From jaybee@... Tue Jul 23 07:58:21 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 23 Jul 2002 14:58:16 -0000
Received: (qmail 35671 invoked from network); 23 Jul 2002 14:58:16 -0000
Received: from unknown (66.218.66.218) by m12.grp.scd.yahoo.com with QMQP; 23 Jul 2002 14:58:16 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 23 Jul 2002 14:58:16 -0000
Received: from user (sp-103-107.tm.net.my [210.186.103.107]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0GZP0012GIX1R6@...> for agathiyar@yahoogroups.com; Tue, 23 Jul 2002 22:58:15 +0800 (SGT)
Date: Tue, 23 Jul 2002 22:57:13 +0800
Subject: Sandilyan on Novel Writing -#3
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020723225713.0070d06c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 19185


சாண்டில்யனின் 'நாவல் எழுதுவது எப்படி?' -#3

இந்த உபதேசங்களைத் தவிர நாவல் எழுதுவதற்குத்
திட்டமான யோசனைகளைச் சொல்லமுடியுமா, இலக்கணம்
வகுக்க முடியுமா, என்று கேட்டால் ஓரளவு சொல்லலாம்.
இப்பொழுது பெருங்கதைகளை 'நாவல்கள்' என்று
சொல்கிறோம். முற்காலத்தில் இவற்றையே 'இதிகாசங்கள்'
என்றும் 'புராணங்கள்' என்றும் சொன்னார்கள். கவிதையில்
எழுதப்பட்ட நூல்களுக்கு 'பத்யம்' என்றும் வசனநடையில்
எழுதப்பட்டவைகளுக்கு 'கத்யம்' என்றும் பெயர் வைத்தார்கள்.
'காவ்யதர்சம்' என்ற நூலை எழுதிய தண்டி மகாகவி,
பேரிலக்கியங்களுக்கு இலக்கணம் வகுத்திருக்கிறார். அதில்
ஒரு சிறு பகுதியை அப்படியே இதோ கூறுகிறேன்:

"ஸர்க்கபந்தம் அல்லது அத்தியாயங்கள் கொண்ட
நீண்ட நூல், 'மகாகாவியம்' என்று கூறப்படும். அதன் ஆதாரம்,
இதிகாசங்களிலோ, வேறு எவற்றிலோகூறப்பட்ட உண்மைகளாகவோ
இருக்கலாம். அதன் கதாநாயகன் சிறப்பு மிகுந்தவனாகவும்,
பெருந்தன்மையுடையவனாகவும் இருப்பான். அத்தகைய பெருநூலில்,
நகரங்கள், சமுத்திரங்கள், மலைகள், பருவங்கள், சந்திரோதயம்,
சூரியோதயம், நந்தவனங்களிலும் நீர்த்துறைகளிலும் நடக்கும்
கேளிக்கைகள், விழாக்கள், காதல் காட்சிகள், காதலர் பிரிவு,
அவர்கள் திருமணம், மணவறை நிகழ்ச்சிகள், அரசர்கள்,
மந்திரிகள் - இவர்கள் மந்திராலோசனைகள், தூதர்களை அனுப்புதல்,
பயணம், போர்கள் - இவையெல்லாம் ரசத்துடனும் பாவத்துடனும்
விளக்கமாக இடம் பெறவேண்டும். எவ்வவு விதவிதமான வேறுபட்ட
சம்பவங்கள் கதையில் இடம் பெறுகின்றனவோ அத்தனையும்
அந்தக் கதைக்குச் சிறப்பு."
"இத்தகைய நூலில் கதாநாயகன் வீரத்தாலும் குணங்களாலும்
எதிரியை முறியடிப்பது கதைக்கு இயற்கையாகச் சுவையை அளிக்கும்.
தவிர எதிரியாக வருபவனின் பரம்பரை, ஏற்றம், வீரம் - இவற்றைச்
சொல்வது சிறந்தது. இத்தகைய எதிரியை வெல்லும் கதாநாயகன்
அதிகச்சிறப்பைப் பெறுகிறான்...."
மேலே சொன்னது ஒரு சிறு பகுதி. 'காவ்யாதர்சம்'
அலங்கார சாஸ்திரம். அதில் முழுவதிலும் பெருங்கதை
இலக்கணம் கூறப்படுகிறது. ஆனால், இந்தச் சிறு பகுதியில்
நாவல்களுக்கான வழி முழுவதும் காட்டப்பட்டிருக்கிறது என்று
நினைக்கிறேன்.

சாண்டில்யனின் நாவல் எழுதுவது எப்படி?................-#4

அன்புடன்

ஜெயபாரதி

====================================