From jaybee@... Fri Jul 05 03:07:14 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 5 Jul 2002 10:07:13 -0000
Received: (qmail 91723 invoked from network); 5 Jul 2002 10:07:13 -0000
Received: from unknown (66.218.66.216) by m14.grp.scd.yahoo.com with QMQP; 5 Jul 2002 10:07:13 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 5 Jul 2002 10:07:13 -0000
Received: from user (sp-103-150.tm.net.my [210.186.103.150]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GYR00KO5TFY3U@...> for agathiyar@yahoogroups.com; Fri, 05 Jul 2002 18:07:12 +0800 (SGT)
Date: Fri, 05 Jul 2002 18:06:42 +0800
Subject: 60-kku 60 -#3-Re: [agathiyar] Re: Thanks - One and All
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020705180642.0181d5f4@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18964
At 08:37 AM 7/5/02 +0000, JayBee wrote:
சாதாரணவழக்கில் 60-க்கு 60-ஐ அறுபதாம் கல்யாணம்
என்று மலேசியாவில் சொல்கிறார்கள்.இப்படிச் சொல்வதுவும்கூட
தவறுதான். திருமலைநாயக்கர் போன்றவர்கள்தாம் 60-ஆம்
கல்யாணம் 61-ஆம் கல்யாண்ம், 62-ஆம் கல்யாணம் என்று
200-ஆம் கல்யாணம்வரையில் செய்துகொண்டவர்கள்.
'60-ஆம் வயதுக் கல்யாணம்' என்பது சரியாகஇருக்கும்.
இந்த மணவிழாவில் கையாளப்படும் சடங்குகள், பழக்க
வழக்கங்கள் முதலியவை ஒவ்வொரு சாதி, மரபு, குடியினரைப்
பொருத்து மாறிவரும்.
சைவ மரபில் உற்றவர்கள் செய்யும் மணவிழா அடிப்படையில்
'மிருத்யுஞ்ஜயன்' என்று பெயர் பெற்ற 'காலகாலன்' அல்லது
'காலகண்டன்' என்னும் சிவனுடைய வழிபாட்டைக் கொண்டதாக
விளங்கும்.
'ஆயுஷ்ஹோமம்' 'ம்ருத்யுஞ்ஜய ஹோமம்' செய்வார்கள்.
இதுவரைக்கும் இருந்ததுபோல இன்னும் ஆயிரமாவது பிறையைக்
காண்பதற்கு ஏற்ற நீடித்த ஆயுளைக் கேட்பதாக அமையும்.
பதினோரு முறை ஸ்ரீருத்ரம் சமகம் ஆகியவற்றை ஓதி
ஏகாதச ருத்ர ஹோமம் செய்விப்பார்கள்.
இப்போதெல்லாம் திருக்கடவூருக்குச் சென்று, அங்கு
ஆயுஷ்ஹோமம் முதலியவை செய்து 60-க்கு 60-ஐச் செய்து
கொள்கிறார்கள். அங்கு இது package-ஆகச் செய்யப்படுவதாகச்
சொல்கிறார்கள். கோதானத்துக்குக் கன்றுடன் பசு, அந்த
தானத்தைப் பெறுவதற்கு உரிய பிராமணர் போன்றதுகளெல்லாமே
package-ஆகக் கிடைப்பதாகச் சமீபத்தில் அங்குச் சென்று
திரும்பிய ஒருவர் சொன்னார்.
அடிப்படைதான் நமக்குத் தெரியுமே.
ஆகவே சைவமரபு வழுவாமல் எங்கள் குடும்பமரபுப்படியும்
60-க்கு 60-ஐச் செய்துகொள்வதாகத் தீர்மானித்தோம்.
முதல் கேள்வியே "அறுபது குடம் தண்ணீர் அபிஷேகம்
செய்கிறீர்களா?" என்பதுதான். "இல்லை, தாங்காது" என்று
சொல்லிவிட்டேன். யாரும் வற்புறுத்தவில்லை.
தாலி, கோடிப் பட்டுடைகள், பெரிய மாலை, சிறிய மாலை
ஆகியவைதாம் அடிப்படையான பொருள்கள். வீட்டிற்கு முன்னர்
பந்தல். நெய்ச்சாதம், மரக்கறிகள் -அப்பளம் வடை பாயசத்துடன்.
என்னுடைய நட்சத்திரத்தில் செய்ய இயலவில்லை. ஆகவே
ஆங்கிலத்தேதிப்படி செய்துகொண்டோம். அந்த இடத்தில் ஒரு
சிறிய வித்தியாசம்.
ஹோமம் செய்யவில்லை. புரோகிதர் இல்லை. அதற்குப்
பதில் ஓதுவாமூர்த்திகள் வந்தார். அவர்தாம் அங்கு ஆச்சாரியார்.
நல்ல ஓரை, நல்ல லக்கனம் ஆகியவற்றை என்னுடைய
தமையன்மார் இருவரும் பார்த்து வைத்துக் கொடுத்திருந்தனர்.
பெரிசாக ஊர் உலகத்தைக் கூட்டிச் செய்யவில்லை.
ஏனெனில் அப்படிச் செய்வதாக இருந்தால்அமைச்சர்கள் உட்பட
அரசமரபினர்/சுல்த்தானியர், உயர் அதிகாரிகள் உட்பட ஐயாயிரம்
பேருக்காவது சொல்லவேண்டும். இரண்டாயிரம் பேராவது வரவும்
செய்வார்கள். ஆனால் அதற்கெல்லாம் உடல்நிலை யாருக்கும்
இடம் கொடுக்கவில்லை. ஆகவே நெருங்கிய உறவினர்,
நெருங்கிய நண்பர்கள், அடிக்கடி வீட்டுக்கு வந்து போகிறவர்கள்,
எந்தக் காரியத்திலும் எப்போதும் உதவி செய்பவர்கள்,
மாணாக்கர்கள் ஆகியோரை மட்டுமே அழைத்துக்கொண்டோம்.