From jaybee@... Tue Jul 23 07:52:27 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 23 Jul 2002 14:52:27 -0000
Received: (qmail 36774 invoked from network); 23 Jul 2002 14:52:27 -0000
Received: from unknown (66.218.66.217) by m7.grp.scd.yahoo.com with QMQP; 23 Jul 2002 14:52:27 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 23 Jul 2002 14:52:22 -0000
Received: from user (sp-103-107.tm.net.my [210.186.103.107]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0GZP001KZIN7MQ@...> for agathiyar@yahoogroups.com; Tue, 23 Jul 2002 22:52:21 +0800 (SGT)
Date: Tue, 23 Jul 2002 22:51:18 +0800
Subject: Sandilyan on novel writing -#2
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020723225118.0070cd48@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 19184


சாண்டில்யனின் நாவல் எழுதுவது எப்படி -#2

நல்ல எழுத்துக்கு வேண்டியது - முதலில் உணர்ச்சி வேகம்.
இரண்டாவது ஆழ்ந்த படிப்பு.
வால்மீகி ராமாயணம் உணர்ச்சியில் பிறந்தது. ஆணும்
பெண்ணுமான இரண்டு கிரவுஞ்சப் பறவைகள்உட்கார்ந்து
குலாவிக்கொண்டிருக்கையில் வேடன் ஒருவன் ஆண்பறவையை
அடித்து வீழ்த்தினான். பெண் பறவை அலறிற்று. அப்பொழுது
தமஸா நதிக்கு நீராடச் சென்று மரவுரியைச் சீடனிடமிருந்து
வாங்கிக்கொண்ட வால்மீகி முனிவர், அந்த வேடனைக் கடிந்து
கூறினார். அந்த உணர்ச்சிக் கூச்சல், சோகத்தின் கூக்குரல்,
அதுவரை வேதமே காணாத கவிதையாக வடிந்தது. "சோகந்தான்
சுலோகமாகியது" என்று வால்மீகியே கூறுவார். "சோக:
ச்லோகத்வமாகத:" என்பது அவர் வாக்கியம். அதிலிருந்து விளைந்த
காவியம் காலத்தால் அழியாமல் இன்றும்இருக்கிறது.
அந்த காவியத்தில் வேதத்தின் உட்பொருளையெல்லாம்
வைத்தார் ஆதிகவி. (மாட்டுக்கால் சூப் அல்ல).
ஆகவே எழுத முற்படுவோர், தாங்கள் எழுதவேண்டியது
அவசியந்தானா? அதற்கான வேட்கை, உணர்ச்சி வேகம் இயற்கையாக
இருக்கின்றனவா என்பதை யோசித்துக்கொள்ளவேண்டும்.
இரண்டாவதாக, தங்களுக்கு ஆழ்ந்த படிப்பு இருக்கிறதா
என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இல்லையென்று தோன்றும்
பட்சத்தில், படிக்கவும் முயலவேண்டும்.
கற்பனை தானாக ஊறிவிடுமென்பது வீண் பிரமை.
"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி, மாந்தர்க்குக் கற்றனைத்து
ஊறும் கல்வி", என்று தெய்வத் திருவள்ளுவரே கூறியிருக்கிறார்.
இப்படி உணர்ச்சித் திறனும் கல்வித்திறனும் உள்ளவர்கள்
எழுதும் எழுத்து, இலக்கியமாகிறது.. அப்படி எழுதப்படும்
இலக்கியத்திற்குத்தான் பின்னால் இலக்கணம் வகுக்கப்பட்டது.
'தத் உபகத ஸமாஸ் ஸந்தியோகம்' - வால்மீகியின் காவியத்தை
ஸமாஸம், ஸந்தி முதலிய இலக்கண விதிகள் பின்பற்றிச் செல்கின்றன
என்று அந்தக் காவியத்திலேயே கூறப்பட்டிருக்கிறது. இதனால்
இலக்கணப் பிழையுடனோ இலக்கணம் அறியாமலோ நாமும் எழுத
முற்படலாமென்பதல்ல பொருள். மொழியில் ஓரளவு அறிவு இருந்து,
அந்த மொழியில் உண்மையான பற்றும் இருந்து, எழுதவேண்டும் என்ற
உணர்ச்சி வேகமும் இருந்தால், நல்ல கதைகள் தாமாகவே உருவாகும்.
பொதுவாக, இதுவரை எழுத்தைப்பற்றிச் சொன்னது நாவலுக்குப்
பொருந்தும்.
நாவலை இப்படித்தான் எழுதவேண்டும் என்ற நிர்ணயம்
கிடையாது. தனி இலக்கணம் கிடையாது. ஆனால் கதை ஓட ஓட,
இலக்கணமும் கட்டுக்கோப்பும் தாமாகவே அமையும்.
முதலில் எதைப் பற்றி எழுதப்போகிறோம் என்ற தீர்மானம்
வேண்டும்.
நாம் எழுதும் நூலில் கதையைத் தவிர, வேறு எந்தத்
தத்துவங்களைச் சொல்லப்போகிறோம் என்பதையும் எண்ணிப்
பார்க்கவேண்டும்.
'நமது கதையைப் படிப்பதால் மக்களுக்கு(இன்றைய
மக்களுக்கு மட்டுமல்ல; பிற்காலச் சந்ததிகளுக்கு) ஏதாவது பயன்
உண்டா?', என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இந்த எண்ணங்கள் இயற்கையாக ரத்தத்தில் ஊறவேண்டும்.
அப்போது நீங்கள் எழுதாது இருக்கமுடியாது. அப்படி எழுதத்
தொடங்கும்போது நமது முன்னோடிகளின் பெருமையையும் நமது
சிறுமையையும் நினைத்துக்கொண்டால், நல்ல இலக்கியச்சுவையுள்ள
கதைகளைச் சிருஷ்டிக்கலாம்.

சாண்டில்யனின் நாவல் எழுதுவது எப்படி.......#3

அன்புடன்

ஜெயபாரதி