From jaybee@... Tue Jul 23 08:24:46 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 23 Jul 2002 15:24:46 -0000
Received: (qmail 69897 invoked from network); 23 Jul 2002 15:24:45 -0000
Received: from unknown (66.218.66.218) by m3.grp.scd.yahoo.com with QMQP; 23 Jul 2002 15:24:45 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 23 Jul 2002 15:24:45 -0000
Received: from user (sp-103-107.tm.net.my [210.186.103.107]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0GZP000FFK1OUA@...> for agathiyar@yahoogroups.com; Tue, 23 Jul 2002 23:22:38 +0800 (SGT)
Date: Tue, 23 Jul 2002 23:21:35 +0800
Subject: Re: [agathiyar] Saandiyyan on novel writing -#5
In-reply-to: <3.0.3.32.20020723215520.006e541c@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020723232135.00709820@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 19188


சாண்டில்யனின் 'நாவல் எழுதுவது எப்படி?' -#5

ஆகவே நல்ல நாவல்களை எழுத ஆசைப்படுகிறவன்
நல்ல நூல்களைப் படிக்கவேண்டும். அவற்றைப் பின்பற்றுவதும்
தவறல்ல. பின்பற்றுவதென்றால் அந்தக் கதைகளை நம் கதைகளாக
எழுதுவதல்ல. நமது கற்பனையில் விளையும் கருத்துக்களுக்கு
ஓரளவு மெருகு கொடுக்க அவற்றை உபயோகிக்கலாம். எனது
சரித்திரக் கதைகள் சிலவற்றில் 'வால்மீகி இப்படிச்சொல்கிறார்.
காளிதாசர் இப்படிச்சொல்கிறார்' என்று அவர்கள் உவமைகளை
எடுத்துக்காட்டியிருக்கிறேன். அதனால் கதையின் சிறப்பு
அதிகமாகிறதேயொழிய, குறைவதில்லை. நல்ல உவமைகள்
உங்களுக்கே தோன்றவேண்டும். கற்பனைச்செறிவும், இயற்கையையும்
வாழ்க்கையையும் ஊன்றிப்பார்க்கும் திறனும் இருந்தால், உவமைகள்
உங்கள் பேனாவின் மையில் தானாகப் பிரவாகமாகிவிடும்.
சரித்திரக் கதைகளை எழுதுவதற்கு நல்ல சரித்திர
ஆராய்ச்சி வேண்டும். சரித்திரப் புத்தகங்களைப் படிப்பதில், எந்த
இடத்தில் சரித்திரம் நல்ல கதைகளுக்குஇடம் கொடுக்கிறது என்று
பார்க்கவேண்டும். அந்த இடத்தைப் பற்றி அந்தப் பகுதியின் காலத்தைப்
பற்றி, அந்தக் கதையில் வாழ்ந்த மக்களின் நடை உடை பாவனைகள்,
போர்முறைகள் ஆயுதங்கள் - இவற்றைப் பற்றி இருக்கும் நூல்களை
ஆராயவேண்டும். அந்த ஆராய்ச்சியை உங்கள் கதையில், கற்பனையில்,
சொல்வளத்தில் குழைத்து மக்களுக்கு அளிக்கவேண்டும். தவிர
வாழ்க்கையின் தத்துவங்களையும் நிரம்பச் சொல்லவேண்டும்.
இதுதான் நல்ல சரித்திரக்கதையை எழுதும் வழி.
தற்காலச் சரித்திரக்கதையான, அதாவது, 'சமூகக்கதை'
என்று அழைக்கப்படும் நமது கதையை எழுதுவதற்கும், மக்கள்
நிலையை ஆராயவேண்டும். தவிர உண்மையைச் சொல்லும் திறனும்
வேண்டும். சரித்திரக்கதைகளில் தாராளமாக உண்மைகளைச்
சொல்லலாம். அந்தக் காலத்து அரசர்களோ மக்களோ நம்முடன்
சண்டைக்கு வரமாட்டார்கள். இப்பொழுது உள்ளவர்களைப் பற்றி
எழுதும்போது, அவர்கள் நஷ்டவழக்குத் தொடராதபடிக்கு
எழுதவேண்டும். அதற்காக எதையும் மறைக்காமலும், துணிவைக்
கைவிடாமலும், எதிலும் சிக்கிகொள்ளாமலும் எழுதவேண்டும்.
நாம் எழுதுவது சமூகத்துக்கு நன்மை பயக்குமா என்பதையும்
சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நாவல்கள் எதுவாயிருந்தாலும் அதில் நவரசங்கள் இருக்க
வேண்டும். முக்கியமாகக் காதல் ரசம் இருக்கவேண்டும். அலங்கார
சாஸ்திரம் காதல் ரசத்தை 'ரஸராஜா' என்று கூறுகிறது. ராமாயணத்தின்
ரசங்களைக் கூறத்தொடங்கிய ஆதிசங்கரர், "சிருங்கார க்ஷிதீநந்தினீ
விஹரனே" என்று சிருங்கார ரசத்தையே ஆரம்பத்தில் கூறுகிறார்.
இதை எழுதுவதில் சிறிதும் கூச்சப்படாதீர்கள். முற்றுந்துறந்த
முனிவர்களாக நடிக்காதீர்கள். ஆனால் அளவுடன் ரசத்தை எழுதுங்கள்.
அதிரசம் விரசமாகும். அப்படி ஆகாதிருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த ரசத்துக்காக மற்ற ரசங்களைக் குறைக்காதீர்கள். அளவோடு,
பழைய இலக்கிய மரபுக்கு மாறாமல் எழுதுங்கள்.
இப்படி எழுதப்படும் நாவல், இலக்கியமாகும். காலத்தில்
நிற்கும். உங்கள் இதயப்பிரவாகத்தைக் கதையாக வடியுங்கள்.
சர்க்கார் பரிசுகளுக்காகவும், பணக்காரர்கள், பதவியிலிருப்பவர்கள்
என்ற காரணத்தாலேயே இலக்கிய கர்த்தாக்களாகிவிடுகிறவர்களின்
பாராட்டுதல்களுக்கும் கதை எழுதாதீர்கள். பணக்காரர்களிலோ
பதவியிலிருப்பவர்களிலோ சிறந்த எழுத்தாளர்கள் இல்லையென்று
சொல்லவல்லை. சிலர் இருக்கிறார்கள். ஆனால் பெருவாரியாகப்
பார்த்தால், பணமும் பதவியும் இலக்கிய கர்த்தாக்களைச்
சிருஷ்டிக்கின்றன. அவர்களைக் கண்டு ஏமாறாதீர்கள்.
அவர்களுக்காக எழுதாதீர்கள். நாம் பிறந்தநாட்டுக்காக,
நம் மொழிக்காக நமது மக்களுக்காக, எல்லாவற்றுக்கும்மேலாக
உங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்காக நாவல்களை எழுதுங்கள்.
காலத்தில் நிற்கும் அவை.
இன்னும் நிரம்ப எழுதலாம். இடம் போதாது. எழுதினால்
இதுவே ஒரு நாவலாகி விடும்.

சாண்டில்யனின் 'நாவல் எழுதுவது எப்படி?'

அன்புடன்

ஜெயபாரதி

======================