From jaybee@... Tue Jul 23 08:14:17 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 23 Jul 2002 15:14:17 -0000
Received: (qmail 68371 invoked from network); 23 Jul 2002 15:14:17 -0000
Received: from unknown (66.218.66.218) by m7.grp.scd.yahoo.com with QMQP; 23 Jul 2002 15:14:17 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 23 Jul 2002 15:14:16 -0000
Received: from user (sp-103-107.tm.net.my [210.186.103.107]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0GZP00EIXJJ1ZA@...> for agathiyar@yahoogroups.com; Tue, 23 Jul 2002 23:11:27 +0800 (SGT)
Date: Tue, 23 Jul 2002 23:10:24 +0800
Subject: Saandiyyan on novel writing -#4
In-reply-to: <3.0.3.32.20020723215520.006e541c@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020723231024.00708c0c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 19186
சாண்டில்யனின் 'நாவல் எழுதுவது எப்படி?' -#4
"சிறுகதை எழுதுவது வைரத்துக்குப் பட்டை தீட்டுவது
போன்றது. நாவல் எழுதுவது, பெருங்கட்டடத்தை நிர்மாணிப்பது
போன்றது. என்று 'ஹிந்து' பத்திரிக்கையின் துணையாசிரியரும்
பெரும் மேதையுமான ரகுநாதய்யர் ஒரு சொற்பொழிவில் கூறினார்.
நாவல் எழுதும் வழியை அதைவிடச் சிறப்பாகச் சொல்வது கஷ்டம்.
கட்டடத்தின் அமைப்பு எப்படியிருக்கவெண்டும், எத்தனை
அறைகள் மாடங்கள் கூடங்கள் தூண்கள் இருக்கவேண்டும்;
எத்தனை ஓவியங்கள் சிற்பங்கள் அதற்குச்சிறப்புச்செய்யவேண்டும்;
எந்தெந்த இடங்களில் எந்தெந்த சிற்பங்களும் ஓவியங்களும்
சிற்பங்களும் இருக்கவேண்டும் என்பதை நிர்ணயிப்பது ஸ்தபதியின்
திறமையைப் பொறுத்தது., அவன் கட்டும் கட்டடத்தைப் பொறுத்தது.
கட்டடம் எத்தனை காலம் நிற்கும் என்பது அஸ்திவாரத்தைப்
பொறுத்தது.
நல்ல கதைக்கோப்பும், கதை வேகமும், சொல்லாட்சியுமுள்ள
கதை எத்தனை பெரிதாயிருந்தாலும் மக்கள் அதனைப் படிப்பார்கள்.
இந்த அம்சங்கள் இல்லாத கதை, எத்தனைச் சிறியதாக இருந்தாலும்
மக்களின் மனத்தை ஆட்கொள்ளமுடியாது. மக்களை ஆள்பவன் அரசன்.
மக்கள் மனத்தை ஆள்பவன் எழுத்தாளன். மனத்தை ஆள்பவன்
காலத்தில் நிற்கிறான். அரசை ஆள்பவன் மறைந்துவிடுகிறான்.
இந்த உண்மையைக் கண்கூடாகப் பார்க்கிறோம். நினைப்பில்
இருக்கும் மன்னர்கள்கூட சிறந்த எழுதாளர்களாலேயே உயிருடன்
இருந்து வருகிறார்கள். ஷேக்ஸ்பியரால் சில அரசர்கள், மில்டனால்
சில அரசர்கள், ஸ்காட், டூமாஸ் முதலியவர்களால் மற்றும் சில
அரசர்கள், மக்கள் மனத்தில் நிற்கிறார்கள். அவர்கள் ஜீவிப்பதற்குக்
காரணம் கவிஞர்களும் நாவலாசிரியர்களும்தான்.
நாவல்கள் இருவகைப்படுவதாக ஒரு கருத்தை, விஷயம்
தெரியாதவர்கள் கூறுவார்கள். சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள்
என்று இருவகை இருப்பதாகக் கூறுகிறார்கள். இது முற்றும் தவறான
கருத்து. பழைய சமுதாயம் இன்றைய சரித்திரம். இன்றைய சமுதாயம்
இன்னும் நூறு வருஷங்கள் கழித்து சரித்திரம்.. இந்தக் கதைகளில்
உடைகள் மாறலாம், கருத்துக்கள் மாறலாம், ஆட்சிமுறைகள்
மாறலாம். ஆனால் மனிதர்களின் அடிப்படையான உணர்ச்சிகள்
மாறுவதில்லை. இதை உணர்ந்துகொண்டால்சரித்திர நாவலும்
சமூகநாவலும் ஒன்றுதான் என்ற உண்மையைப்புரிந்துகொள்ளலாம்.
"சரித்திரக்கதை, ராஜாராணிக் கதை.அதில் மக்களின்
பிரச்னைகளைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது?" என்று
சமூகக் கதை அன்பர் ஒருவர் ஒரு கூட்டத்தில் சொன்னார்.
'பிரச்னை' என்ற பதத்தில் 'ர'வை நன்றாக அழுத்தி 'ற'வாக அடித்து,
இடையினத்தை வல்லினமாக உச்சரித்துச் சரித்திரக்கதைகளில்
தமக்கிருந்த அலட்சியத்தைக் காட்டினார். இதைப் பற்றி
அனுதாபப்படுவதைத் தவிரக்கோபப்படுவதில் ஏதுமில்லை.
ஏனென்றால் நல்ல சரித்திரக் கதைகளைஅவர் படித்திருந்தால்,
அவற்றில் மக்களின் வாழ்க்கை நிலை, வர்த்தக முறை,
காதல் களியாட்டங்கள், இன்னும் பலப்பல விஷயங்கள்
சொல்லப்படுகின்றதைப் பார்த்திருப்பார். சரித்திரக்கதைகள்
இலக்கியமல்லவென்றால், இதிகாசங்கள் இலக்கியமாகா.
ஏனென்றால் ராமன் சரித்திரத்தை வால்மீகி எழுதினார்.
'ரகுவர சரிதம் முனிப்ரணீதம்' என்று சொல்லப்படுகிறது.
பிறகு வியாசரோ, சுகபகவானோ, மில்டனோ, ஷேக்ஸ்பியரோ,
டால்ஸ்டாயோ யாருமே இலக்கிய கர்த்தாக்களாக இருக்கமுடியாது.