From sakthia@... Sat Jul 06 05:10:00 2002
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 6 Jul 2002 12:09:57 -0000
Received: (qmail 20441 invoked from network); 6 Jul 2002 12:09:57 -0000
Received: from unknown (66.218.66.216) by m9.grp.scd.yahoo.com with QMQP; 6 Jul 2002 12:09:57 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.145.21) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 6 Jul 2002 12:09:58 -0000
Received: from smtp3.eth.net ([202.9.178.26]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Sat, 6 Jul 2002 17:46:09 +0530
Received: from 202.9.180.127 by smtp3.eth.net (InterScan E-Mail VirusWall NT); Sat, 06 Jul 2002 17:41:07 +0530
Message-ID: <003401c224e1$bdb51d00$b4b409ca@sakthia>
To: ,
Cc: "pas" , "ananth" , "ramasamis" , "Hari Krishnan" , "V.V.Subramanian"
Subject: Can Yu all enjoy this --serious POEM?--pl.Tell me immly!!
Date: Sat, 6 Jul 2002 17:09:05 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 06 Jul 2002 12:16:09.0968 (UTC) FILETIME=[E9943F00:01C224E6]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 18978

என் கிராமத்துக்-குடிசைப்பேத்தி!
***********(கவியோகி வேதம்)
அழுக்கில் குளித்து,இiருட்டு நிறத்தில்
..அம்மணமாய் ஓடுகிறாள்!-என்"பேத்தி"
அழுவேனா என்ன?கிராமிய மணத்தில்
..அதிலும்-ஓர் சுகம்தான்!நாடுகிறேன்!

பன்றிகள் புரண்ட சேற்றை எறிந்து
..பயல்கள் அவள்மேல் வீசிடினும்,
கன்றுக் குட்டிபோல் தப்பிச் செல்லு(ம்)அக்
..கனலின் துள்ளலை ரசிக்கின்றேன்!

குடிசைக் குள்ளே நோயில் முனகிக்
..குலைந்து கிடக்கிறாள் அவள்பாட்டி!
தடியை ஊன்றிநான், நாட்களை எண்ணி,
..தவசிபோல் 'விரக்தியில்' கழித்தாலும்,

கருகிய மரங்களின் உச்சிக் கொம்பிலும்
..காதல்செய்க் கிளிகளின் மயக்கம்போல்,
உருகுகின் றேன்நான்என் பேத்தியின் கொஞ்சலில்!
..உயிரைத் தேக்குவேன் 'வற்றல்'உடம்பினில்!

பாலை நிலத்திலும் ஒற்றை ஒட்டகம்
..பசும்முள் தின்றுநாள் ஓட்டலையா?
வாலைக் குமரியாய் பேத்தியின் திருமணம்
..வரும்வரை 'எமனையே"எதிர்த்து நிற்பேன்!
@@@@@@@@@@@@@@@@(கவியோகி வேதம்)-