From sarabeswar@... Tue Jul 16 19:43:52 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 17 Jul 2002 02:43:52 -0000
Received: (qmail 25485 invoked from network); 17 Jul 2002 02:43:51 -0000
Received: from unknown (66.218.66.217) by m2.grp.scd.yahoo.com with QMQP; 17 Jul 2002 02:43:51 -0000
Received: from unknown (HELO n8.grp.scd.yahoo.com) (66.218.66.92) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 17 Jul 2002 02:43:51 -0000
Received: from [66.218.67.130] by n8.grp.scd.yahoo.com with NNFMP; 17 Jul 2002 02:43:51 -0000
Date: Wed, 17 Jul 2002 02:43:50 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: kAlam peRa azuthAr! ( was - Re: Awwaik kuRaL - 181 - 190)
Message-ID:
In-Reply-To: <4.3.0.20020715223441.00ac2780@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1306
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.154.23.98
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 19112
அன்புசால் ஞானவெட்டியான் அவர்களுக்கு,
மூச்சுவிடாமல் படிக்கவேண்டும் போலிருக்கிறதே.
எனக்குத் தங்களின் ஒரு மடலே ஒரு வாரத்துக்குப் படிக்க
வேண்டியிருக்கிறது;-) இ
> 187.மின்மினி போன்ற விளக்காகத் தான்தோன்றில்
> அன்னப் பறவையே யாம்.
> மின்மினிபோல் (தோன்றித் தோன்றி மறையும்) ஆத்மஒளி
> தோன்றில் சீவன் அன்னப் பறவையின் குணங்களைப் பெற்றிடும்.
உள்ளொளியாய் ஒளித்துளியாய் 'அச்சுகள்' பல மாறினும் தான்
மாறாமல் இருப்பதை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!
அன்னப்பறவை சுட்டுவதே அத்துவிதம்! அத்தகு சீவன்முக்தரைப்
பரமஹம்ஸர் என்பர்.
> 189.பரந்த விசும்பிற் பரந்த வொளிகாணல்
> பரம்பரம்மே யாய வொளி.
என்னுள் வெகுகாலமாய்ப் பதம்கிடக்குமொரு வினாவினைத்
தக்கதருணத்தில் கேட்டுவிடுகிறேன்.
ஆளுடைப்பிள்ளையார் ஞானசம்பந்தனார் தில்லையம்பலத்தில்
'கற்றாங்கெரியோம்பி' என்று பதிகம் பாடி உருகிநின்றதை
வர்ணிக்கும் சேக்கிழார்பெருமான்
சொல்வது:
"பண்ணார் பதிகத் திருக்கடைக்காப் புப்பரவி
உண்ணாடும் என்பும் உயிருங் கரைந்துருக்கும்
விண்ணா யகன்கூத்து வெட்டவெளி யேதிளைத்துக்
கண்ணா ரமுதுண்டார் காலம் பெறஅழுதார்."
காலம் பெற அழுதல்!
அடியேனால் ஊகிக்கவியலுமெனினும் அது அரைவேக்காடானது.
காலமாவது பலருக்கும் தெரியும். காலம் பெறுவது என்னவென்று
தங்களைப் போன்ற ஞானவெட்டியார்கள் சொன்னால்தான்
என்போன்ற மரமண்டைகளுக்குத் தெளியும்.
பணிவன்புடன்,
குமார்
யாவகம்