From jaybee@... Fri Jul 19 22:29:06 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 20 Jul 2002 05:29:05 -0000
Received: (qmail 99177 invoked from network); 20 Jul 2002 05:29:05 -0000
Received: from unknown (66.218.66.217) by m1.grp.scd.yahoo.com with QMQP; 20 Jul 2002 05:29:05 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 20 Jul 2002 05:29:05 -0000
Received: from user (sp-103-20.tm.net.my [210.186.103.20]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0GZJ00B4I8KDOS@...> for agathiyar@yahoogroups.com; Sat, 20 Jul 2002 13:29:04 +0800 (SGT)
Date: Sat, 20 Jul 2002 13:28:07 +0800
Subject: kaNiniyaa kaNaniyaa?
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020720132807.0072c0b8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 19141
அன்பர்களே,
சில ஆண்டுகளுக்கு முன்னர், 'கணினியா கணனியா'
என்ற கேள்வி எழுந்தது. எழுந்த இடம் தமிழ் டாட் நெட். அப்போது
நான் எழுதிய மடல்.
இம்மடல் சென்ற ஆண்டு கோலலும்பூரில் வெளியிடப்பட்ட
'இணையத்தில் ஜேய்பி' என்னும் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது.
பின்னர், அம்மடல் சில மாதங்களுக்கு முன்னர்,
மலேசியாவிலிருந்து வெளியாகும் 'மக்கள் ஓசை' பத்திரிக்கையிலும்
இடம் பெற்றது.
இம்மடலின் மூலத்தை Tamil.net archives ஆவணத்தில்
காணலாம். தேதி 25, ஜூலை, 1997. ஐந்தாண்டுகள் ஆக இன்னும்
ஐந்தே நாட்கள்.
பழனிக்கு நிச்சயம் ஞாபகம் இருக்கும். அவரும்
'இணையத்தில் ஜேய்பி'யை வாங்கியவர்களில் ஒருவர்:-)
அம்மடலை 'இணையத்தில் ஜேய்பி'யில் கண்டவண்ணம்
பெயர்த்து முன்வைக்கிறேன்.
தமிழ் டாட் நெட்டுக்கு நன்றி.
அன்புடன்
ஜெயபாரதி
>>>>>>>>
There was a controversy as to the correct Tamil name for Computer.
JayBee puts forth the correct form as KaNini.
கணினியா, கணனியா?
To tamil@...
>From jayabarathi Date Fri, 25 Jul 1997 23:04:39 +0800
________________________________________________
This week's sponsors -The Asia Pacific Internet Company (APIC)
Premium Mind Mobility (aka Internet) Services to anybody anywhere
Click now for instant info
________________________________________________
அன்புள்ள இணையத்தோரே!
கணினியா, கணனியா?
இன்னும் இந்த சந்தேகம் ஓய்ந்தபாடில்லை.
ஏனென்று தொயவில்லை.
புதிய சொல்லைத்தோற்றுவிக்கும்போதும் சா; இதுகாறும்
அம்மொழியில் இல்லாத ஒரு பொருளுக்குய பிறமொழிச்சொல்லை
மொழி பெயர்க்கும்போதும் சா; சில அணுகுமுறைகளை அனுசாக்க
வேண்டியது முக்கியம்.
தமிழில் "கணி" என்ற சொல்லுக்கும் "கணக்கு" என்ற சொல்லுக்கும்
சற்று வேறுபாடு உண்டு.
"கணி" என்றால் "Computation" என்றுதான் பொருள்படும்.
அது எப்படி என்பதை சற்றுப் பார்ப்போமே?
பழங்காலத்தில் "கணியன்" அல்லது "கணி" என்னும் ஒரு
குறிப்பிட்ட வகைத் தொழில் புவோர் இருந்தனர்.
தொல்காப்பியத்தில், பொருளதிகாரத்தில், புறத்திணையியலில்
ஓடத்தில்
"மறுவில் செய்தி மூவகைக்காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்...." 77-78
என்று வருகிறது.
இந்நூலுக்கு உரை எழுதியவர்களில் ஒருவரான இளம்பூரணர்
இவ்வாறு கூறுகிறார்....
சுருக்கமாகக் கூறினால், "அறிவன்" அல்லது "கணியன்" என்பவர்கள்
வானநூலை நன்கு அறிந்து இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்
முதலியவற்றைக் கணித்துக்கூறுபவர்கள்.மேற்கூறிய விஷயங்களையெல்லாம்
(வில்,மின்,etc.) நோக்கி observation, சேகாத்து collection and input,
தொகுத்து compilation, ஆய்ந்து analysis, கணித்தல் computation.
