From jaybee@... Sun Jul 21 04:58:21 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 21 Jul 2002 11:58:20 -0000
Received: (qmail 73119 invoked from network); 21 Jul 2002 11:58:20 -0000
Received: from unknown (66.218.66.216) by m11.grp.scd.yahoo.com with QMQP; 21 Jul 2002 11:58:20 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 21 Jul 2002 11:58:15 -0000
Received: from user (sp-103-240.tm.net.my [210.186.103.240]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0GZL00I9UL8ZAZ@...> for agathiyar@yahoogroups.com; Sun, 21 Jul 2002 19:58:14 +0800 (SGT)
Date: Sun, 21 Jul 2002 19:57:14 +0800
Subject: Re: [agathiyar] kaNiniyaa kaNaniyaa?
In-reply-to: <20020720073755.47836.qmail@...>
X-Sender: jaybee@... (Unverified)
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020721195714.006f2e6c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020720132807.0072c0b8@...>
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 19150


அன்புள்ள சாபு/அன்பர்களே,

At 12:37 AM 7/20/02 -0700, you wrote:
>
>அண்ணா,
>
>அவனுக்கென்ன நாக்கில் சாட்சாத் ஸரஸ்வதி குடியிருக்கிறாள் என்பார்கள்.
>உங்களுக்கு ஸரஸ்வதி உடம்பெங்கும் வியாபித்திருக்கிறாள். ஜமாய்யுங்கள்


நன்றி, சாபு.
நீங்களும் அருளாளர் தொடர்பு உள்ளவர்தாம். அந்த
இணையற்ற அருளாளன் உங்களுக்கும் 'சாரஸ்வத்யம்', 'வித்வத்'
என்று சொல்லப்படும் பரகத்தை அருளியிருக்கிறான்.
நீங்கள் கொடுத்த உற்சாகத்தில் இன்னொரு சொல் பற்றி
தமிழ் டாட் நெட்டில் எழுந்த கேள்விகள் சம்பந்தமாக நான்
எழுதியிருந்ததை முற்படுத்துகிறேன். இதுவும் பழசு.

பல விஷயங்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன்.
ஆனால் என்ன செய்ய?
சில முஸீஃபத்துக்கள் இருட்டடிப்பு உட்பட கீழறுப்பு வேலைகள்
பலவற்றைச் செய்கின்றனவே!

கீழேயுள்ள மடலாடல், Diaspora, புலம்பெயர்தல், புடைபெயர்தல்
என்னும் சொற்கள் சம்பந்தமாக நிகழ்ந்தவை.
இவற்றின் மூலமடல்களை தமிழ் டாட் நெட் ஆவணத்தில்
காணலாம்.
தமிழ் டாட் நெட்டுக்கு நன்றி.


>
>கல்வியா? செல்வமா? வீரமா?
>
>ஸரஸ்வதி சபதம் பாட்டுதெரியும்தானே?
>
>
சரியாப்போச்சு.
நீங்க என்ன... இப்ப வந்த புதுப்பாட்டையெல்லாம் சொல்றீங்க!
'புதுப்பெண்ணீன் மனத்தைத் தொட்டுப் போறவரே...உங்க எண்ணஅஅத்தைச்
சொல்லிவிட்டுப் போங்க', 'மல்லிகைப்பூ ஜாதி ரோஜா', 'சுந்தரராங்க வதனி',
'சாரஸம் வசீகரக் கண்கள் சீர்தரும் முகம் சந்த்ரபிம்பம்', 'ஓரிடம் தனிலே....
நிலையில்லா உலகினிலே..உருண்டோடிடும் பணங்காசெனும் உருவமான
பொருளே', 'மறைவாய்ப் புதைத்த ஓடு மறைந்த மாயம் என்ன',
'சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்', 'மேயாத மானு'க்கும்
முன்னால போயி 'மகா சுகிர்த ரூப சுந்தரி' என்று கிட்டப்பாவின்
உச்சஸ்தாயிக்குப் போய் அங்கிருந்து கேளுங்கள்:-)
அன்புடன்

ஜெயபாரதி

-------------------------Forwarded---------------

>Date: Fri, 30 May 1997 02:46:17 -0500 (CDT)
>Subject: [tamil.net] Disapora
>To: tamil@...
>________________________________________________
>
>This week's sponsors -The Asia Pacific Internet Company (APIC)
>Premium Mind Mobility (aka Internet) Services to anybody anywhere
> Click now for instant info
>________________________________________________
>
>Disapora-தொலைவாழுநர் or தொலைபெயர்ந்துவாழுநர்?
>
>Tamil Disapora- தமிழ்த்தொலைவாழுநர்
>Jewish Disapora-யூதத்தொலைவாழுநர்
>

JayBee writes:

அன்புள்ள இணையத்தாரே!

இடம்பெயர்ந்து சென்று குடியேறிய மக்களுக்குப் பழந்தமிழில்
"புலம்பெயர்மாக்கள்" என்றொரு சொற்றொடர் காணப்படுகிறது. இது
சிலப்பதிகாரத்தில் வருகிறது.

