From rrs16@... Mon Jul 22 05:07:33 2002
Return-Path:
X-Sender: rrs16@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 22 Jul 2002 12:07:33 -0000
Received: (qmail 91093 invoked from network); 22 Jul 2002 12:07:33 -0000
Received: from unknown (66.218.66.216) by m7.grp.scd.yahoo.com with QMQP; 22 Jul 2002 12:07:33 -0000
Received: from unknown (HELO WS0005.indiatimes.com) (203.199.93.15) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 22 Jul 2002 12:07:30 -0000
Received: from 192.168.57.15 (a3 [192.168.57.23]) by WS0005.indiatimes.com (8.9.3/8.9.3) with SMTP id QAA20926 for ; Mon, 22 Jul 2002 16:55:57 +0530
Message-Id: <200207221125.QAA20926@...>
To:
Subject: Re: A.P.Nagarajan - ThiruviLaiyadal
Date: Mon, 22 Jul 2002 16:51:30 +0530
X-URL: http://indiatimes.com
Content-Type: text/plain; charset=us-ascii
X-eGroups-From: "Subramanian"
From: "Subramanian"
Reply-To: rrs16@...
X-Yahoo-Group-Post: member; u=955490
X-Yahoo-Profile: rrsubram
X-Yahoo-Message-Num: 19164

அன்பர்களே,

தாமதமான பதிலுக்கு மன்னிக்க. (இண்டியாடைம்ஸ் மெயில் தளத்தில் நுழைய
பிரச்னை ஏற்பட்டுள்ளதால்)

முதலில் ஏ.பி.நாகராஜன் படப் பட்டியலை கவனித்துவிட்டு பதில்களுக்கு வருகிறேன்.

வலையில் தேடிக்கிடைத்த செய்திகளின் படி....

ஏ.பி.என் (1928-77) முதலில் 1953ல் 'நால்வர்' என்ற படத்திற்கு கதை எழுதியுள்ளார்.
பின்னர் 1958ல் 'நல்ல இடத்து சம்பந்தம்' ; மற்ற படங்கள்

- வா ராஜா வா (ஒரு சின்ன பையன் ஓவர் ஆக்டிங் பண்ணும் படமல்லவா இது ?)
- கந்தன் கருணை
- நவரத்னம் (எம்.ஜி.ஆர் - 9 ஹீரோயின்களுடன் ??)
- தில்லானா மோகனாம்பாள்

- குலமகள் ராதை (1963)
- திருவிளையாடல் (1965)
- சரஸ்வதி சபதம் (1966)
- திருமலை தென்குமரி (1970)
- கண்காட்சி (1971)
- ராஜராஜ சோழன் (1973)
- மேல் நாட்டு மருமகள் (1975)

விட்டுப்போன படங்கள் பெயரை எழுதவும்.

ஏ.பி.நாகராஜன், காமராஜர், சிவாஜி - மூவர் உள்ள புகைப்படத்தை இங்கு காணலாம்
http://www.sivaji-prabhu.com/Nagaraje.htm


--------------------------------------------
சுவாமிநாதன் எழுதினார்:

> பெண்கள் கூந்தலுக்கு வாசனையா?

> உமாதேவிக்கு வாசனை எண்ணை வாங்கிக் குடுத்திருப்பாரோன்னு
> கங்கா தேவி நினைக்க, கங்கைக்கு Sபெசல் "ம்பூவோன்னு
> உமா தேவி நினைக்க..கோபத்துல ரெண்டு பேருக்கும் பேச்சு வரல..

> நக்கீரர் விசயம் புரியாம பொருள் குற்றம்னு சொல்லி வாங்கி கட்டிக்கிட்டாரு...
==================

கங்காவும் உமாவும் சண்டை போட்டது இருக்கட்டும். முத்துராமனுக்கு இந்த
சந்தேகம் வரக் காரணமாக இருந்த அந்த நடிகை யாரோ ? அந்தக் காலத்துல
பலமுறை கனவில் வந்திருப்பார்களே :-)

---------------------------------------
ஹரிகிருஷ்ணன் எழுதினார்:

> ஏபி நாகராஜன் எழுதினது இருக்கட்டும்ணே. நம்ப வள்ளுவரு ஒண்ணு சொல்றாரு.

>பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி
>வாயெயில் ஊறிய நீர்.

>கன்னீப் பொண்ணு வாயிலுள்ள தேனைப் போலச் சுவைப்பது என்று சோன்பப்டி பாட்டு ஒண்ணு
>பாடுவாங்களே, அது மாதிரி அவ்விடத்து வாயில் ஊறும் எச்சிலுக்கு பாலும் தேனும் கலந்த சுவை
>உண்டாமே, அப்பிடியா?
-------------------------------------------
வாத்ஸ்யாயனர் கூட இதப் பத்தி ஏதோ சொல்லியிருக்காராமே ?
பெரிசுகள் நிறைந்த சபையில் சின்னப்பையனிடம் கேட்டால் என்ன பதில் சொல்வது.. :-)
கம்பர் இந்த விஷயத்தை கையாண்டுள்ளாரா ?

>சொன்னாக்க, கூந்தல் ஆராய்ச்சிக்கு என் பங்கு வரும். ;-)

ஒங்க ஆராய்ச்சியை எடுத்து வுடுங்கண்ணா.

இந்த உலகக்கோப்பை கால்பந்தாட்ட (சில) வீரர்களின் கூந்தல்(?) ஸ்டைலை அந்தக் காலத்திலேயே
ஹேமநாத பாகவதரின் அடிப்பொடிகள் வைத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.
(சில மாதங்கள் முன் ஜேபியவர்கள் அந்தக் கால கூந்தல் ஸ்டைலைப் பற்றி எழுதியது
ஞாபகம் வருகிறது)
=======================================

-------------------------------------------
சாபு எழுதினார்:

> நீங்க பெண்களின் கூந்தலைப் பற்றித்தான் கேட்டீங்க, பெண்டாட்டியின் கூந்தலைப்
> பற்றி கேட்கவில்லையல்லவா ?
> பெண்களின் கூந்தல் மணக்கும், பெண்டாட்டியின் கூந்தல் மணக்காது.

அமீரகம் / துபாய்ல இப்படியெல்லாம் நுகர அனுமதி உண்டா என்ன ? அதுக்கெல்லாம்
பல்லவன் மாதிரி பஸ்சுல தான் வசதி அதிகம்னு நினைக்கிறேன்.


அன்புடன்
சுப்ரமணியன்


(hope this message is readable and not garbled)







Get Your Private, Free E-mail from Indiatimes at http://email.indiatimes.com

Buy Music, Video, CD-ROM, Audio-Books and Music Accessories from http://www.planetm.co.in