From jaybee@... Fri Jul 05 01:37:10 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 5 Jul 2002 08:37:10 -0000
Received: (qmail 90411 invoked from network); 5 Jul 2002 08:37:09 -0000
Received: from unknown (66.218.66.217) by m3.grp.scd.yahoo.com with QMQP; 5 Jul 2002 08:37:09 -0000
Received: from unknown (HELO n8.grp.scd.yahoo.com) (66.218.66.92) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 5 Jul 2002 08:37:09 -0000
Received: from [66.218.67.154] by n8.grp.scd.yahoo.com with NNFMP; 05 Jul 2002 08:37:09 -0000
Date: Fri, 05 Jul 2002 08:37:07 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Thanks - One and All
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3235
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555" X-Originating-IP: 161.142.105.111
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18963
--- In agathiyar@y..., "jaybee555" wrote:
> இவ்விழாவைச் சிறப்பாக மூன்றாண்டுகள் கொண்டாடுவது
>சம்பிரதாயம். 59, 60, 61
ஆகிய அகவைகளில் கொண்டாடப்படும். ஆனால்
>பொது வழக்கில் அது 60-ஆம் வயதில் மட்டுமே
கொண்டாடப்படுகிறது.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
நம்மவர்களின் வழக்கம் என்னவென்றால்
பிறப்புக்கு
நட்சத்திரத்தையும் இறப்புக்கு திதியையும் வைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
'வயது' என்பதை 'நட்சத்திரம்' என்று குறிப்பிட்டிருப்பதற்கு
ஓர் எடுத்துக்காட்டையும் தருகிறேன்.
1100 ஆண்டுகள் பின்னாடிப் போங்கள். சோழப் போரசு.
இரண்டாம் ராஜராஜ சோழர் சிறப்புமிக்க முறையில் ஆட்சி
புரிந்துவிட்டு இறந்துவிட்டார். அவருடைய இரண்டு பிள்ளைகள்
பட்டத்துக்குரியவர்கள் ஆனால் வயதோ ஒன்றும் இரண்டும்
ஆனவர்கள். ஆகவே திருச்சிறம்பலமுடையான் பெருமான்
நம்பிப் பல்லவராயன் என்னும் அமைச்சர், அந்த இரு குழந்தைகளையும்
'ஆயிரத்தளி' என்னும் அரண்மனையிலிருந்து கூட்டிவந்து ராஜராஜசோழர்
விரிவாக்கம் செய்வித்திருந்த 'ராசராசபுரம்' என்னும் இடத்தில்
பாதுகாப்பாக வைத்துவிட்டு, ராஜராஜசோழரின் விருப்பப்படி
ராஜராசோழரின் மூதாதையாகிய விக்கிரம சோழரின் பேரரான
நெறியுடைப் பெருமாளின் மகனாகிய எதிரிலிப்பெருமாளைக்
கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து அழைத்துவந்து அவனுடைய
நான்காம் வயதில் ராஜாதிராஜன் என்னும் அபிஷேகப்பெயர் தந்து
முடிசூட்டுவித்தார்.
அந்தக் கல்வெட்டு இதனை எப்படிச் சொல்கிறது என்று பார்ப்போம்:
'பெரிய தேவர் துஞ்சியருளிப் பிள்ளைகளுக்கு ஒன்றும்
இரண்டும் திருநட்சத்திரமாகையால் ஆயிரத்தளிப் படைவீடும்
விட்டுப்போத வேண்டிப், போதுகிற இடத்துத் திருவந்தப்புரமும்
பரிவாரங்களும் உள்ளிட்டன எல்லாம் பரிகரித்துக்கூட்டிக்கொடு
போந்து, ராஜராஜபுரத்திலே இருந்த இடத்துக்குச் சூழந்த
இடன்......யாறு மிகுதிப்....ரத்து உடன்கூட்டத்தா...ராலும் எல்லாக்
கலக்க.... சோழராஜ்யத்துக்குள்ளேயே யிருப்பார்
காரணவருட......வேண்டிப்புறத்து எல்லா அடைவுகேடுகளும் வராத
இடத்து இந்நல்களும் பரிகரித்து இப்...பெரியதேவர் எழுந்தருளிய
நாளிலே திரு அபிஷேகத்துக்கு உரிய பிள்ளைகள்
இன்றியே...ருக்கிறபடியைப் பார்த்து முன்னாளிலே காரியம்
இருந்தபடி விண்ணப்பஞ்செய்து கங்கைகொண்ட சோழபுரத்திலே
எழுந்தருளியிருக்கிற பிள்ளைகளை பிரயாணம் பண்ணுவித்து
உடையார் விக்கிரம சோழ தேவர் பேரனார் நெறியுடைப் பெருமாள்
திருமகனார் எதிரிலிப் பெருமாளைப் பெரியதேவர் துஞ்சியருளின
நாளிலே மண்டை கவிப்பித்துப் போந்தாரானவாறே, இவரைத்
திரு அபிஷேகம் பண்ணுவிக்கக் கடவராக நிச்செயித்து
நாலாந் திருநட்சத்திரத்திலே ராஜாதி ராஜ தேவர் என்று
திரு அபிஷேகம் பண்ணுவித்து உடன்கூட்டமும் நாடுமொன்றுபட்டுச்
செல்லும்படி பண்ணுவித்தருளினார்.....'
சோழர் வரலாற்றின் மிகவும் தடுமாற்றமாக இருந்த
காலகட்டங்களில் இதுவும் ஒன்று. அதனை ராஜராஜ சோழர்
விரும்பியபடியும் மற்றவர்கள் உடன் ஒத்துப்போகுமாறும்
பல்லவராயர் செயல்பட்டுச் சோழப்போரரசை இன்னும் சில
காலம் நிலைக்குமறு செய்தார்.
இக்கல்வெட்டில் நாம் கவனிக்கவேண்டியது -
'பிள்ளைகளுக்கு ஒன்றும் இரண்டும் திருந்ட்சத்திரமாகையால்';
'நாலாந் திருநட்சத்திரத்திலே ராஜாதி ராஜ தேவர் என்று
திரு அபிஷேகம் பண்ணுவித்து'.
பிறந்தநாளைப் பிறந்த நட்சத்திரத்தின் நாளன்றுதான்
கொண்டாடுவார்கள். முதலாம் ராஜராஜ சோழரின் பிறந்த நாள்
'ஐப்பசி சதயம்'. முதலாம் ராஜேந்திர சோழரின் பிறந்த நாள்
'மார்கழித் திருவாதிரை'.