From angiah@... Tue Jul 16 07:31:43 2002
Return-Path: X-Sender: angiah@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 16 Jul 2002 14:31:43 -0000
Received: (qmail 38346 invoked from network); 16 Jul 2002 14:31:42 -0000
Received: from unknown (66.218.66.216) by m3.grp.scd.yahoo.com with QMQP; 16 Jul 2002 14:31:42 -0000
Received: from unknown (HELO n12.grp.scd.yahoo.com) (66.218.66.67) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 16 Jul 2002 14:31:42 -0000
Received: from [66.218.67.145] by n12.grp.scd.yahoo.com with NNFMP; 16 Jul 2002 14:31:42 -0000
Date: Tue, 16 Jul 2002 14:31:41 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: kuzhai
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 13270
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "angiah" X-Originating-IP: 210.186.103.218
X-Yahoo-Group-Post: member; u=1292776
X-Yahoo-Profile: angiah
X-Yahoo-Message-Num: 19108
At 12:17 PM 7/14/02 +0800, you wrote:
ஐயன்மீர்,
வணக்கம்.
திருக்குறளில் குழை ............
"Listing of Kural couplets matching the substring = குழை
90,
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திந்து
நோக்கக் குழையும் விருந்து.
******************Anicham smelt withers: like that
A wry-faced look withers the guest.
1081,
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
******************Is it an angel? A fair peacock
Or jewelled belle? To my mind a shock!
"
திருமந்திரத்தில் வரும் குழை....
"Listing of Thirumanthirams matching the substring = குழை
50,
கவரி வீசிய காவலன்!
பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.
திணை:பாடாண். துறை: இயன் மொழி.
குறிப்பு: அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் தண்டம் செய்யாது துயில் எழுந் துணையும் கவரிகொண்டு வீசினன்
சேரமான்; அது குறித்துப் புலவர் பாடிய செய்யுள் இது.
*******************
மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்,
பொலங்குழை உழிஞையொடு, பொலியச் சூட்டிக்,
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நற் றமிழ்முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித், தண்ணென
வீசி யோயே; வியலிடம் கமழ,
இவன்இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்:
வலம்படு குருசில்! நீ ஈங்குஇது செயலே?
73,
உயிரும் தருகுவன்!
பாடியவர்:சோழன் நலங்கிள்ளி; 'நல்லுருத்திரன் பாட்டு' எனவும் பாடம்.
திணை: காஞ்சி துறை: வஞ்சினக் காஞ்சி
*******************
மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி,
ஈயென இரக்குவர் ஆயின், சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என்
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல,
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழைதின் யானைக் கால் அகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச், சென்று அவண்
வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!
>At 12:05 PM 7/13/02 +0000, you wrote:
>>
>>
>>குழை = தழை, என்று சங்க இலக்கியங்களில் வருகிறது.
>>மகரக் குழை ஆண்களுக்கும் உண்டு. நெல்லை மாவட்டத்தில்
>>ஒரு ஊரில் பெருமாளுக்கு மகரநெடுங்குழைக்காதர் என்று பெயர்.
>>மகரநெடுங்குழைக் காதர் பிள்ளைத்தமிழ் அண்மையில் அச்சாகியுள்ளது.
>>ஸ்ரீவைஷ்ணவரில் மகரபூஷணம் என்றபெயர் இந்தப் பெருமாள் திருநாமம்.
>>
>>அன்புடன்,
>>நா. கணேசன்
>
>
> எனக்கும் அந்த மகரக்குழைக்காதர் விஷயம் நினவில்
>இருக்கிறது. ஒருவேளை அவரும் ஒரு விதிவிலக்காக அவருடைய
>மச்சானைப் போன்று குழையணிந்துள்ளார் போலும். அல்லது மகரக்குழை
>போன்ற stylised குழைகள் ஆண்*களும்* அணியும் அணியாகவும்
>இருக்கலாம்.
>
> குழை என்பது பெரும்பாலும் பெண்கள் அணியும் ஆபரணம்தான்.
>
>கீழேயுள்ள இரண்டு பாடல்களிலும் வாராகி அணிந்துள்ள குழையைக்
>காணலாம்:
>
>இருகுழைக் கோமளம் தாள்புட்ப ராகம் இரண்டு கண்ணும்
>குருமணி நீலம் கைக் கோமேதகம் நகம் கூர்வயிரம்
>திருநகை முத்துக் கனிவாய்ப் பவளம் சிறந்தவல்லி
>மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே
>
>தாமக்குழலும் குழையும் பொன்னோலையும் தாமரைப்பூஞ்
>சேமக் கழலும் துதிக்க வந்தேற்குச் செகமதனில்
>வாமக் கரளக் களத்தம்மை ஆதிவராகி வந்து
>தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வள் சிவசக்தியே
>
> இந்தப் பாடலில் வாராகியணிந்த தோடு பற்றி காணலாம்:
>
>பொருப்புக்கு மாறுசெய் யாழியும் தோடும் பொருப்பை வென்ற
>மருப்புக்கு நேர்செலும் கொங்கையும் மேனியும் வாழ்த்துமென(து)
>இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு, எதிர்த்தவர்க்கு
>நெருப்புக் குவாலெனக் கொல்வாய் வராகியென் நிர்க்குணியே!
>
> இது அம்பிகாபதி பாடிய கடைசிப்பாட்டு; அமராவதியை
>வர்ணித்துப் பாடியது:
>
>சற்றே சரிந்த குழலே துவள தரளவடம்
>துற்றே அசையக் குழையூசலாட துவர்கொள்ச் செவ்வாய்
>நற்றேன் ஒழுக நடனசிங்கார நடையலங்காரப்
>பொற்றேர் இருக்கத் தலையங்காரம் புறப்பட்டதே!
>
>பாடபேதம்: சில சுவடிகளில் 'சற்றே பருத்த தனமே துவள' என்று
>காணப்படுகிறது. அவரவருக்கு எதெது விருப்பமோ அதைச்
>சொல்லிக்கொள்ளலாம்தானே. அதது அவரவருக்கு.
> என்ன நாஞ்சொல்றது?
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>
>>
>>--- In agathiyar@y..., Subramanian Ganesh wrote:
>>> Dear Dr. JayBee,
>>> Thank you very much for the informative explanation
>>> on kuzai. Saw those nice pictures of our Lord at your
>>> site too.
>>> To my understanding, kuzai is kuNDalam called as
>>> thongaTTAn in the rural thamiznAdu. As you have
>>> referred in the mail (as kAdhu vaLarththal), the ear
>>> pulled down by the kuzai ball will be hanging much
>>> down than the "main land" of the ear. Lots of old
>>> ladies still wear this thongaTTAn in rural TN.
>>> But it is supposed to be an ornament of Lord shiva.
>>> That is why it will be depicted on the right ear. The
>>> left ear will have thODu - the feminine ornament. That
>>> is the reason "thODuDaiya cheviyan" - the first phrase
>>> of campandhar thirukkaDaikkAppu is hailed to indicate
>>> both ammai as well as appan.
>>>
>>> namaH shivAya
>>>
>>> love,
>>> Ganesh
>>