From malarselvan@... Mon Jul 08 18:56:52 2002
Return-Path: X-Sender: malarselvan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 9 Jul 2002 01:56:52 -0000
Received: (qmail 61235 invoked from network); 9 Jul 2002 01:56:52 -0000
Received: from unknown (66.218.66.217) by m15.grp.scd.yahoo.com with QMQP; 9 Jul 2002 01:56:52 -0000
Received: from unknown (HELO hotmail.com) (216.33.236.81) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 9 Jul 2002 01:56:52 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Mon, 8 Jul 2002 18:56:52 -0700
To: References: <20020708191921.4C6447028@...>
Subject: Re: [agathiyar] Kannaki Statue
Date: Mon, 8 Jul 2002 21:59:15 -0400
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
Message-ID: X-OriginalArrivalTime: 09 Jul 2002 01:56:52.0526 (UTC) FILETIME=[E541CCE0:01C226EB]
From: "Bharathi" X-Originating-IP: [67.201.206.29]
X-Yahoo-Group-Post: member; u=42646343
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 18993
அன்பர் இளங்கோவன்,
வணக்கம். பொம்மைகள் தயாரானாதும் , அப்படியே 30-40 எனக்காக எடுத்து வையுங்கள்(எவ்வளவு விலை? ). அக்டோபரில் சென்னை வரும்போது வாங்கிக் கொள்கிறேன்.
நன்றி. தங்கள் பணி தொடரட்டும்.
கரு.மலர்ச் செல்வன்
----- Original Message -----
From: Elangovan N
To: tamil-ulagam@yahoogroups.com ; agathiyar@yahoogroups.com
Sent: Monday, July 08, 2002 3:19 PM
Subject: [agathiyar] Kannaki Statue
அன்பின் நண்பர்களே,
முந்தா நாள் சில தமிழ் இலக்கிய நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்படியே இணையம், பாரதிதாசன் என்றுபேசி இறுதியில் கண்ணகியிடம்
போய் பேச்சு நின்ற போது, மனதிலே பொறி தட்டினாற் போல வந்த யோசனையைச்
சொன்னேன்.
வென்வேலான் குன்றிற்கு எம்மால் தினம் வரவியலாதே?
கடற்கரைக்கு நீ ஒருவேளை திரும்பினாலும் எம்மால் தினம் வரவியலுமா?
வந்துவிடு;
எம்மோடு எம் இல்லம் தோறும்!
எம் பிள்ளைகளின் சொப்பு விளையாட்டில் நீயும் ஒரு சொப்பாக!
எம் சீருந்துகளில் எம் அருகே எப்போதும் சிலையாக!
எம் இருசக்கர வாகனங்களின் மட்காப்பின் முகப்பிலே சிலையாக அழகாக!
எம் பரிசுப் பொருள்களில் முதன்மைப் பொருளாக!
எம் இல்லுறை தெய்வங்களில் நீயும் ஒன்றாக!
தமிழகக் கடைகளில் அழகுப் பொருளாக, விளையாட்டுப் பொருளாக,
வணங்கும் பொருளாக எத்தனையோ உள்ளன.
அமெரிக்க சுதந்திர தேவி சிலை, மர்லின் மன்றோவின் சிலை,
ஆங்கிலேயப் பிரபுக்களின் சிலை, பெருமாள் சிலை, முருகன் சிலை,
பிள்ளையார் சிலை, ஏசுநாதர் சிலை என்று எத்தனையோ சிலைகள், மரத்தாலும்,
தந்தத்தாலும் செய்யப்பட்டு குவிந்து கிடக்கின்றன; சென்னைக் குறளகத்திலும்தான்.
மக்கள் அள்ளிப் போகின்றனர். (வள்ளுவர் சிலையோ, இன்னபிற தமிழ்ச் சிலைகளோ
கிடைக்காது)
சாதாரண மக்களும் வாங்குமாறு, மிக எளிய விலையில் கண்ணகி சிலையை
செய்து, அவர்களின் வாகனங்களில் ஒட்டிக் கொள்ளுமாறு, அல்லது பரிசுப் பொருட்களாக கொடுக்க உதவுமாறு,
சிறிய அளவில் செய்து கொடுத்தால் என்ன? என்று அவர்களைக் கேட்க, அவர்களும் அக்கருத்தை விரும்பி ஒப்புக்
கொண்டனர்.
உடன் எப்படி செய்வது என்ற யோசிக்கையில், நெகிழிப் பொருள்கள் (plastic)
செய்யும் சிறு தொழில் முனைவோர் ஒருவரை சந்தித்துக் கேட்டேன்.
அவர் ஆகா..அதற்கென்ன செய்யலாம். நெகிழியில் செய்தால்
உரூ 10 அல்லது 20 விலைக்குள் விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியும்
என்று சொல்ல, யோசனை பற்றிக் கொண்டது.
