி = 30 ஆண்டுகள்.
ராகுவும் கேதுவும் odd men out.
கவனமாகப் பார்த்தால் மேற்கூறிய அனைத்து கிரகங்களின்
போக்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு விளங்குவது தெரியும்.
அறுபது என்னும் எண்ணிக்கை அவற்றின் 'common denominator'-ஆக
விளங்குவதையும் காணலாம்.
அறுபதுக்குள் இரண்டு முப்பது; முப்பது இரண்டு, அறுபது ஒன்று
ஆகியவை அடங்கியுள்ளன. ஆகவே அறுபதாண்டுக்காலத்திற்குள் சனி
இரு முறையும், வியாழன் ஐந்து முறையும், செவ்வாய் முப்பது தடவையும்,
மற்றவை அறுபது முறையும் வலம் வந்து விடுகின்றன.
ஒரு மனிதன் பிறக்கும்போது இருந்த கிரக அமைப்பு,
இக்கணிப்பின்படி பார்க்கும்போது அறுதாண்டுகளுக்குப் பின்னர்
மீண்டும் ஏற்படும். உள்ளபடிக்குச் சற்றேறக்குறைய இருக்கும்.
ஆகையால்தான் அறுபதாண்டு வட்டம் நமக்கும் சுமேரியர்களுக்கும்
சீனர்களுக்கும் முக்கியமானதாக இருக்கிறது.
அறுபது வயது நிறைவை மனைவியுடன் அல்லது மனைவியருடன்
சேர்த்துக் கொண்டாடுவது வழக்கம். அதனை ஒரு திருமணமாகவே
கொண்டாடுவார்கள். பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கொள்ளுப்
பேரப்பிள்ளைகளுமாக ஏற்பாடு செய்து திருமணத்தை நடத்துவார்கள்.
நம்மவர்களிடையே 'அறுபதுக்கு அறுபது' என்றும்
'அறுபதாங்கல்யாணம்' என்றும் 'சாந்திக்கல்யாணம்' என்றும் பெயரிட்டு
அழைக்கப்படுகிறது.
'அறுபதுக்கு அறுபது சாந்தி மூர்த்தம்' என்று பலர் தவறுதலாக
இதனைச் சொல்வார்கள். 'சாந்தி மூர்த்தம்' வேறு. அதெல்லாம் அறுபது
வயதில் அவ்வளவாகச் சரியாக வராது. சங்கதத்தில்(நன்றி - ஞானசம்பந்தர்;
'மானினேர்விழி மாதராய்' - திருப்பதிகம்) - சம்ஸ்கிருதத்தில் -
'ஷஷ்டியப் பூர்த்தி' என்று சொல்வார்கள்.
இவ்விழாவைச் சிறப்பாக மூன்றாண்டுகள் கொண்டாடுவது
சம்பிரதாயம். 59, 60, 61 ஆகிய அகவைகளில் கொண்டாடப்படும். ஆனால்
பொது வழக்கில் அது 60-ஆம் வயதில் மட்டுமே கொண்டாடப்படுகிறது.