"மாக்கள்" என்னும் சொல் தற்கால வழக்கிற்கு ஒத்துவராது.

"புடைப்பெயர்ச்சி" என்னும் மற்றொரு சொற்றொடரும் இருக்கிறது.
இதுவும் "Emigration"-ஐக் குறிக்கும்.

ஆகவே, தமிழகம், ஈழம் அல்லாத மற்ற நாட்டுத்தமிழரை
"புலம்பெயர்த்தமிழர்" என்றோ "புடைபெயர்த் தமிழர்" என்றோ சொல்லலாம்.

சாதாரணமாக மக்கள் புலம்பெயர்தலுக்குப் பல காரணங்கள் உண்டு.
தொழில்நுணுக்கம், பிழைப்பு, சஞ்சிக்கூலி முறை, நாடுகடத்தல்,
பூர்வீக நாட்டில் இட நெருக்கடி அல்லது அரசியல் நெருக்கடி,
நாடு பிடிக்கும் வேட்கை, Adventurism, colonisation,போன்றவை அவை.
சீனர்கள், ஆங்கிலேயர், எஸ்பானியர் முதலியோர் இப்படித்தான்
பரவினர்.

இந்த "Diaspora" என்ற சொல் சற்று வித்தியாசமானது. இது
ஒரு கிரேக்க மொழிச்சொல்.
"To scatter about" என்னும் பொருள் கொண்டது.இந்தச் சொல்
யூதமக்கள் உலகெங்கும் சிதறிப்போயினமையைக் குறிக்கத் தற்காலத்தில்
பயன்படுத்தப்படுகிறது. இது "Exile" என்னும் சொல்லினின்று வேறுபட்டது.
"டயஸ்போரா" என்பது சிதறலை மட்டும் குறிக்க மாட்டாது.
It is actually a way of life and an intellectual concept.
யூத டயஸ்போரா பல புதிய யூத கலாசாரங்களை எற்படுத்தியது.
அமொக்க யூத கலாசாரம், ஜெர்மன் யூதக் கலாசாரம், அரபு நாட்டு
யூதக்கலாசாரம், என்று பல வகையான யூதகலாசாரங்கள் உள்ளன.
ஆனால், இவற்றின்மூலமும், கருப்பொருளும் எப்போதுமே
யூதத்துவமாகத்தான் இருந்திருக்கிறது.('ஹிந்துத்துவம்' என்னும்போது
ஏன் 'யூதத்துவம்' என்று சொல்லக்கூடாது?)
ஈழத்தமிழர்கள் சமீப காலத்திலேயே உலகின் சிலநாடுகளில்
வசிக்க நேர்ந்தது. ஈழத்தில் இருக்கமுடியாதது பொன்ற சில குறிப்பிட்ட
காரணங்களால் அவர்கள் புலம் பெயர நோட்டது.
புலம் பெயர்த்தமிழர்கள் மலேசியா,சிங்கை,மாஷியஸ்,
தென்னாப்பிக்கா, முதலிய இடங்களிலேயே கணிசமான அளவில்
காணப்படுகின்றனர்.
U.A.R.,U.K., U.S.,Canada, Australia, போன்ற நாடுகளில் அ
வர்களில் பெரும்பாலோர் Expatriates ஆக வாழ்கிறார்கள். இவர்கள்
பெரும்பாலும் தத்தம் தாய்நாட்டிற்கு விரைவில் திரும்பிவிடுவார்கள்.
Distinct Cultures உருவாக ஒரு வேளை இன்னும்அதிக
காலம் பிடிக்கலாம்.
ஆகையால்தான் இந்த "Diaspora" என்னும் சொல், தமிழருக்குப்
பொருந்தும் என்று தோன்றவில்லை.

ஜெயபாரதி
>

Nandhan of New Zealand writes:
>
>Anpulla Dr.Jeya
>Your explanation is a timely one.
>Then "Tamil Diaspora" would be
>புலம் பெயர்ந்த தமிழர் அல்லது புலம் பெயர்த்த தமிழர் அல்லது
>புலம் பெயர் தமிழர்.
>
>சிலம்பில் காட்டிய மேற்கோளுக்கு ஆயிரம் நன்றிகள்.
>அது எந்தவிடத்தில் வருகிறது என அறிய ஆவல்.
>
>அன்புடன்
>நந்தன்
>நியூசிலாந்து

அன்புள்ள நந்தன்,

சிலப்பதிகாரம் இந்திர விழவூரெடுத்த காதை வா 11....

"கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்...."

இது காவிப்பூம்பட்டினத்தின் வர்ணனையில் வருகிறது.

கலம் தரு திருவின்: மரக்கலத்தால்ஈட்டப்படும் செல்வத்தின்
பொருட்டு
புலம்பெயர் மாக்கள் : தம் நாட்டை விட்டு வந்த வேற்று நாட்டு
மக்கள்
ஒருங்கே கூடி நெருங்கி வசிக்கின்ற, அலைகள் வாய்த்த கரையின்
அருகில் அமைந்துள்ள குடியிருப்புகள்..

ஜெயபாரதி

=======================================