From jaybee@... Fri Jul 05 03:14:57 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 5 Jul 2002 10:14:56 -0000
Received: (qmail 99327 invoked from network); 5 Jul 2002 10:14:56 -0000
Received: from unknown (66.218.66.217) by m3.grp.scd.yahoo.com with QMQP; 5 Jul 2002 10:14:56 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 5 Jul 2002 10:14:56 -0000
Received: from user (sp-103-150.tm.net.my [210.186.103.150]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GYR00KD4TST9A@...> for agathiyar@yahoogroups.com; Fri, 05 Jul 2002 18:14:55 +0800 (SGT)
Date: Fri, 05 Jul 2002 18:14:25 +0800
Subject: Re: 60-kku 60 -#4-Re: [agathiyar] Re: Thanks - One and All
In-reply-to: <3.0.3.32.20020705180642.0181d5f4@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020705181425.00696264@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References:
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18965

At 06:06 PM 7/5/02 +0800, JayBee wrote:
நல்லோரைக்கு முன்பாக நான் செய்யவேண்டிய
பூஜையையும் சிறப்புப்பூஜையையும் செய்துவிட்டு, கோடியுடைகளை
உடுத்துக்கொண்டு நானும் மனைவியாரும் மனையில் அமர்ந்தோம்.
நான் ஒரு காலத்தில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடித்த
'அருவியூர்' என்னும் ஊரில் வசித்தவர்களின் மரபினராகிய அருவியூர்
நகரத்தார், இரண்டாண்டுகளுக்கு முன்னர் எனக்குப் பிரான்மலையில்
நடத்திய பாராட்டுவிழாவின்போது வெள்ளிக் கேடயம் ஒன்றை
வழங்கினார்கள். அதில் பிரான்மலை மங்கைபாகர்-பாகம்பிரியாள்
திருவுருவம் வெள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும். அதனை ஹாலில்
ஒரு சிறப்பிடத்தில் வைத்திருக்கிறோம். அந்த சிவசக்தியின்
திருவுருவின் முன்பாக சிவசக்தி சன்னிதியில்தான் மணமனை
அமைந்திருந்தது. அவர்களின் சாட்சியாகத்தான் அந்தத் திருமணம்
நிகழ்ந்தது.
நிறைகுடம் வைத்துவிட்டு விநாயகப்பூஜையை
ஓதுவாமூர்த்திகள் செய்தார். அடுத்து என்னுடைய இன்னொரு
மாணாக்கராகிய அலோர்ஸ்டார் கிருஷ்ணையா, ஸ்ரீஸூக்தம்
முதலியவற்றுடன் லட்சுமி பூஜையைச் செய்தார். அதனைத்
தொடர்ந்து அருகில் உள்ள கூலிம்நகரில்அமைந்துள்ள
தியான மன்றத்தின் தலைவர் சுவாமி பிரம்மானந்தாவின் சீடர்களில்
ஒருவர் ஸ்ரீருத்ரம் சமகம் ஆகியவற்றை ஓதினார். த்ரயம்பக மந்திரம்
முழங்கியது. சுவாமி பிரம்மானந்தாவுக்கு ஒரு source of inspiration
and guidance-ஆக நான் இருந்திருக்கிறேன்.
பின்னர், 'கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி' என்றவாறு
அப்பர் சுவாமிகளின் 'போற்றித் திருத்தாண்டகம்' ஓதுவாராலும்
அவருடைய சீடர்களாலும் சொல்லப்பட்டது.
அவரும் அவருடைய சீடரகளும் choir மரபில் மிக அழகாக
'மண்ணில் வண்ண வண்ணம் வாழலாம்' என்னும் சீர்காழித்
திருப்பதிகத்தை ஓதலாயினர். என்னுடைய திருமணத்தின்போது
இதே பாடல்தான் ஓதப்பட்டது. என் மகனுடைய திருமணத்தின்போதும்
இதே பாடல்தான். இதுதான் எங்களின் திருமண மகா மந்திரம்.
அந்தத் திருப்பதிகம் பாடப்பட்டுக்கொண்டிருக்கும்போதே
திருமாங்கல்யம் அனைவரின் வாழ்த்துக்காக வலம் வரச்செய்யப்பட்டது.
தொடர்ந்து திருப்பூட்டு நடைபெற்றது. அனவரும் அட்சதையைத்
தூவி வாழ்த்தினர்.
அதன் பின்னர் பூஜைகள் நிறைவு செய்யப்பட்டன.
எங்களைவிட மூத்தவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றோம்.
அதன்பின்னர் மற்றவர்கள் எங்களை வணங்கி ஆசி பெற்றனர்.
அதனை ஆரம்பிக்கும்போதுதான் இங்கிலாந்திலிருந்து இராமுருகன்
டெலிபோன் செய்தார்.
அதனைத் தொடர்ந்து விருந்து.
மதியம் group photo.
அடுத்தநாள் தியேட்டரில் பாப்கார்ன், கொக்காக்கோலாவுடன்
'பஞ்சதந்திரம்'.

அன்புடன்
ஜெயபாரதி

==========================