From jayandgl@... Tue Jul 23 08:44:44 2002
Return-Path:
X-Sender: jayandgl@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 23 Jul 2002 15:44:44 -0000
Received: (qmail 90435 invoked from network); 23 Jul 2002 15:44:43 -0000
Received: from unknown (66.218.66.216) by m4.grp.scd.yahoo.com with QMQP; 23 Jul 2002 15:44:43 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 23 Jul 2002 15:44:42 -0000
Received: (qmail 30871 invoked by uid 7002); 23 Jul 2002 21:13:56 +0530
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by webmail2.maa.sify.net with SMTP; 23 Jul 2002 21:13:56 +0530
Received: (qmail 30811 invoked from 202.9.169.176 by webmail2); 23 Jul 2002 21:13:54 +0530
Received: from unknown (HELO sify.com) (202.9.169.176) by webmail2.maa.sify.net with SMTP; 23 Jul 2002 21:13:54 +0530
Message-ID: <3D3D7717.3BB7826D@...>
Date: Tue, 23 Jul 2002 21:02:39 +0530
X-Mailer: Mozilla 4.72 [en] (Win98; I)
X-Accept-Language: THAMIL,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Saandiyyan on novel writing -#5
References: <3.0.3.32.20020723232135.00709820@...>
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
From: Njaanavettiyaan
X-Yahoo-Group-Post: member; u=118772836
X-Yahoo-Profile: njaanavettiyaan
X-Yahoo-Message-Num: 19189

அன்பு அண்ணா திரு.ஜேபி அவர்கட்கு,
வணக்கம்.
ராமபாணம் அதிவேகமாக வந்துவிட்டது.
அதிலுள்ள கருத்துக்களில் என்னை வெகுவாகக் கவர்ந்தவை:
அதி முக்கியமாகப் பணிவு தேவை.
ஆழமான அறிவு(இல்லையெனில் படித்தபின்பு, அறிவடைந்தபின்) எழுது.
தேவையான இடங்களீல் மேற்கோள் காட்டு.
எதிலும் அளவை மீறாதே.
போலிவேடமிடாதே.
நம் இளைய தலைமுறைக்கு நாம் சொல்ல வந்த கருத்து என்ன?......
நினைவூட்டலுக்கு நன்றி,

தவனமாய்,
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)
http://www.geocities.com/enjayan2000/index.htm


