From jayandgl@... Thu Jul 18 05:00:55 2002
Return-Path:
X-Sender: jayandgl@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 18 Jul 2002 12:00:55 -0000
Received: (qmail 93744 invoked from network); 18 Jul 2002 12:00:54 -0000
Received: from unknown (66.218.66.217) by m15.grp.scd.yahoo.com with QMQP; 18 Jul 2002 12:00:54 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.145.21) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 18 Jul 2002 12:00:54 -0000
Received: from smtp3.eth.net ([202.9.178.26]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Thu, 18 Jul 2002 17:37:10 +0530
Received: from 202.9.169.100 by smtp3.eth.net (InterScan E-Mail VirusWall NT); Thu, 18 Jul 2002 17:31:02 +0530
Message-Id: <4.3.0.20020718171711.00a796a0@...>
X-Sender: jayandgl@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Thu, 18 Jul 2002 17:17:59 +0530
To: agathiyar@yahoogroups.com
Subject: kAlam peRa azuthAr! ( was - Re: Awwaik kuRaL - 181 - 190)
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: jayandgl@...
X-OriginalArrivalTime: 18 Jul 2002 12:07:10.0375 (UTC) FILETIME=[A4E9E370:01C22E53]
X-eGroups-From: Njaanavettiyaan
From: Njaanavettiyaan
X-Yahoo-Group-Post: member; u=118772836
X-Yahoo-Profile: njaanavettiyaan
X-Yahoo-Message-Num: 19128
From: "sarabeswar"
Date: Wed Jul 17, 2002 8:13 am
Subject: kAlam peRa azuthAr! ( was - Re: Awwaik kuRaL - 181 - 190)
>அன்புசால் ஞானவெட்டியான் அவர்களுக்கு,
>மூச்சுவிடாமல் படிக்கவேண்டும் போலிருக்கிறதே.
>எனக்குத் தங்களின் ஒரு மடலே ஒரு வாரத்துக்குப்
படிக்க >வேண்டியிருக்கிறது;-)
>> 187.மின்மினி போன்ற விளக்காகத் தான்தோன்றில்
>>அன்னப் பறவையே யாம்.
>>மின்மினிபோல் (தோன்றித் தோன்றி மறையும்) ஆத்மஒளி
>> தோன்றில் சீவன் அன்னப் பறவையின் குணங்களைப் பெற்றிடும்.
ஆமாம். அஃதே உண்மை.
>உள்ளொளியாய் ஒளித்துளியாய் 'அச்சுகள்' பல மாறினும் தான் >மாறாமல்
இருப்பதை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!
>அன்னப்பறவை சுட்டுவதே அத்துவிதம்!
ஆம். அன்னமே அத்துவிதம்.
>அத்தகு சீவன்முக்தரைப் பரமஹம்ஸர்என்பர்.
>> 189.பரந்த விசும்பிற் பரந்த வொளிகாணல்
>> பரம்பரம்மே யாய வொளி.
>என்னுள் வெகுகாலமாய்ப் பதம்கிடக்குமொரு வினாவினைத்
>தக்கதருணத்தில் கேட்டுவிடுகிறேன்.
>ஆளுடைப்பிள்ளையார் ஞானசம்பந்தனார் தில்லையம்பலத்தில்
>'கற்றாங்கெரியோம்பி' என்று பதிகம் பாடி உருகிநின்றதை
>வர்ணிக்கும் சேக்கிழார்பெருமான் சொல்வது:
>"பண்ணார் பதிகத் திருக்கடைக்காப் புப்பரவி
> உண்ணாடும் என்பும் உயிருங் கரைந்துருக்கும்
> விண்ணா யகன்கூத்து வெட்டவெளி யேதிளைத்துக்
> கண்ணா ரமுதுண்டார் காலம் பெறஅழுதார்."
> காலம் பெற அழுதல்!
> அடியேனால் ஊகிக்கவியலுமெனினும் அது அரைவேக்காடானது.
> காலமாவது பலருக்கும் தெரியும். காலம் பெறுவது என்னவென்று
> தங்களைப் போன்ற ஞானவெட்டியார்கள் சொன்னால்தான்
> என்போன்ற மரமண்டைகளுக்குத் தெளியும்.
> பணிவன்புடன்,
> குமார்
> யாவகம்
அளிமிகு நண்பர் திரு.குமார் அவர்கட்கு,
வணக்கம்.
வேலை மெனக்கெட்டு, திருத்தொண்டர் புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கத்தைப் பிடித்து, விளக்கவியலாத்
தத்துவத்தையெடுத்து என்னை விளக்கம் தரச் சொல்லுதல், இறைக்கட்டளையென நினைந்து, என்னாலியன்றவரை
விளக்க முயலுகிறேன்.
பக்தி மார்க்கம்:
"வேலையே அமையம் செவ்வி ஏல்வையே பொழுது பாணீ
காலை கொன் பதமே போழ்து......................."
ஆக, காலம் = பதம்
காலம்பெற அழுதல் = பதம்பெற அழல் = பதம்பெற நம்முடலை அழலாக்கல்.
யோகம் ஆரம்பம்:
அஃதெங்ஙனம் சாத்தியம். ஊண், உறக்கம் துறத்தலே வழி.
கால் எனில் காற்று. உயிற்க்காற்று = சீவன்.
கால் + அம் = காலம். காலாகிய (சீவனாகிய) சிவம் அழலாகி அழப் பதம் கிட்டும்.
சிவனின் கையிலிருக்கும் அழலே அத்தாட்சி. இது வாசியோகம்.
ஞானம்:
திருமந்திரம்:(விந்துசயம்-போகசரவோட்டம்):
"காலங் கடந்தவன் காண்விந்து செற்றவன்
காலங் கடந்தழிந் தான்விந்து செற்றவன்
காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை
காலின்கண் வந்த கலப்பற் யாரே."
உலகியலில் மனுவுக்கு விதிக்கப்பட்ட காலங்களைக் கடந்து நெடுநாள் வாழ்பவன் விந்துவையடக்கி
வென்றவனாவான். காலத்திற்குட்பட்டு மாண்டவர் விந்தால் வெல்லப்படுபவர். விந்துவே ஆதியெனில், ஆதியை
வென்றவன் காலத்தையும் சேர்த்து வெல்கிறான். காலமே காலனாகிய மறலி. மறலிகைப்படாதிருக்க என்ன?
என்ன? செய்யவேண்டும்? என ஆய்ந்தறிந்து, தெளிவுறாவிடில் நல்ல ஞானாசிரியனிடங்கேட்டுப் பின் தெளிந்து,
முயலக் கிட்டும்.
ஏதோ! எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்......
தவனமுடன்,
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)