From jaybee@... Tue Jul 23 06:59:56 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 23 Jul 2002 13:59:53 -0000
Received: (qmail 94319 invoked from network); 23 Jul 2002 13:59:52 -0000
Received: from unknown (66.218.66.218) by m2.grp.scd.yahoo.com with QMQP; 23 Jul 2002 13:59:52 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 23 Jul 2002 13:59:52 -0000
Received: from user (sp-103-47.tm.net.my [210.186.103.47]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0GZP008KLG1XON@...> for agathiyar@yahoogroups.com; Tue, 23 Jul 2002 21:56:24 +0800 (SGT)
Date: Tue, 23 Jul 2002 21:55:20 +0800
Subject: Saandiyyan on novel writing -#1
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020723215520.006e541c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 19176


அன்பர்களே,

நாவல்கள் எழுதுவது எப்படி என்பதனைப் பற்றி சாண்டில்யன்
அவர்கள் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். பழைய கட்டுரை. அதில்
அவருக்கே உரிய நோட்டத்தில் அவர் நாவலெழுதும் முறையைப் பற்றிக்
கூறுகிறார். இக்கட்டுரையில் அவர் சரித்திர நாவல்களுக்கு அழுத்தம்
கொடுத்திருக்கிறார். இதனை முழுமையாகப் படிக்கும்போது அதில் உள்ள
ஓரிரு கருத்துக்கள் உதைப்பதாகத் தோன்றும். இருப்பினும் நல்லதொரு
கட்டுரை. மற்றவர்கள் சொல்லாத விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்.
அவர் சொன்னவற்றில் ஏதும் வெட்டியோ ஒட்டியோ சொல்லலாம்.

அன்புடன்

ஜெயபாரதி

சாண்டில்யன் - 'நாவல் எழுதுவது எப்படி?'#1

கேள்வி சுலபமானது; விடை கடினமானது.இருப்பினும்
முடிந்தவரை சொல்லப்பார்க்கிறேன். 'முடிந்தவரை' என்று சொல்வதற்கும்
காரணம் இருக்கிறது.
தமிழில் வந்த நாவல்களில் பெரும் நாவல்களை எழுதிய பின்பும்
என் மனத்தில் பூர்த்தியில்லை. எந்தக் கலையும் - எழுத்தோ, ஓவியமோ,
சிற்பமோ எதுவாயிருந்தாலும் - ஒரு லட்சியத்தை நோக்கி ஓடுகிறது.
அந்த லட்சியம் எப்போதும் எட்டவே நிற்பதால், கலைக்குப் பூர்த்தி
என்பது கிடையாது.
"எதிலும் பூர்த்தியை, மனச்சந்துஷ்டியை அடைபவன், ஒன்று
முட்டாளாக இருக்கவேண்டும் அல்லது அகம்பாவியாக இருக்கவேண்டும்",
என்று இலக்கிய அறிஞர்கள் கூறுகிறார்கள். சிறந்த இலக்கியத்தை
சிருஷ்டிக்க நினைப்பவனுக்கு அடக்கம் வேண்டும், அகம்பாவம் கூடாது.
இதனால்தான் உலகத்தின் மாபெரிய இலக்கியங்களை இயற்றியவர்கள்
ஆரம்பத்தில் அவையடக்கம் சொல்லியிருக்கிறார்கள்.
ஆதி காவியமான ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர்,
"இதனை வால்மீகி எழுதினார் என்று அசட்டை செய்யாதீர்கள்.
நாரத பகவான் சொன்ன கதை இது", என்று கூறுகிறார். பிரம்மாவின்
கட்டளையால் ஏற்பட்டதாகவும் சொல்கிறார்.
"பூனை பாற்கடலை நக்கிக் குடித்துவிடலாமென்று அதை
நெருங்குவதுபோல் நானும் 'காசில் கொற்றத்து இராமன் கதையை
ஆசையால் சொல்லமுயல்கிறேன்", என்று கம்பரும் சொல்கிறார்.
"உயர இருக்கும் பழத்தைப் பறிப்பதற்குக் குள்ளன் எழும்பிக்
குதிப்பதைப்போல் நானும் இக்காவியத்தை எழுதமுயல்கிறேன்.
குள்ளனைப் பார்த்து நகைப்பது போல என்னைப் பார்த்தும் உலகம்
நகைக்கும். இருப்பினும் சொல்கிறேன். " என்று ரகுவம்சக்
காவியத்தைப் படைத்த காளிதாசன் கூறுகிறான்.
இந்த மகான்களை எண்ணிப்பார்த்தால், காலத்தால் அழிக்க
முடியாத காவியங்களைப் பற்றிச் சற்று யோசித்துப்பார்த்தால் ,
இப்பொழுது வரும் எழுத்துக்களை எடை போடலாம். ஆனால் என்னுடைய
நோக்கம் எடை போடுவதல்ல; எழுதும் முறையைச் சொல்வது. அதுவும்
நாவல் எழுதும் முறையைச் சொல்வது.

>......................#2