JayBee wrote:
>
>
> சாண்டில்யனின் 'நாவல் எழுதுவது எப்படி?' -#5
>
> ஆகவே நல்ல நாவல்களை எழுத ஆசைப்படுகிறவன்
> நல்ல நூல்களைப் படிக்கவேண்டும். அவற்றைப் பின்பற்றுவதும்
> தவறல்ல. பின்பற்றுவதென்றால் அந்தக் கதைகளை நம் கதைகளாக
> எழுதுவதல்ல. நமது கற்பனையில் விளையும் கருத்துக்களுக்கு
> ஓரளவு மெருகு கொடுக்க அவற்றை உபயோகிக்கலாம். எனது
> சரித்திரக் கதைகள் சிலவற்றில் 'வால்மீகி இப்படிச்சொல்கிறார்.
> காளிதாசர் இப்படிச்சொல்கிறார்' என்று அவர்கள் உவமைகளை
> எடுத்துக்காட்டியிருக்கிறேன். அதனால் கதையின் சிறப்பு
> அதிகமாகிறதேயொழிய, குறைவதில்லை. நல்ல உவமைகள்
> உங்களுக்கே தோன்றவேண்டும். கற்பனைச்செறிவும், இயற்கையையும்
> வாழ்க்கையையும் ஊன்றிப்பார்க்கும் திறனும் இருந்தால், உவமைகள்
> உங்கள் பேனாவின் மையில் தானாகப் பிரவாகமாகிவிடும்.
> சரித்திரக் கதைகளை எழுதுவதற்கு நல்ல சரித்திர
> ஆராய்ச்சி வேண்டும். சரித்திரப் புத்தகங்களைப் படிப்பதில், எந்த
> இடத்தில் சரித்திரம் நல்ல கதைகளுக்கு இடம் கொடுக்கிறது என்று
> பார்க்கவேண்டும். அந்த இடத்தைப் பற்றி அந்தப் பகுதியின் காலத்தைப்
> பற்றி, அந்தக் கதையில் வாழ்ந்த மக்களின் நடை உடை பாவனைகள்,
> போர்முறைகள் ஆயுதங்கள் - இவற்றைப் பற்றி இருக்கும் நூல்களை
> ஆராயவேண்டும். அந்த ஆராய்ச்சியை உங்கள் கதையில், கற்பனையில்,
> சொல்வளத்தில் குழைத்து மக்களுக்கு அளிக்கவேண்டும். தவிர
> வாழ்க்கையின் தத்துவங்களையும் நிரம்பச் சொல்லவேண்டும்.
> இதுதான் நல்ல சரித்திரக்கதையை எழுதும் வழி.
> தற்காலச் சரித்திரக்கதையான, அதாவது, 'சமூகக்கதை'
> என்று அழைக்கப்படும் நமது கதையை எழுதுவதற்கும், மக்கள்
> நிலையை ஆராயவேண்டும். தவிர உண்மையைச் சொல்லும் திறனும்
> வேண்டும். சரித்திரக்கதைகளில் தாராளமாக உண்மைகளைச்
> சொல்லலாம். அந்தக் காலத்து அரசர்களோ மக்களோ நம்முடன்
> சண்டைக்கு வரமாட்டார்கள். இப்பொழுது உள்ளவர்களைப் பற்றி
> எழுதும்போது, அவர்கள் நஷ்டவழக்குத் தொடராதபடிக்கு
> எழுதவேண்டும். அதற்காக எதையும் மறைக்காமலும், துணிவைக்
> கைவிடாமலும், எதிலும் சிக்கிகொள்ளாமலும் எழுதவேண்டும்.
> நாம் எழுதுவது சமூகத்துக்கு நன்மை பயக்குமா என்பதையும்
> சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
> நாவல்கள் எதுவாயிருந்தாலும் அதில் நவரசங்கள் இருக்க
> வேண்டும். முக்கியமாகக் காதல் ரசம் இருக்கவேண்டும். அலங்கார
> சாஸ்திரம் காதல் ரசத்தை 'ரஸராஜா' என்று கூறுகிறது. ராமாயணத்தின்
> ரசங்களைக் கூறத்தொடங்கிய ஆதிசங்கரர், "சிருங்கார க்ஷிதீநந்தினீ
> விஹரனே" என்று சிருங்கார ரசத்தையே ஆரம்பத்தில் கூறுகிறார்.
> இதை எழுதுவதில் சிறிதும் கூச்சப்படாதீர்கள். முற்றுந்துறந்த
> முனிவர்களாக நடிக்காதீர்கள். ஆனால் அளவுடன் ரசத்தை எழுதுங்கள்.
> அதிரசம் விரசமாகும். அப்படி ஆகாதிருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
> இந்த ரசத்துக்காக மற்ற ரசங்களைக் குறைக்காதீர்கள். அளவோடு,
> பழைய இலக்கிய மரபுக்கு மாறாமல் எழுதுங்கள்.
> இப்படி எழுதப்படும் நாவல், இலக்கியமாகும். காலத்தில்
> நிற்கும். உங்கள் இதயப்பிரவாகத்தைக் கதையாக வடியுங்கள்.
> சர்க்கார் பரிசுகளுக்காகவும், பணக்காரர்கள், பதவியிலிருப்பவர்கள்
> என்ற காரணத்தாலேயே இலக்கிய கர்த்தாக்களாகிவிடுகிறவர்களின்
> பாராட்டுதல்களுக்கும் கதை எழுதாதீர்கள். பணக்காரர்களிலோ
> பதவியிலிருப்பவர்களிலோ சிறந்த எழுத்தாளர்கள் இல்லையென்று
> சொல்லவல்லை. சிலர் இருக்கிறார்கள். ஆனால் பெருவாரியாகப்
> பார்த்தால், பணமும் பதவியும் இலக்கிய கர்த்தாக்களைச்
> சிருஷ்டிக்கின்றன. அவர்களைக் கண்டு ஏமாறாதீர்கள்.
> அவர்களுக்காக எழுதாதீர்கள். நாம் பிறந்தநாட்டுக்காக,
> நம் மொழிக்காக நமது மக்களுக்காக, எல்லாவற்றுக்கும்மேலாக
> உங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்காக நாவல்களை எழுதுங்கள்.
> காலத்தில் நிற்கும் அவை.
> இன்னும் நிரம்ப எழுதலாம். இடம் போதாது. எழுதினால்
> இதுவே ஒரு நாவலாகி விடும்.
>
> சாண்டில்யனின் 'நாவல் எழுதுவது எப்படி?'
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
> ======================
>
>
>
> ---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> ---------------------------------------------------------------------------------
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/

--