From jayandgl@... Tue Jul 16 10:26:59 2002
Return-Path: X-Sender: jayandgl@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 16 Jul 2002 17:26:58 -0000
Received: (qmail 4465 invoked from network); 16 Jul 2002 17:26:58 -0000
Received: from unknown (66.218.66.218) by m14.grp.scd.yahoo.com with QMQP; 16 Jul 2002 17:26:58 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.145.21) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 16 Jul 2002 17:26:57 -0000
Received: from smtp2.eth.net ([202.9.178.23]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Tue, 16 Jul 2002 23:03:10 +0530
Received: from 202.9.169.79 by smtp2.eth.net (InterScan E-Mail VirusWall NT); Tue, 16 Jul 2002 23:05:28 +0530
Message-Id: <4.3.0.20020716223952.00a69250@localhost>
X-Sender: jayandgl/pop3.eth.net@localhost
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Tue, 16 Jul 2002 22:40:20 +0530
To: agathiyar@yahoogroups.com
Subject: Awwaik kuRaL (191 - 200)
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: jayandgl@...
X-OriginalArrivalTime: 16 Jul 2002 17:33:10.0281 (UTC) FILETIME=[DAB32F90:01C22CEE]
From: Njaanavettiyaan X-Yahoo-Group-Post: member; u=118805444
X-Yahoo-Profile: njaanavettiyaan
X-Yahoo-Message-Num: 19110
ஒளவைக் குறள்
20. சதாசிவம் (191 - 200)
191. பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம்.
எட்டுத் திக்குகளும், மேல், கீழ் ஆகியவைகளும் சேர்ந்து பத்துத் திக்குகளாயின. உலகமெலாம் உள்ள தூல
சூக்குமங்களில் சிவம் வியாபித்து கலந்து நிலைத்திருக்கும்.
192. விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்.
ஆகாயத்தில் பூரணமாக நிலையாக நின்று விளங்கும் சுடரொளியாகிய ஆதவன் (ஆ+தவன்) போல்
உடலினுள்ளே சிவப்பிரகாசம் வியாபித்துள்ளது.
195. எண்ணிறந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்.
கணக்கற்ற பிறவிகளில் (யோனி) பலவாறாக, எங்கும் பரவி, உடலில் நிறைந்துநிற்கும் சிவம்.
196. ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும்
ஒன்றாகி நிற்குஞ் சிவம்.
ஆதி வித்தாகி, அதிலிருந்து கிளர்ந்தெழும் எல்லா உயிர்களின் உடலுக்குள் பரவி, ஒரே சீவனாகி
நிற்கும் சிவம்.
197. மூலமொன் றாகி முடிவொன்றா யெவ்வுயிர்க்கும்
காலமாய் நிற்குஞ் சிவம்.
எல்லா உயிருக்கும் மூலம் விந்து. விந்து வெளிவந்தால் முடிவு. மூலத்திற்கும், முடிவுக்கும், அதற்கு நடுவேயுள்ள
காலத்திற்கும் விந்துவே ஆதாரம். ஆக, எல்லா உடலிலும் விந்து சக்தியாகச் சிவம் நிலைத்துள்ளது.
198. மண்ணிற் பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி
விண்ணகமே யாகுஞ் சிவம்.
பூமியில் உண்டாயிருக்கும் சீவிகளுக்கெல்லாம், சிவம் தானே சீவனாகிச் சிதாகாயத்தில் இருக்கிறான்.
199. தோற்றமது வீடாகித் தொல்லைமுத லொன்றாகி
ஏத்தவரு மீச னுளன்.
ஆதி (தொல்லை = பழமை) வித்துவாகியவிந்து உடலோடு கலந்து உள்ளது. அதைப் பிரித்து மேலேற்ற,
அதன் தோற்றமே சிவத்தின் இருப்பிடமாகிவிடும். அதுவே
(சிதா + காயம்) சிதாகாயம்.
இக்குறளுக்கு விளக்கம் ஆயிரம் கூறலாம். ஆகவே, விரிக்காது கீழ்க்கண்ட
நூலாதாரங்களையிட்டிருக்கிறோம். அவரவர் நிலைக்குத் தக்க மெய்ப்பொருள் கண்டு தெளிக.
சிவவாக்கியம்:
"ஆதியான தொன்றுமே யனேகனேக ரூபமாய்
சாதிபேத மாயெழுந்து சர்வஜீவ மானபின்
ஆதியோடு கூடிமீண் டெழுந்தசென்ம மானபின்
சோதியான ஞானியாருஞ் சுத்தமா யிருப்பரே."