இதுதான் கணியனின் வேலை.
அதாவது கணித்தல் வேலை.
"புவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப்
பாவின்றிப் பட்டாங் கறியத் - திவின்றி
விண்ணில் உலகம் விளைவிக்கும் விளைவெல்லாம்
கண்ணி உரைப்பான் கணி"
என்று வேறொரு பாடலையும் இளம்பூரணர் மேற்கோள் காட்டுகிறார்.
கணியர்கள் பலவகையான கருவிகள்கொண்டு வானவீதியில்
கிரகங்களைக் கண்டும், அவற்றின் போக்கைக் கணக்கிட்டும்
கூறியதோடல்லாமல், அன்றாடம் நடக்கும்ஆண்டு, மாதம், கிழமை,
திதி,சாமம், நாழிகை முதலியவற்றையும் கணித்துக்கூறினர்.
பஞ்சாங்கத்தையும் அவர்களே கணித்தனர்.
இதற்காகப் பல வகையான கணிதமுறைகளையும் அவர்கள்
கற்றிருந்தனர்.
சங்க காலத்தில் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" -
புகழ் கணியன் பூங்குன்றனார்,கணி மேதாவியார் என்றெல்லாம்
புலவர்கள் இருந்திருக்கின்றனர்.பின்னவர் சற்றுப் பிற்பட்டவர் -
காலத்தால். "ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது" ஆகியவற்றை
எழுதியவர். ஆகவே சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தவர்.
கணித நூலைக் கணியர்கள் கணிப்புக்குப் பயன்படுத்தினர்.
இது எட்டு அங்கங்களைக் கொண்டது.
சங்கலிதம்(கூட்டல்), விபகலிதம்(கழித்தல்), குணனம்(பெருக்கல்),
பாகாரம்(வகுத்தல்), வர்க்கம், வர்க்கமூலம், கனம்,கனமூலம் ஆகியவை அவை.
'கணக்கு' என்பது சற்று வித்தியாசமானது.இதில் நான்கு
simple functions of Arithmetic கிய கூட்டல், கழித்தல், பெருக்கல்,
வகுத்தல் ஆகியவற்றுடன் எண்ணுதலும் இடம் பெறும்.
"Accounts" என்ற பொருளிலும் "கணக்கு" என்ற சொல் பயன்படும்.
"கணக்கன்" என்ற சொல் கணக்கப்பிள்ளையாகிய Accountantஐக்
குறிக்கும்.
கணக்கிட்டு அறிவோரையும் கணக்கர் என்பர்.
Logic என்னும் தர்க்க சாஸ்திரத்தில் வல்லவரான சமயவாதிகள் -
"சமயக் கணக்கர்".
ஆகவே, "கணித்தல்" என்பதுதான் "Computation" என்பதனை
நேரடியாகக் குறிப்பிடும் சொல்.
தற்சமயம்,"ஜாதகம் கணித்தல்" என்பதனை "Computation of
Horoscope" என்றுதான் கூறுகிறோம். "பஞ்சாங்கம் கணித்தல்" என்பதை
"Computation of Ephemeris or Almanac" என்றும் கூறுகிறோம்.
ஆகவே,
Computer என்னும் கருவியைக்
"கணினி" என்பதே நேர்.
அன்புடன்
ஜெயபாரதி
>At 11:04 PM 7/25/97 +0800, ஜெபா wrote:
>
>> ஆகவே,
>> Computer என்னும் கருவியைக்
>> "கணினி" என்பதே நேர்.
>>
>> அன்புடன்
>>
>> ஜெயபாரதி
>
>ஐயா, மிக நன்றிக்குயவனாவேன் இது கிடைத்ததற்கு
(அல்லது/// உடன் உயிரை விட்டுக்>கொண்டிருந்தேன்); ஆயினும்,
சிறிது சந்தேகம் மிச்சமிருக்கிறது; கணினி இற்கும் கணிணி இற்கும்
>இடையில். அதையும் சுழி, சுற்று வாயாகச் சொல்லவேண்டும்.
"ண"கர உயிர்மெய்யின் பின்னால் இன்னொரு "ண"கர உயிர்மெய்
வருவதேயில்லை."ன"கரம் தான் பெரும்பாலும் வருகிறது.