செய்பவரும், அதற்கு உறுதுணையாக இருப்பவரும் (அன்பு.தென்னரசு)
தமிழ்ப் பணிக் களங்களில் முகப்பில் இருப்பவர்கள் ஆதலால்,
கண்ணகிப் படிமம் செய்து எதிர்வரும் 20,21 ஆம் நாட்களில்
சென்னையில் நடக்க இருக்கும் 'உலகத் தமிழர் பேரமைப்பு' துவக்க
விழாவிலேயே அறிமுகம் செய்து விடலாம் என்று சொல்ல ஒரே மகிழ்ச்சி.
மிகச் சிறிய அளவில் கைத்தொழில் செய்வோர் ஆகையால்
'வார்ப்பச்சு' (Mould) செய்து கொடுத்து விடுங்கள்; மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று
சொன்னார்கள். அதற்கு உரூவா 5000 முதல் 10000
வரை ஆகக் கூடும்; எனினும் 5000 கொடுத்தால், மீதி தேவைப்பட்டால்
நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று அவர்கள் சொல்ல
நான் உடனடியாக, உதவியல்ல, கருத்தின் காரணகர்த்தாவாகையால்
கடமையாகச் செய்கிறேன் என்று இன்று உறுதியளித்து
செயலைத் துவங்கி வைத்து விட்டேன்.
அதன்படி, பொன் வண்ணத்தில், இரண்டு அங்குல உயர பீடத்தில், அய்ந்து அங்குல
உயரத்தில் கண்ணகி படிமத்தை, நெகிழியில் (plastic) செய்ய ஏற்பாடுகள் ஆரம்பித்து விட்டன.
இவற்றைச் செய்ய முன் வந்திருக்கும் சிறு(மிகச் சிறு) தொழில் முனையும் நண்பர்
தமிழ்ப் பற்றாளர் மட்டுமல்ல; களப்பணியாளரும் கூட. பல தமிழ்ப் போராட்டங்களிலே
கலந்து கொண்டு சிறை சென்றவர். அவருக்கு, இதைச் செய்து விற்று வருவாய் தேடிக்
கொள்ளவும் வாய்ப்பாக இருக்கட்டும் என்றும் கருதினேன். நான் கொடுத்த ஊக்கம்,
அவர்களின் வணிக உத்திகள் பலவற்றைத் தூண்டி விட, அரசியல் கூட்டங்கள்
முதல், பல்பொருள் கடைகள் வரை அதை விற்க முடிவெடுத்துள்ளனர்.
நமக்கென்ன! ஒராயிரம் படிமங்கள் உருவாகி, அவை சாலைகளை அடைத்துக் கொண்டன என்று யாரும் சொல்லாமல்
அய்ந்தங்குல உயரத்தில், ஆயிரம் இல்லங்களைச் சென்றடையுமானால் அதுவே யாம் வேண்டுவது! அதுவே எமக்கு
மன நிறைவாம்!
அத்தோடு, அப்படிமத்தின் பீடத்தில் 'பாரதிதாசன் வைய விரி அவை' என்று
பொரிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறேன். பாரதிதாசன் அவையின் மற்றுமொரு பணியாக இது இருக்கட்டும்.
வரும் 20, 21 தேதிகளில் நடக்க இருக்கும் அம்மாநாட்டில் வெளியிட்டு விடுவதாக
அந்த நண்பர்கள் சொன்னதால், ஆர்வத்தில், யாரிடமும் கலக்காமல் முடிவெடுத்து விட்டேன். நோக்கத்தில்
பழுதோ, அல்லது நல்ல யோசனைகளோ இருப்பின்
அன்பு கூர்ந்து எழுதவும்.
அரசியல் தலைவர்களின் சிலைகளைப் பார்த்து அலுப்புத் தட்டிய உள்ளங்களுக்கு இதுவும் அலுப்புத் தட்டக் கூடும்;
இச்சிலைகள் யாரையும் இன்னல் படுத்தாது; சட்டைப்பையிலும், பூசையறையிலும், பிள்ளைகளின் விளையாட்டு
சாமான்களோடும், மொத்தத்தில் இல்லத்தோடு இல்லமாய்ச் சேர்ந்துவிடும்;
ஆகையினால் என் எண்ணம் உணர்வீர் என்றுநம்புகிறேன்.
மலைமுகப்பிலும், கடற்கரையிலும் நின்றவள் இனி இல்லம் செல்லட்டும்.
அடிப்படையில், ஒரு சிலையைக் காணவில்லை என்று பேசிக் கொண்டிருப்பதைவிட,
நமக்கு உறவும் உணர்வும் இருக்கையிலே, நம் சொந்தக்காரியை, அந்த புரட்சிக்காரியை நாம் அரவணைத்துக்
கொள்தல் சரியன்றோ?